name='description'/> தமிழ்ப் பணி மன்றம்: நன்னூல் விதிகள் (20) பொதுப் புணர்ச்சி - வினாப் பெயர், விளிப்பெயர், முன் வல்லினம் (நூற்பா.160,)

செவ்வாய், மே 04, 2021

நன்னூல் விதிகள் (20) பொதுப் புணர்ச்சி - வினாப் பெயர், விளிப்பெயர், முன் வல்லினம் (நூற்பா.160,)

 

                            பொதுப்புணர்ச்சி

 

நூற்பா.160 (வினாப் பெயர், விளிப் பெயர் முன் வல்லினம்) (பக்.127

 

ஈற்றுயாவினாவிளிப் பெயர்முன் வலி இயல்பே. (நூற்பா.160)

 

, , ஓ என்னும் மூன்று ஈற்று வினா முன் வரும் வலி இயல்பாகும் (பக்.127) (நூற்பா.160)

 

சாத்தனா + கொண்டான் = சாத்தனா கொண்டான்.

சாத்தனே + கொண்டான் = சாத்தனே கொண்டான்.

சாத்தனோ + கொண்டான் = சாத்தனோ கொண்டான்.

 

யாஎன்னும் வினா முன் வரும் வல்லெழுத்து இயல்பாகும் (பக்.127)

 

யா + கொண்டான் = யா கொண்டான். (நூற்பா.160)

 

உயிர் ஈறும், மெய் ஈறுமாகிய விளிப் பெயர்கள் முன் வரும் வல்லெழுத்து  இயல்பாகும் (பக்.127)

 

நம்பி + கொள் = நம்பி கொள்(நூற்பா.160)

விடலை + கொள் = விடலை கொள்.

கிள்ளாய் + கொள் = கிள்ளாய் கொள்.

தாய் + கொள் = தாய் கொள்.


------------------------------------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை,


வை.வேதரெத்தினம்

[veda70.vv@gmail.com]

ஆட்சியர்,

தமிழ்ப் பணி மன்றம் முகநூல்.

 -------------------------------------------------------------------------------------------------------

                         

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன .