”லிங்கம்” என்பது எதைக் குறிக்கிறது ?
சிவபெருமானை ” லிங்கம் “ வடிவில் கோயில்களில் நிறுவி மக்கள் வழிபடுகின்றனர்.
” லிங்கம் “ என்ற வடமொழிச் சொல்லுக்கு இலங்கம்
என்ற தமிழ்ச் சொல்லை பாவாணர் அவர்கள்
அறிமுகப்படுத்தி உள்ளார்.
இந்த “ லிங்கம் “ என்ற சொல் தனித்து நின்றோ அல்லது பிற சொற்களுடன்
இணைந்தோ மக்கட் பெயர்களாகி குழந்தைகளுக்குச் சூட்டப் பெறுவதைக் காண்கிறோம்.
” லிங்கம் “ என்னும் முன்னொட்டு அல்லது பின்னொட்டுடன்
பல பெயர்கள் வழங்கிவருகின்றன !
“லிங்கம்” என்ற சொல்லுக்கு அடையாளம், சிவனுரு, விழியின் நடுவில் இருக்கும் பாவை; ஆண்குறி எனப் பல பொருள்கள் உள்ளன. பொதுவாக லிங்கம் என்பது சிவனைக் குறிக்கும்
ஒரு அடையாளம் அல்லது குறியீடு. லிங்கம் என்பதை முன்னொட்டாகவோ பின்னொட்டகவோ கொண்டு அமைந்துள்ள மாந்தப் பெயர்களையும்,
அவற்றுக்கு இணையான அல்லது இணையில்லாவிடினும் பொருத்தமான தமிழ்ப் பெயர்களையும் காண்போம் !
சொல்லுக்குச் சொல்
மொழியாக்கம் செய்வது சிறப்பாக இராது. பூவராகன் என்றால் நிலப்பன்றி என்று
பொருள். (பூ=நிலம்; வராகம்=பன்றி) நிலப் பன்றி என்று யாருக்காவது பெயர்
சூட்ட முடியுமா ? வராக அவதாரம் எடுத்த திருமால் என்னும் வகையில்
பூவராகன் என்றால் மாலன் என்று மொழியாக்கம் செய்யலாம். பூவராகன் என்ற சொல்லின் பொருளை மாலன் என்ற சொல் எதிரொலிக்க வில்லையே என்று யாரும்
கேட்கலாகாது !
இனி, பெயர்ப் பட்டியலைப் பார்ப்போம் !
-----------------------------------------------------------------------------------------------------
அமிர்தலிங்கம் (அமிர்தம்=அமுது)...........= அமுதன்
ஆத்மலிங்கம் (ஆத்மா = உயிர்).................= உயிரொளி
இராமலிங்கம் (இராமம்=எழில்)................= எழிலரசு
ஓமலிங்கம் (ஓமம்=வேள்வி)........................= வேள்விச்செல்வன்
கனகலிங்கம் (கனகம்=தங்கம்).................= பொற்செல்வன்
காத்தலிங்கம் (காத்தல்=புரப்பு)................= மாமன்னன்
குற்றாலலிங்கம்(குறுமை+ஆல்+லிங்கம்)................= ஆலமர்செல்வன்.
கூடலிங்கம் (கூடல்=மதுரை).......................= கூடலரசன்
கூத்தலிங்கம் (கூத்து=நடனம்)....................= கூத்தபிரான்
சாந்தலிங்கம் (சாந்தம்=பொறை).............= பொறையண்ணல்
சுந்தரலிங்கம் (சுந்தரம்=அழகு)..................= அழகரசு
சொக்கலிங்கம் (சொக்கன்=அழகன்).......= எழிலரசு.
சொர்ணலிங்கம் (சொர்ணம்=பொன்)......= பொற்செல்வன்
சோமலிங்கம் (சோமம்=சந்திரன்)..............= மதியொளி
ஞானலிங்கம் (ஞானம் = அறிவு)..................= அறிவுக்கரசு
தருமலிங்கம் (தருமம்=அறம்).......................= அறவாணன்
நாகலிங்கம் (நாகம்=முகில்)..........................= முகிலரசு
பர்வதலிங்கம் (பர்வதம்=மலை)...................= சிலம்பரசு
பூதலிங்கம் (பூதம்=ஐம்பூதங்கள்).................= உலகநம்பி
பூர்ணலிங்கம்(பூர்ணம்=நிறைவு).................= நிறைமதியன்
பூவலிங்கம் (பூவன்=பூவிலுள்ளவன்)...........= பூவாணன்
பொன்னுலிங்கம் (பொன்னு=பொன்)..........= பொன்வண்ணன்
மகாலிங்கம் (மகா=பெரிய)...........................= பேரரசு
லிங்கன் ( லிங்க வடிவன் )..............................= திருவிலங்கன்
லிங்குசாமி (லிங்கம்=இலங்கம்)...................= மாவிலங்கன்
லிங்கோற்பவன் (உற்பவம்=முகிழ்ப்பு)........= முகிழன்
வேதலிங்கம் (வேதம்=மறை)..........................= மறைமணி
வைத்தியலிங்கம் (வைத்தியம்)....................= உறைவாணன்

-------------------------------------------------------------------------------------------------------
ஆக்கம் + இடுகை,
வை.வேதரெத்தினம்,
ஆட்சியர்,
தமிழ்ப் பணி மன்றம்.
{27-08-2018}
--------------------------------------------------------------------------------------------------------
”தமிழ்ப் பணி மன்றம்” முகநூற் குழுவில் வெளியிடப் பெற்ற
கட்டுரை !
--------------------------------------------------------------------------------------------------------
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன .