name='description'/> தமிழ்ப் பணி மன்றம்: நன்னூல் விதிகள் (07) உயிரீற்றுப் புணரியல் - அகர ஈற்றுச் சிறப்பு விதி (நூற்பா.167)

சனி, மே 01, 2021

நன்னூல் விதிகள் (07) உயிரீற்றுப் புணரியல் - அகர ஈற்றுச் சிறப்பு விதி (நூற்பா.167)

 

                                       உயிரீற்றுச் சிறப்புப் புணர்ச்சி                     

                    

                         (அகர ஈற்றுச் சிறப்பு விதி)

 

நூற்பா. 167.(அகர ஈற்றுச் சிறப்பு விதி) (பக்.135)

 

செய்யியஎன்னும் வினையெச்சம், பல்வகைப்

பெயரின் எச்சம், முற்று, ஆறனுருபே

அஃறிணைப் பன்மை, அம்ம, முன் இயல்பே (நூற்பா.167)

 

செய்யியஎன்னும் அகர ஈற்று வாய்பாட்டு வினையெச்சம் முன் வரும் வல்லெழுத்து மிகா.  (இயல்பாகும்) (பக்.135) (நூற்பா.167)

 

உண்ணிய + கொண்டான் = உண்ணிய கொண்டான். (பக்.136) (நூற்பா.167)

உண்ணிய + சென்றான் = உண்ணிய சென்றான் (பக்.136)

(உண்ணிய = இசைந்து, பொருந்தி, நுகர்ந்து)

(’செய்யியஎன்னும் வினையெச்சம் முன் வலி இயல்பாயது) (பக்.136)

 

[பல்வகை என்பது வினையடி நான்கினும் பிறந்த பெயரெச்சங்களை. (பெயரடி வினையெச்சம், வினையடி வினையெச்சம், இடையடி வினையெச்சம், உரியடி வினையெச்சம் ) (நூற்பா.167)

 

பல்வகைஅகர ஈற்றுப் பெயரெச்சம் முன் வலி மிகா. (இயல்பாகும்)

(பக்.136) (நூற்பா.167)

 

உண்ட + குதிரை = உண்ட குதிரை (பக்.136) (நூற்பா.167)

கறுத்த + பையன் = கறுத்த பையன் (பக்.136)

உற்ற + வேளை = உற்ற வேளை (பக்.136) (இடையடிப் பெயரெச்சம்)

கடிய + கதிரை = கடிய குதிரை (பக்.136) (உரியடிப் பெயரெச்சம்)

(பல்வகைப் பெயரெச்சம் முன் வலி இயல்பாயது) (பக்.136)

 

பல்வகைஅகர ஈற்று முற்று  முன் வலி மிகா. (இயல்பாகும்) (பக்.136) (நூற்பா.167)

 

உண்ட + குதிரை = உண்டன குதிரை (பக்.136) (நூற்பா.167)

அமர்முகத்த + குதிரை = அமர்முகத்தன குதிரை (பக்.136)

வாழ் + கொற்றா = வாழ்க கொற்றா. (பக்.136)

வாழி+ சாத்தா = வாழிய சாத்தா. (பக்.136)

(வியங்கோள் வினைமுற்று உள்பட பலவகை  முற்று முன் வலி இயல்பாயது) (பக்.136)

 

ஆறாம் வேற்றுமை உருபின்  முன் வரும் வல்லெழுத்து இயல்பாகும் (பக்.136) (நூற்பா.167)

 

தன் + கைகள் = தன் கைகள் (பக்.136) (நூற்பா.167)

அவள் + கண்கள் = அவள் கண்கள் (பக்.136)

 

அஃறிணைப் பன்மைப் பெயரின் முன் வேற்றுமை, அல்வழி இருவழியும் வல்லெழுத்து இயல்பாகும் (பக்.136) (நூற்பா.167)

 

பல + குதிரைகள் = பல குதிரைகள் (பக்.136) (நூற்பா.167)

பல + செந்நாய்கள் = பல செந்நாய்கள்(பக்.136)

சில +  கொடுத்தான்= சில கொடுத்தான்(பக்.136)

சில + செய்தான் = சில செய்தான் (பக்.136)

 

உரையசை இடைச்சொல் முன் வலி இயல்பாகும் (பக்.136) (நூற்பா.167)

 

அம்ம + கொற்றா = அம்ம கொற்றா (பக்.136)

அம்ம + சாத்தா = அம்ம சாத்தா (பக்.136)

(அம்ம = உரையசை இடைச்சொல்)

(அம்ம என்னும் உரையசை இடைச்சொல் முன் வலி இயல்பாயது) (பக்.136)

 ------------------------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை,


வை.வேதரெத்தினம்,

[veda7o.vv@gmail.com]

ஆட்சியர்,

தமிழ்ப் பணி மன்றம் முகநூல்.

-------------------------------------------------------------------------------------------------------------


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன .