புதுச்சொல்புனைவோம் !
உருளி = CYCLE
------------------------------------------------------------------------------------------
மேலை நாட்டினரால் கண்டுபிடிக்கப் பெற்ற
“சைக்கிள்” வண்டிக்கு இரண்டு
சக்கரங்கள் உடைய வண்டி என்ற கருத்தில் “பை-சைக்கிள்” என்று
பெயரிடப்பட்டது. காலப் போக்கில் “பை-சைக்கிள்” மறைந்து “சைக்கிள்” என்ற சொல்
நிலைபெற்று விட்டது !
“பை-சைக்கிள்” என்பதை தமிழில்
மொழிபெயர்த்த வடமொழி ஆர்வலர்கள் அதை ”துவிச்சக்கர வண்டி” என்றனர். பின்னாளில்
அது “இரு சக்கர வண்டி” ஆயிற்று. வேறு சில
தமிழறிஞர்கள் அதை “மிதி வண்டி” என்று அழைக்கலாயினர்
!
தனித்தமிழில் ஈடுபாடு கொண்ட அறிஞர்கள்
அதை “ஈருருளி” என்று மொழியாக்கம்
செய்தனர். இரு + உருளி = ஈருருளி என்றாகும். ஈருருளி என்றால் இரண்டு உருளிகள்
(சக்கரங்கள்) உடைய வண்டி என்று பொருள் !
“பை-சைக்கிள்” என்ற சொல் சுருங்கி “சைக்கிள்” ஆகிவிட்டது. பேச்சு வழக்கிலும், எழுத்து வழக்கிலும் “சைக்கிள்” என்ற சொல்லே நிலை பெற்றுவிட்டது. எனவே நாமும் ”ஈருருளி”யைக் கைவிட்டு “உருளி” என்றே உரைப்போமே !
சரி ! “உருளி” என்ற சொல் பொருத்தம்தானா ? ஆம் எனில் எப்படி ? “உல்” என்னும் வேர்ச்சொல் “வளைதல்” கருத்தை உணர்த்தும். “உல் என்னும் வேரினின்று கிளைத்து, நீண்டு, திரிபடைந்து பல்வேறு சொற்கள் தமிழில் புழங்கி வருகின்றன. அவற்றுள் ஒன்று தான் “உருளி”. எப்படி ? உல் > உர் > உருள் > உருளி = (வளைதற் கருத்தை உணர்த்தும்) வட்ட வடிவமான ஆழி, அதாவது சக்கரம் என்று பொருள் !
“சைக்கிள்” என்னும் ஆங்கிலச் சொல்லுக்கு மிகச் சரியான மொழியாக்கம் “உருளி” என்பதே ! ஆகையால் “சைக்கிள்” என்பதை இனி “உருளி” என்றே சொல்வோம். “உருளி” யின் உறுப்புகள் பெயரெல்லாம் ஆங்கிலத்தில் இருக்கிறதே ! அவற்றையும் தமிழில் மொழியாக்கம் செய்ய வேண்டாமா ? செய்திருக்கிறோம் ! பாருங்களேன் !!
=================================================
CYCLE |
= உருளி |
CYCLE - FRAME |
= பழுவம் (பழு > பழுவம்) |
CYCLE - FORK |
= கவைக்கால் |
CYCLE - WHEEL |
= ஆழி |
CYCLE - RIM |
= வட்டகை |
CYCLE - WHEEL SPOKE |
= ஆரை (ஆரக்கம்பி) |
CYCLE - WHEEL HUB |
= குடம் (ஒ.நோ: வண்டிக்குடம்) |
CYCLE - HUB PLATE |
= குடமூடி |
CYCLE- - WHEEL AXLE |
= இருசு |
CYCLE - AXLE CONE |
= குவிசுரை |
CYCLE - TYRE |
= தூம்புறை (தூம்பு + உறை) |
CYCLE - CHAIN |
= சங்கிலி |
CYCLE- PEDAL |
= மிதியடி |
CYCLE - CRANK WHEEL |
= ஏராழி (ஏர் + ஆழி) |
CYCLE - CRANK SHAFT |
= ஏர்க்கால் (ஏர்=எழுதல்) |
CYCLE - FREEWHEEL |
= முள்ளாழி |
CYCLE - CARRIER |
= சுமைதாங்கி |
CYCLE - MUD-GUARD |
= மட்காப்பு |
CYCLE - DANGER LIGHT |
= சிவலை விளக்கு |
CYCLE - REFLECTOR |
= சொலிப்பு வில்லை |
CYCLE - STAND |
= உருளித் தளி |
CYCLE - BRAKE |
= தடையம் |
CYCLE - BRAKE SHOE |
= தடையக் கட்டை |
CYCLE - BALLS |
= பரல்கள் |
CYCLE – BELL |
= மணி |
CYCLE - SADDLE |
= இருக்கை |
CYCLE- DYNAMO |
= ஈமின்கூடு |
CYCLE - DOOM |
= குடவிளக்கு |
CYCLE PARKING STAND |
= உருளி நிறுத்தகம் |
CYCLE REPAIR SHOP |
= உருளிச் சீரகம் |
CYCLE - OVERHAULING |
= முற்றாய்வு. |
====================================================
ஆக்கம் + இடுகை,
வை.வேதரெத்தினம்,
(veda70.vv@gmail.com)
ஆட்சியர்,
‘தமிழ்ப் பணி மன்றம்” முகநூல்.
{06-03-2016}
=====================================================
உருளி |
ஐயா அனைத்து சொற்களும் கனகச்சிதமாக அமைத்துள்ளன. உருளி என்பதற்கு ஈடாக இன்னொரு சொல்லை பரிந்துரைத்தால் மிகவும் சிறப்பாக இருக்கும்.
பதிலளிநீக்குமற்றபடி தங்கள் பரிந்துரைகள் அனைத்தும் நிறைவே.
தங்களின் வலைப்பூ தொடுப்பை என்னுடைய வலைப்பூவில் முன்பக்கத்தில் வைக்க ஆசைப்படுகிறேன்.
நன்றி
எனது வலைப் பூ தொடுப்பை தங்கள் வலைப் பூவில் முன்பக்கத்தில் வைத்திட இசைவளிக்கப்படுகிறது.
பதிலளிநீக்கு