கொத்து (01) மலர் (031)
------------------------------------------------------------------
பாசமலர் அண்ணன், தனது தங்கையின்
பிரிவை எண்ணிப் பாடும்
ஒரு
சோகக் கவிதை !
(ஆண்டு 1972)
---------------------------------------------------------------------------------------------------
அமுதத் தமிழின் புதுமைச் சுடரே எங்கே போகிறாய் ?
அமைதி குலைய இதயம் நெகிழ எங்கே போகிறாய் ?
குமுத மலரின் அழகு இதழே எங்கே போகிறாய் ?
குவளை விழியில் துயிலும் நிலவே எங்கே போகிறாய் ?
இதய வானில் சுழலும் கதிரே எங்கே போகிறாய் ?
இனிய தங்கை உறவைப் பிரிந்து எங்கே போகிறாய் ?
உதய நிலவின் புதிய ஒளியே எங்கே போகிறாய் ?
உள்ளம் நிறைந்த அண்ணன் துறந்து எங்கே போகிறாய் ?
அன்பே எங்கே போகிறாய் ?
இளமை நினைவில் மலரும் கனவே எங்கே போகிறாய் ?
எண்ணம் கலைய உள்ளம் சிதற எங்கே போகிறாய் ?
குளிரும் பனியின் மிளிரும் எழிலே எங்கே போகிறாய் ?
கோடி விழியில் ஆடும் கலையே எங்கே போகிறாய் ?
கழனி விளையும் பவளக் கதிரே எங்கே போகிறாய் ?
கண்மணி தங்கை உறவைப் பிரிந்து எங்கே போகிறாய் ?
பழகும் தமிழே! அண்ணன் மறந்து எங்கே போகிறாய் ?
பாசம் நிறைந்த உயிரைத் துறந்து நானும் போகிறேன் !
உறவின் பிரிவால் சாகிறேன் !
-------------------------------------------------------------------------------------------------------------
ஆக்கம் + இடுகை,
வை.வேதரெத்தினம்,
[veda70.vv@gmail.com]
ஆட்சியர்,
தமிழ்ப்
பணி மன்றம் முகநூல்.
-------------------------------------------------------------------------------------------------------------------------
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன .