name='description'/> தமிழ்ப் பணி மன்றம்: இலக்கிய மலர்கள் (02) குறிஞ்சிப் பாட்டில் மலர்கள் !

சனி, அக்டோபர் 05, 2019

இலக்கிய மலர்கள் (02) குறிஞ்சிப் பாட்டில் மலர்கள் !

குறிஞ்சிப் பாட்டில் சொல்லப்பட்டுள்ள மலர்களின் பண்டைய பெயரும் அவற்றுக்கு இப்போது வழங்கி வரும் பெயர்களும் !


1)      அடும்பு..................................= அடப்பங் கொடி
2)      அதிரல்.................................= கொடிப்புங்கு
3)      அவரை.................................= அவரைக் கொடி
4)      அனிச்சம்.............................= அனிச்சப் பூ
5)      ஆத்தி....................................= ஆத்தி மரம்
6)      ஆம்பல்................................= அல்லிக் கொடி
7)      ஆரம்.....................................= சந்தன மரம்
8)      ஆவிரை...............................= ஆவாரஞ் செடி
9)      இலவம்................................= இலவ மரம்
10)     ஈங்கை.................................= இண்டங் கொடி
12)     எருவை................................= நாணல்
13)     எறுழம்.................................= எறுழம் பூ
14)     கரந்தை................................= கொட்டைக் கரந்தை
15)     கருவிளை...........................= கருங் காக்கணங் கொடி
16)     மா..........................................= மாமரம்.
17)     காஞ்சி...................................= ஆற்றுப் பூவரசு.
18)     காயா......................................= நீலோற்பலம் பூ
19)     காழ்வை...............................= அகில் மரம்
20)     குடசம்...................................= வெட்பாலை
21)     குரவம்...................................= குறிஞ்சாக் கொடி
22)     குருகத்தி..............................= மாதவிக் கொடி.
23)     குருகிலை............................=
24)     குருந்து.................................= காட்டு நாரத்தை
25)     குல்லை................................= கஞ்சாங்கோரை
26)     குவளை................................= செங்கழுநீர்
27)     குளவி....................................= மலை மல்லிகை
28)     குறிஞ்சி...............................,.= குறிஞ்சி மலர்
29)     கூவிரம்.................................= தேர்க் கொடிஞ்சி
30)     கூவிளம்...............................= வில்வ மரம்
31)     கைதை..................................= செந்தாழை மரம்
32)     கொகுடி.................................= காட்டு முல்லை
33)     செங்கொடுவேரி................= சித்திரமூலக் கொடி
34)     கொன்றை............................= சரக்கொன்றை
35)     கோங்கம்..............................= முள் இலவு
36)     கோடல்.................................= வெண்காந்தள்
37)     சண்பகம்...............................= செண்பக மரம்
38)     சிந்துவாரம்..........................= நொச்சி மரம்
39)     சுள்ளி.....................................= மயிற்கொன்றை
40)     சூரல்.......................................= பிரம்புச் செடி
41)     செங்காந்தள்.......................= கார்த்திகைச் செடி
42)     சிறுசெங்குரலி...................= கருந்தாமக் கொடி.
43)     செம்மல்...............................= சாதி மல்லிகை
44)     செருந்தி................................= மணித்தக்காளிச் செடி
45)     செருவிளை.........................= வெண்காக்கணம் கொடி
46)     சேடல்....................................= பவழக் கால் மல்லிகை
47)     ஞாழல்...................................= காக்கிரட்டைக் கொடி
48)     தணக்கம்............................ = நுணா மரம்
49)     தளவம்..................................= செம்முல்லைக் கொடி
50)     தாமரை.................................= தாமரைக் கொடி
51)     தாழை....................................= தாழை மரம்
52)     திலகம்...................................= மஞ்சாடி மரம்
53)     தில்லை.................................= தில்லை மரம்
54)     தும்பை...................................= தும்பைச் செடி
55)     துழாய்....................................= துளசிச் செடி
56)     தேமா......................................= .
58)     நந்தி.........................................= நந்தியாவட்டை
59)     நரந்தம்...................................= நாரத்தைமரம்
60)     நள்ளிருள்நாறி....................= இருவாட்சி
61)     நறவம்....................................= குங்கும மரம்
62)     குறுநறுங்கண்ணி..............= நறுவிலி மரம்
63)     நறுநெய்தல்..........................=
64)     நறுவழை...............................= சுரபுன்னை மரம்
65)     நாகம்.......................................= நாவல் மரம்
66)     நெய்தல்.................................=
67)     பகன்றை.............................. = சீந்திற் கொடி
68)     பசும்பிடி..................................= பயினி மரம்
69)     பலாசம்...................................= பலா மரம்
70)     பாங்கர்.....................................= வனச்சுடர் மரம்
71)     பாரம்........................................= பருத்திப் பூ
72)     பாலை.....................................= பாலை மரம்
73)     பிடவம்....................................= பிடவச் செடி
74)     பிண்டி......................................= அசோக மரம்
75)     பித்திகம்.................................= சிறு சண்பகம்.
76)     பீரம்..........................................= பீர்க்கங் கொடி
77)     புன்னாகம்..............................= முள்முருங்கை மரம்
78)     புன்னை...................................= புன்னை மரம்
79)     குரீஇப்பூளை........................= கண்பீளைச் செடி
80)     போங்கம்................................=.மஞ்சாடி மரம்
81)     மணிச்சிகை..........................=
82)     மராஅம்...................................= அரச மரம்
83)     மருதம்....................................= மருத மரம்
84)     சிறுமாரோடம்.....................= செங்கருங்காலி மரம்
85)     முல்லை................................= முல்லைக் கொடி
86)     மௌவல்...............................= வன மல்லிகை
87)     வகுளம்...................................= மகிழ மரம்
88)     வஞ்சி.......................................= ஆற்றுப் பாலை மரம்
89)     வடவனம்...............................= ஆல மரம்
90)     வள்ளி......................................= வள்ளிக் (கிழங்கு) கொடி
91)     வாகை.....................................= வாகை மரம்
92)     வாழை....................................= வாழை மரம்
93)     வானி.......................................= ஓமம் செடி
94)     வெட்சி.....................................=
95)     வேங்கை................................= வேங்கை மரம்
96)     வேரல்......................................= சிறு மூங்கில்

------------------------------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை:

வை.வேதரெத்தினம்,
ஆட்சியர்,
தமிழ்ப் பணி மன்றம்.
[தி.: 2050, சுறவம், 18.]
{01-02-2019}
------------------------------------------------------------------------------------------------
              “தமிழ்ப் பணி மன்றம்” முகநூற் குழுவில் வெளியிடப்பெற்ற
 கட்டுரை !
              ------------------------------------------------------------------------------------------------

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன .