பத்தினிப் பெண்டிரின் கூந்தலுக்கு இயற்கை மணம் உண்டு !
நற்றிணை, குறுந்தொகை, அகநானூறு என்னும் மூன்றும், பாவகையிலும் பிற திறங்களிலும் பெரிதும் ஒப்புமை உடையன. குறுந்தொகைப் பாடல்களின் சிற்றெல்லை 4 அடி; பேரெல்லை 8 அடி. நீண்ட பாடல்கள்
அடங்கிய அகநானூற்றை “நெடுந்தொகை” என்று
குறித்தல் போல, அகவற்பாவின் அமைப்பில் சுருங்கிய அடி வரையறையைக்
கொண்ட பாடல் தொகுதி “குறுந்தொகை” என்று
பெயர் பெறுவதாயிற்று !
குறுந்தொகையில், இறைவணக்கப் பாடலைத் தவிர்த்து 400 பாடல்கள் உள்ளன.
இப்பாடல்களை ஏறத்தாழ 205 புலவர் பெருமக்கள் பாடியுள்ளனர்.
இந்நூலின்கண் உள்ள பழமொழிகளும் உவமைகளும் மிக்க நயமுடையவை. உள்ளத்தை உருக்கும் அகப்பொருட் செய்திகள் பல இக் குறுந்தொகையில் இடம்பெற்றுள்ளன
!
பத்தினிப்
பெண்டிரின் கூந்தலுக்கு இயற்கை மணம் உண்டு என்னும் அரிய செய்தியை எடுத்துக் கூறும் “கொங்குதேர் வாழ்க்கை அஞ்சிறைத் தும்பி, காமம் செப்பாது
கண்டது மொழிமோ...” என்னும் இறையனார் செய்யுள் இந்நூலில்தான் உள்ளது
!
“அகவன் மகளே ! அகவன் மகளே ! மனவுக்
கோப்பன்ன நன்னெடுங் கூந்தல், அகவன் மகளே ! பாடுக பாட்டே !...” என்னும் ஔவையாரின் பாடலும் இந்நூலில்தான்
இடம் பெற்றுள்ளது !
“கவிஞர் வைரமுத்துவால் அடிக்கடி எடுத்துக் கையாளைப் பெறும் “யாயும் ஞாயும் யார் ஆகியரோ ? எந்தையும் நுந்தையும் எம்முறைக்
கேளிர் ?....” என்னும் செம்புலப் பெயல் நீராரின் பாடலும் இந்நூலில்
தான் மலர்ந்து மணம் பரப்பி நிற்கிறது.
“பார்ப்பன மகனே ! பார்ப்பன மகனே !
செம்பூ
முருக்கின் நன்னார் களைந்து
தண்டொடு
பிடித்த தாழ் கமண்டலத்து,
படிவ
உண்டிப் பார்ப்பன மகனே !’
என்னும்
வியப்பு ஏற்படுத்தும் பாடலும் (156) குறுந்தொகையில் தான்
இடம்பெற்றுள்ளது !
அருமையான
அகவற்பாக்கள் பூத்துக் குலுங்கும் குறுந்தொகை என்னும் இத்தோட்டத்தில் பல ஆங்கிலச் சொற்களுக்கு
நேர்ப் பொருள் அல்லது இணைப் பொருள் அல்லது புனைப் பொருள் தரும் அழகிய தமிழ்ச் சொற்கள் நிரம்பவே
பரவிக் கிடக்கின்றன. அவற்றுள் ஒருசிலவற்றை மட்டும் காண்போமா !
----------------------------------------------------------------------------------------------------------
MY
MOTHER................= யாய் (குறு.9.1)
ANVIL............................=
உலைக்கல் (குறு.12.2)
YOUTH..........................=
விடலை (குறு.15.5)
GO-DOWN.....................=
பொதியில் (குறு.15.2)
CREASE
(Cricket)..........= ஆடுகளம் (குறு.31.4)
YOUR
MOTHER............= ஞாய் (குகுறு.40.1)
PORTICO.......................=
முன்றில் (குறு.41.4)
STAR..............................=
மீன் (குறு.44.3)
DUMB.............................=
ஊமன் (குறு.58.4)
MATERNITY
HOME.......= ஈனில் (குறு.85.3)
POND
(குளம்)...............= இலஞ்சி (பறு91.2)
BOTTLE..........................=
மணிக்கலம் (குறு.193.1)
RICE
(சோறு)................= அமலை (குறு.277.2)
THERMOS
FLASK..........= சேமச்செப்பு (குறு277.5)
DRIVER...........................=
வலவர் (குறு.311.2)
SQUARE..........................=
சதுக்கம் (நற்.319.5)
DEWY SEASON............. = அற்சிரம்
(முன்பனிக்காலம்) (நற்.84.6)
---------------------------------------------------------------------------------------------------------
ஆக்கம் + இடுகை,
வை.வேதரெத்தினம்,
ஆட்சியர்,
தமிழ்ப்
பணி மன்றம்.
[தி.ஆ:2050,ஆடவை,06]
{21-06-2019}
--------------------------------------------------------------------------------------------------------
“தமிழ்ப்
பணி மன்றம்” முகநூற் குழுவில் வெளியிடப் பெற்ற
கட்டுரை !
--------------------------------------------------------------------------------------------------------
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன .