name='description'/> தமிழ்ப் பணி மன்றம்: பெயர் விளக்கம் (02) பிச்சை - பெயரின் பொருள் என்ன ?

புதன், செப்டம்பர் 04, 2019

பெயர் விளக்கம் (02) பிச்சை - பெயரின் பொருள் என்ன ?


உங்கள் பெயர்  “பிச்சை”யா ?  இந்தப் பெயருக்குப்  பொருள் தெரியுமா ? 



சிவபெருமானில் திருவிளையாடல்கள் பற்றி எத்துணையோ கதைகள் புராணங்களில்  சொல்லப்பட்டுள்ளன.  அவற்றுள்  ஒன்று தான் தண்டகாரண்யத்தில் முனிவர்களின் செருக்கினை அழித்த கதை. தண்டகாரண்யம் என்னும் தபோவனத்தில் பல முனிவர்கள் தமது மனைவியருடன் வாழ்ந்து வந்தனர் !

வர்கள் சிவபெருமானைப் பற்றித் தாழ்வாக எண்ணியதுடன், தம்மைப் பற்றி மிக உயர்வாகவும் கருதி மிகவும் செருக்குற்று இருந்தனர். அவர்களின் செருக்கை அழிக்க எண்ணிய சிவபெருமான் பிச்சைக்காரன் வேடம் பூண்டு அம்மணமாக தண்டகாரண்யம் சென்றார். இவ்வாறு கதை தொடர்கிறது. இறுதியில் முனிவர்களின் செருக்கு சிவபெருமானால் அழிக்கப்பட்டது. . [ செருக்கு = ஆணவம் ]

   சிவபெருமான் பிச்சைக்காரன் வேடம் தரித்த கதையின் அடிப்படையில் தோன்றிய பல பெயர்கள் மக்களிடையே இன்னும் வழக்கில் உள்ளன. அப்பெயர்கள் பற்றியும் அவற்றுக்கு இணையாக அல்லது பதிலீடாக  முன்மொழியப்படும் தமிழ்ப் பெயர்களையும் காண்போமா !

-------------------------------------------------------------------------------------------------
               பிச்சமூர்த்தி (சிவன்).............. = பேருடையார்
               பிச்சம்மாள் (உமா).................. = மலைமகள்
               பிச்சன் (சிவன்)......................... = பிறைசூடி
               பிச்சாண்டி (சிவன்).................. = பெருந்தேவன்
               பிச்சுமணி (சிவன்)................... = உமாமணாளன்
               பிச்சை (சிவன்)............................= ஆடலரசன்
               பிச்சைக்கண்ணு (சிவன்)...... = ஆடவல்லான்
               பிச்சைமுத்து (சிவன்)............ = மாணிக்கக்கூத்தன்
               பிச்சையப்பன் (சிவன்)........... = கூத்தரசன்
               பிச்சையம்மாள் (உமா)......... = மலையரசி
               பிச்சையன் (சிவன்)................ = அந்திவண்ணன்
               பிச்சையாண்டி (சிவன்)......... = கொன்றைவேந்தன்
               பிட்சாடணன் (சிவன்)............ = அழல்வண்ணன்

------------------------------------------------------------------------------------------------
     [பிச்சமூர்த்தி = பேருடையார். பெருமை + உடையார் =             பேருடையார். பிரஹதீஸ்வரர் = பெருவுடையார் என்பதை         ஒப்புநோக்குக !]
-------------------------------------------------------------------------------------------------
                                                 ஆக்கம் + இடுகை
                                              வை.வேதரெத்தினம்,
                                                          ஆட்சியர்,
                                              தமிழ்ப் பணி மன்றம்.
                                                         {10-11-2018)
   ----------------------------------------------------------------------------------------------------

        ”தமிழ்ப் பணி மன்றம்” முகநூற் குழுவில் வெளியிடப் பெற்ற
 கட்டுரை !

    ---------------------------------------------------------------------------------------------------

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன .