(04)மெய் ஈற்றுப் புணரியல்
மெய் ஈற்றின் முன் மெய்.
நூற்பா.237. (வருமொழி முதலெழுத்துத் திரிபடைதல்)
”ன” “ல” முன் “ண” ‘ன” வும், “ண” “ள” முன் “ட” ” ண” வும்
ஆகும் “த” “ந”க்கள் ஆயும் காலே (நூற்பா.237)
நிலைமொழி ஈற்றில் “ன”கரம் நின்று வருமொழி முதலில் ”த”கரம்
வந்தால் அல்வழிப் புணர்ச்சியில் ”த”கரம் “ற”கரமாகத் திரியும். (பக்.189)
(நூற்பா.237)
பொன் + தீது
= பொன்றீது (பக்.183)
தென் + திறம்
= தென்றிறம்.
நிலைமொழி ஈற்றில் “ல”கரம் நின்று வருமொழி முதலில் ”த”கரம்
வந்தால் அல்வழிப் புணர்ச்சியில் ”ல”கரம், ”த”கரம் இரண்டும்
“ற”கரமாகத் திரியும். (பக்.189) (நூற்பா.237)
கல் + தீது
= கற்றீது (பக்.183)
சொல் + தமிழ்
= சொற்றமிழ்
நிலைமொழி ஈற்றில் “ன”கரம் நின்று வருமொழி முதலில் ”ந”கரம்
வந்தால் அல்வழிப் புணர்ச்சியில் ”ந”கரம் “ன”கரமாகத் திரியும். (பக்.189)
(நூற்பா.237)
பொன் + நன்று = பொன்னன்று (பக்.189)
தேன் + நன்று
= தேன்னன்று
நிலைமொழி ஈற்றில் “ல”கரம் நின்று வருமொழி முதலில் ”ந”கரம்
வந்தால் அல்வழிப் புணர்ச்சியில் ”ல”கரம் ”ந”கரம் இரண்டும்
“ன”கரமாகத் திரியும். (பக்.189) (நூற்பா.237)
கல் + நன்று
= கன்னன்று (பக்.189)
கல் + நெய்
= கன்னெய்
நிலைமொழி ஈற்றில் ”ண”கரம் நின்று வருமொழி முதலில் ”த”கரம்
வந்தால் அல்வழிப் புணர்ச்சியில் “த”கரம் ‘ட” கரமாகத் திரியும். (பக்.189)
(நூற்பா.237)
மண் + தீது
= மண்டீது (190)
கண் + தீது
= கண்டீது
நிலைமொழி ஈற்றில் ”ள”கரம் நின்று வருமொழி முதலில் ”த”கரம்
வந்தால் அல்வழிப் புணர்ச்சியில்”ள”கரம் ”த”கரம் இரண்டும்
“ட”கரமாகத் திரியும்.(பக்.189) (நூற்பா.237)
முள் + தீது
= முட்டீது (பக்.190)
தேள் + தீது
= தேட்டீது
நிலைமொழி ஈற்றில் ”ண”கரம் நின்று வருமொழி முதலில் ”ந”கரம்
வந்தால் அல்வழிப் புணர்ச்சியில்”ந”கரம் “ண”கரமாகத் திரியும். (பக்.189)
(நூற்பா.237)
மண் + நன்று
= மண்ணன்று (பக்.190)
விண் + நமதே
= விண்ணமதே
நிலைமொழி ஈற்றில் ”ள”கரம் நின்று வருமொழி முதலில் ”ந”கரம்
வந்தால் அல்வழிப் புணர்ச்சியில் “ள”கரம் ”ந”கரம் இரண்டும்
“ண”கரமாகத் திரியும். (பக்.189) (நூற்பா.237)
முள் + நன்று
= முண்ணன்று (பக்.190)
கள் + நன்று
= கண்ணன்று
நிலைமொழி ஈற்றில் ”ன”கரம் நின்று வருமொழி முதலில் ”த”கரம்
வந்தால் வேற்றுமைப் புணர்ச்சியில் “ன”கரம் ”த”கரம் இரண்டும்
“ற”கரமாகத் திரியும். (பக்.190) (நூற்பா.237)
பொன் + தீமை
= பொற்றீமை (பக்.190)
தென் + துருவம் = தென்றுருவம்
நிலைமொழி ஈற்றில் ”ல”கரம் நின்று வருமொழி முதலில் ”த”கரம்
வந்தால் வேற்றுமைப் புணர்ச்சியில் ”ல”கரம் “த”கரம் இரண்டும் “
ற”கரமாகத் திரியும். (பக்.190) (நூற்பா.237)
கல் + தீமை
= கற்றீமை (பக்.190)
பள் = தெளிவு
= பற்றெளிவு.
நிலைமொழி ஈற்றில் ”ன”கரம் நின்று வருமொழி முதலில் ”ந”கரம்
வந்தால் வேற்றுமைப் புணர்ச்சியில் ”ந”கரம் “ன”கரமாகத் திரியும். (
பக்.190) (நூற்பா.237)
பொன் + நன்மை
= பொன்னன்மை (பக்.190)
கான் + நன்று
= கான்னன்று
நிலைமொழி ஈற்றில் ”ன”கரம் நின்று வருமொழி முதலில் ”ந”கரம்
வந்தால் வேற்றுமைப் புணர்ச்சியில் ”ந”கரம் “ன”கரமாகத் திரியும். (
பக்.190) (நூற்பா.237)
கல் + நன்மை
= கன்னன்மை (பக்.190)
தன் + நிழல்
= தன்னிழல்
நிலைமொழி ஈற்றில் ”ண”கரம் நின்று வருமொழி முதலில் ”த”கரம்
வந்தால் வேற்றுமைப் புணர்ச்சியில்”ண”கரம் ”த”கரம் இரண்டும்
“ட”கரமாகத் திரியும். (பக்.190) (நூற்பா.237)
மண் + தீமை
= மட்டீமை (பக்.190)
தூண் + தேர்வு
= தூட்டேர்வு
நிலைமொழி ஈற்றில் ”ள”கரம் நின்று வருமொழி முதலில் ”த”கரம்
வந்தால் வேற்றுமைப் புணர்ச்சியில்”ள”கரம் ”த”கரம் இரண்டும் “
ட”கரமாகத் திரியும். (பக்.190) (நூற்பா.237)
முள் + தீமை
= முட்டீமை (பக்.190)
தேள் = தீமை
= தேட்டீமை.
நிலைமொழி ஈற்றில் ”ண”கரம் நின்று வருமொழி முதலில் ”ந”கரம்
வந்தால் வேற்றுமைப் புணர்ச்சியில்”ந”கரம் “ண”கரமாகத் திரியும். (
பக்.190) (நூற்பா.237)
மண் + நன்மை
= மண்ணன்மை (பக்.190)
நிலைமொழி ஈற்றில் ”ள”கரம் நின்று வருமொழி முதலில் ”ந”கரம்
வந்தால் வேற்றுமைப் புணர்ச்சியில்”ந”கரம் “ண”கரமாகத் திரியும்.
(பக்.190) (நூற்பா.237)
முள் + நன்மை
= முண்ணன்மை (பக்.190)
கள் + நன்மை
= கண்ணன்மை.
ஆக்கம் + இடுகை
வை.வேதரெத்தினம்,
[Veda70.vvQgmail.com]
ஆட்சியர்,
தமிழ்ப் பணி மன்றம்
முகநூல்.
------------------------------------------------------------------------------------------------------------
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன .