name='description'/> தமிழ்ப் பணி மன்றம்: நன்னூல் விதிகள் (05) உயிரீற்றுப் புணரியல் - குற்றுகரம்/முற்றுகரம் முன் உயிர் (அ) யகரம் (நூற்பா.164)

சனி, மே 01, 2021

நன்னூல் விதிகள் (05) உயிரீற்றுப் புணரியல் - குற்றுகரம்/முற்றுகரம் முன் உயிர் (அ) யகரம் (நூற்பா.164)

 

                                       உயிரீற்றுச் சிறப்புப் புணர்ச்சி

 

குற்றியலுகரம், முற்றியலுகரம் முன் உயிரும், ‘கரமும்

 வந்து புணர்தல்

 

நூற்பா.164. (குற்றியலுகரம், முற்றியலுகரம் முன் உயிரும், ‘கரமும் வந்து புணர்தல்) (பக்.131)

 

உயிர் வரின் உக்குறள் மெய்விட்டு ஓடும்

வ்வரின்ய்யாம் முற்றும் அற்று ஒரோவழி. (நூற்பா.164)

 

ஈற்றில் குற்றியலுகம்முதலில்உயிர்நூற்பா.164)

 

நிலைமொழி ஈற்றில் நிற்கும் குற்றியலுகரம், வருமொழி முதலில் உயிர் எழுத்து வந்தால், (அந்த உகரம்) மெய்யை விட்டு  நீங்கிவிடும்.  (பக்.131) ) (நூற்பா.164)

 

நாகு + அரிது = நாகரிது (பக்.132) (நூற்பா.164)

நாகு + அருமை = நாகருமை (பக்.132)

எஃகு + அழகு = எஃகழகு (பக்132)

வரகு + ஆடை = வரகாடை. (பக்.132)

கொக்கு + அழகு = கொக்கழகு (பக்.132)

குரங்கு + எங்கே = குரங்கெங்கே (பக்.132)

தெங்கு + அழகு = தங்கழகு (பக்.132)

 

ஈற்றில் குற்றியலுகம் +  முதலில்யகரம்(நூற்பா.164)

 

நிலைமொழி ஈற்றில் நிற்கும் குற்றியலுகரம், வருமொழி முதலில் கரம் வந்தால், (அந்த உகரம்) மெய்யை விட்டு  நீங்கிகரம் தோன்றும்.  (பக்.131) (நூற்பா.164)

 

நாகு + யாது = நாகியாது

வரகு + யாது = வரகியாது.

 

ஈற்றில் முற்றியலுகம்முதலில்உயிர்(நூற்பா.164)

 

நிலைமொழி ஈற்றில்  முற்றியலுகரம்  நின்று வருமொழி முதலில் உயிர் எழுத்து வந்தால், (அந்த உகரம்) மெய்யை விட்டு  நீங்கிவிடும்.  (பக்.131)

 

கதவு + அழகு = கதவழகு(நூற்பா.164)

(’கரம் மெய் விட்டு நீங்கியது)

 

கதவு + யாது = கதவியாது.

(’கரம்கரமாகியது)


-----------------------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை,


வை.வேதரெத்தினம்,

[veda70.vv@gmail.com]

ஆட்சியர்,

தமிழ்ப் பணி மன்றம் முகநூல்

-----------------------------------------------------------------------------------------

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன .