(04)மெய் ஈற்றுப் புணரியல்
மெய்
ஈற்றின் முன் மெய்.
நூற்பா.239. (இடைச்சொல், உரிச்சொல் முன் வலி வரல்).
இடை, உரி, வடசொலின் இயம்பிய கொளாதவும்
போலியும் மரூஉவும் பொருந்திய ஆற்றிற்கு
இயையப் புணர்த்தல் யாவர்க்கும் நெறி (நூற்பா.239)
நிலைமொழி இடைச்சொல்லாக வந்து வருமொழி முதலில் வல்லினம் வருகையில் வல்லெழுத்து மிகாமல் இயல்பாகும்.
மடவை மன்ற தடவு நிலைக் கொன்றை.(நூற்பா.239)
(இடைச்சொல் முன் வலி இயல்பாயிற்று)
வண்டின் +
கால் = வண்டின்
கால்
தேரின் +
செலவு = தேரின்
செலவு
யாழின் + புறம் = யாழின் புறம்
[வேற்றுமைப் புணர்ச்சி. வேற்றுமை உருபான “இன்: இடைச்சொல் முன் வலி இயல்பாயது}.(நூற்பா.239)
உயிர் ஈற்று உரிச் சொல் முன் வலி இயல்பாகும்.(நூற்பா.239)
மழ + களிறு = மழ களிறு
உறு + புனல் = உறு புனல்
( உயிர் ஈற்று உரிச்சொல் முன் வல்லெழுத்து வருகையில் மெல்லெழுத்து மிகுந்தது) .(நூற்பா.239)
தட + தோள் = தடந்தோள்
கய + தலை = கயந்தலை
உயிர் ஈற்று வடசொல் முன் வல்லெழுத்து இயல்பாகும்..(நூற்பா.239)
அளி + குலம் = அளிகுலம்
தன + தடம் = தனதடம்
-------------------------------------------------------------------------------------------------------------
ஆக்கம் + இடுகை
வை.வேதரெத்தினம்,
[Veda70.vvQgmail.com]
ஆட்சியர்,
தமிழ்ப் பணி மன்றம்
முகநூல்.
------------------------------------------------------------------------------------------------------------
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன .