name='description'/> தமிழ்ப் பணி மன்றம்: கவிதை (59) (2019) எழுபதாண்டு நிறைவு ! (கிருபானந்தன் வீட்டு விழா )

வெள்ளி, நவம்பர் 01, 2019

கவிதை (59) (2019) எழுபதாண்டு நிறைவு ! (கிருபானந்தன் வீட்டு விழா )

            கொத்து (001)                                                                                               மலர்  (057)
------------------------------------------------------------------------------------------------------------------------------------
மின்வாரியத்தில் 
பணிபுரியும் பொறியாளர், 
நண்பர் திரு. கிருபானந்தனின் மாமனார்  எழுபதாம் அகவை நிறைவு செய்வதை  முன்னிட்டு, 
அவரது இல்லத்தினரால்  எடுக்கப் பெற்ற  விழாவில்,
 திரு.கிருபானந்தனால் வாசித்து அளிக்கப் பெற்ற  வாழ்த்துப்பா !
 எழுத்து: வை.வேதரெத்தினம்:
 வாசிப்பு: திரு,கிருபானந்தன் !
(2019)
-------------------------------------------------------------------------------------------------------------

                                    வணங்குகிறோம் ! வாழ்த்துங்கள் !!

       எழுபதாண்டு      நிறைவுபெறும்      எம்குலத்தின்      திருவிளக்கே !
          இராதாமணி       மணவாளன்        பெயர்விளங்கும்   எழில்முகிலே !
     பழுமரமாய்,       ஊருணியாய்,       பகலவனாய்,       திகழொளியே !
          பால.புஷ்பா       கரம்பிடித்த         பால்மதியே !      அருள்நிதியே !
     வழுவகல        வாழ்வாங்கு        வாழ்தகையே !     தீங்கனியே !
          வல்லாங்கு       வாழ்ந்திடுக!        வணங்குகிறோம் ! வாழ்த்துவையே !
     செழும்புனலே !   இல்வாழ்வின்      செங்கரும்பே !     விழுமியமே !
          செந்தூர          மரைமலரே !       நூறகவை        வாழ்குவையே !!

     வேளாண்மைக்    குடியுதித்த         விடிவெள்ளித்      திருமுகமே !
          விழுதூன்றிச்      சாரத்தில்           விளைந்திட்ட     நென்மணியே !
     தாளாண்மை      மீதூரும்           தரணிபுகழ்         தொழில்மகவே  !
          தண்பொழிலாய்   வழித்தோன்றல்    வாழ்வுயரச்       செய்தனையே  !
     கோளரிமா        மருமகனார்        குலம்தழைக்க     வாழ்த்திடுக !
          கோபுரமே !       நின்குலத்துக்       கொடிகளெலாம்   வணங்குகிறோம் !
     நாளரும்பு        மணம்திகழும்      நவநிதியே !        வணங்குகிறோம் !
          நலமுயர்ந்து      யாம்வாழ          நான்முகனே !     வாழ்த்திடுக !

     கற்றறிந்த        பள்ளிகட்குக்       கார்முகிலாய்       நூல்தந்தாய் !
          கனிவுடனே       கோவிலுக்குக்      கால்பதிக்கக்      தளம்தந்தாய் !
     பொற்கிழியாய்    ஏழையர்க்குப்      பொருள்தந்தாய் !   கரம்தந்தாய் !
          பொன்றாத        புகழ்பூத்தாய் !      பூமான்நின்        புதல்விகளை
     அற்புதமாய்க்     கல்வித்தேர்த்       தவிசினிலே        அமர்த்திட்டாய் !
          ஆற்றல்மிகு      பொறிஞர்களை     அவர்தமக்கும்     மணமுடித்தாய் !
     பெற்றாயே !      பெயர்விளங்கப்     பெயரன்கள்,           பெயர்த்திகளை !
          பெருந்தகையேவணங்குகிறோம் ! வாழ்த்துவையே, வளம்பெருக !!

------------------------------------------------------------------------------------------------------------

                                             எழுத்து: வை.வேதரெத்தினம்: 
                                           வாசிப்பு: திரு,கிருபானந்தன் !
------------------------------------------------------------------------------------------------------------
    
சிற்றெழுத்தில் மீள் பதிவு !

          பெருந்தகையே !  வணங்குகிறோம் ! வாழ்த்துவையேவளம்பெருக !!

------------------------------------------------------------------------------------------------------------

                                             எழுத்து: வை.வேதரெத்தினம்: 
                                           வாசிப்பு: திரு,கிருபானந்தன் !
------------------------------------------------------------------------------------------------------------
    
2 கருத்துகள்:

  1. இதிலும் அருஞ்சொற்பொருள் தந்திருந்தால் பயனளிக்கும் விதமாக இருக்கும் ஐயா.

    பதிலளிநீக்கு
  2. தங்கள் கருத்தை இனிப் பின்பற்ற முயல்கிறேன் ! பெயருடன் கருத்துரை வரைய முயலுங்கள் ! என் வேண்டுகோள் ஏற்கப்பட்டால் மகிழ்ச்சி அடைவேன் !

    பதிலளிநீக்கு

உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன .