உயிரீற்றுச்
சிறப்புப் புணர்ச்சி
அகர ஈற்றுச் சிறப்பு
விதி.
நூற்பா.170.(பல, சில, புணர்ச்சி (பக்.137)
பல, சில, எனும் இவை தம் முன் தாம் வரின்
இயல்பும், மிகலும், அகரம் ஏக
லகரம், றகரம் ஆகலும்
பிறவரின்
அகரம் விகற்பம் ஆகலும் உள பிற. (நூற்பா.170)
பல, சில என்னும் சொற்கள் தமக்கு முன்னே தாம் வருமாயின் இயல்பாதலும் உண்டு (பக்.138) (நூற்பா.170)
பல + பல
= பலபல............ (பக்.138)
சில + சில
= சில சில....... (பக்.138)
பல, சில என்னும் சொற்கள் தமக்கு முன்னே தாம் வரின் வல்லெழுத்து
மிகுதலும் உண்டு (பக்.138) (நூற்பா.170)
பல + பல = பலப்பல..............(பக்.138)
சில + சில = சிலச்சில...........(பக்.138)
பல, சில என்னும் சொற்கள் தமக்கு முன்னே தாம் வரின் அகரம்
கெட்டு ‘லகரம்’ ’றகரம்’ ஆதலும் உண்டு. (பக்138) (நூற்பா.170)
பல + பல
= பற்பல................(பக்.138)
சில + சில
= சிற்சில.............(பக்.138)
’பல’ என்னும் சொல்லின் முன்னர் பிற சொற்கள் வரின்
விகற்பமாவதும் உண்டு. (பக்.138) (நூற்பா.170)
பல + கலை
= பலகலை......................(பக்.138)
பல + கலை
= பல்கலை......................(பக்.138)
பல + தாழிசை = பல தாழிசை.....(பக்.138)
பல + தாழிசை
= பஃறாழிசை........(பக்.138)
பல + ஞானம்
= பல ஞானம்............(பக்.138)
பல + ஞானம்
= பன் ஞானம்...........(பக்.138)
பல + அணி
= பலவணி......................(பக்.138)
பல + அணி
= பல்லணி......................(பக்.138)
------------------------------------------------------------------------------------------
ஆக்கம் + இடுகை,
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன .