name='description'/> தமிழ்ப் பணி மன்றம்: நன்னூல் விதிகள் (26) உருபுப் புணரியல் - வேற்றுமை உருபுகள், அவற்றின் பயன், சாரியைகள் (நூற்பா.240)

செவ்வாய், மே 04, 2021

நன்னூல் விதிகள் (26) உருபுப் புணரியல் - வேற்றுமை உருபுகள், அவற்றின் பயன், சாரியைகள் (நூற்பா.240)

 

                 

                                         (05)உருபுப் புணரியல்

                                         உருபுகள்

                                  (எட்டு உருபுகள் சாரும் வகை)

 

நூற்பா.240. (வேற்றுமை உருபுகள்=8)

 

ஒருவன், ஒருத்தி, பலர்,  ஒன்று, பல  என

வரு பெயர் ஐந்தொடு பெயர் முதல் இருநான்கு

உருபும் உறழ்தர நற்பதாம் உருபே  (நூற்பா.240)

 

ஒருவன், ஒருத்தி, பலர், ஒன்று பலவென கருதும் ஐந்து பெயரோடும், எழுவாய் முதல் விளி வரையிலான எட்டு வேற்றுமைகளையும் பெருக்க, உருபுகள் எண்ணிக்கை மொத்தம் 40 ஆகும். (நூற்பா.240)

 

ஒருவன் = பாலு, பாலுவை, பாலுவால், பாலுவுக்கு, பாலுவின், பாலுவது, பாலுகண், பாலூ என உருபு வெளிப்பாடு = எட்டு. பற்ர நான்கிற்கும் இவ்வாறு ஒட்டிக் கொள்க ! (நூற்பா.240)

 

 

நூற்பா.241. (வேற்றுமை உருபுகளின் பயன்)

 

பெயர் வழித் தம் பொருள் தர வரும் உருபே (நூற்பா.241)

 

வேற்றுமை உருபுகள் என்பவைத் தம் பொருளைக் கொடுக்கப் பெயருக்குப் பின் வரும் (நூற்பா.241)

 

நம்பி பெற்றான், நம்பியைப் பெற்றான், நம்பியாற் பெற்றான் எனவரும்.

 

 

நூற்பா.242. (வேற்றுமை உருபுகளின் பயன்)

 

ஒற்று உயிர் முதல் ஈற்று உருபுகள் புணர்ச்சியின்

ஒக்கும் மன்  அப்பெயர் வேற்றுமைப் புணர்ப்பே (நூற்பா.242)

                          (05)உருபுப் புணரியல்

                                       சாரியை

 

நூற்பா.243. (சாரியைப் புணர்ச்சி)

 

பதம் முன்   விகுதியும் , பதமும் உருபும்

புணர்வழி ஒன்றும் பலவும் சாரியை

வருதலும் தவிர்தலும்  விகற்பமும் ஆகும். (நூற்பா.243)

 

ஒரு பதத்தின் (=சொல்.நூ.128) முன் விகுதியாவது, அல்லது இன்னொரு பதமாவது, உருபாவது புணருமிடத்து, ஒரு சாரியை அல்லது பல சாரியைகள் தோன்றும். சாரியைகள் வாராதும் இருக்கலாம்.    (நூற்பா.243)

                       

நட +(ந்)த்+த்+அன்+அன் = நடந்தனன் (நூற்பா.243)

 

(விகுதிப் புணர்ச்சியுள் அன்என்னும் ஆண் பால் ஒருமை விகுதிஅன்சாரியை பெற்று வந்தது)

 

நட +(ந்)த்+அன்+ = நடந்தன. (நூற்பா.243)

(விகுதிப் புணர்ச்சியுள்என்னும் பலவின்பால் விகுதி அன்சாரியை பெற்று வந்தது)

 

நட+(ந்)த்+த்=ஆன் = நடந்தான். (நூற்பா.243)

(விகுதிப் புணர்ச்சியுள் ஆன்என்னும் ஆண்பால் விகுதி சாரியை பெறாமல் வந்தது)

 

புளி +அம்+காய் = புளியங்காய் (நூற்பா.243)

(பொருட் புணர்ச்சியுள்அம்என்னும் சாரியை பெற்று வந்தது)

 

புளி+கறி =புளிக்கறி.

(பொருட் புணர்ச்சியுள் சாரியை பெறாமல் வந்தது)

 

+அற்று+= அவற்றை

(உருபுப் புணர்ச்சியுள்அற்றுசாரியை பெற்று வந்தது. “விகுதி)

 

+=ஆவை

(உருபுப் புணர்ச்சியுள் சாரியை  பெறாது வந்தது)

 

+இன்++கு=ஆவினுக்கு

(சாரியை பல வந்தன)

 

                                    (05)உருபுப் புணரியல்

                               பொதுச்சாரியைகள்

 

நூற்பா.244. (பொதுச் சாரியைகள்)

 

 

அன், ஆன், இன், அல், அற்ரு, இற்று, அத்து, அம்

தம், நம், நும், , , , , கு, ,

இன்ன பிறவும் பொதுச் சாரியையே ! (நூற்பா.244)

 

அன்முதல்கர  மெய் ஈறாகச் சொல்லப்பட்ட பதினேழும் இவை போல்வன பிறவும் பொதுச் சாரியை ஆகும். {இச்சாரியைகள் விகுதி, பதம் (சொல்), உருபு என்று மூன்று புணர்ச்சிகளிலும் , தனி மொழிகளிலும் வரும்) (நூற்பா.244)


-------------------------------------------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை

வை.வேதரெத்தினம்,

[Veda70.vvQgmail.com]

ஆட்சியர்,

தமிழ்ப் பணி மன்றம் முகநூல்.

------------------------------------------------------------------------------------------------------------

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன .