name='description'/> தமிழ்ப் பணி மன்றம்: பெயர் விளக்கம் (18) ஹேமலதா - பெயரின் பொருள் தெரியுமா ?

வெள்ளி, செப்டம்பர் 06, 2019

பெயர் விளக்கம் (18) ஹேமலதா - பெயரின் பொருள் தெரியுமா ?

   தங்கம் மீதுதான்   மக்களுக்கு எத்தனைப் பற்று ?



தங்கம் என்பதைக் குறிக்கும் சொற்களாக 43 பெயர்களைக் குறிப்பிடுகிறது சூடாமணி நிகண்டு. அவை:- (01) மாசை (02) பீதகம் (03) பீதம் (04) மாடை (05) மாடு (06) வேங்கை (07) ஆசை (08) சுவணம் (09) காரம் (10) அருத்தம் (11) காஞ்சனம் (12) காணம் (13) தேசிகம் (14) கனகம் (15) கைத்து (16) செந்தாது (17) பொலம் (18) அத்தம் (19) சாமி (20) வித்தம்

(21) தனம் (22) உடல் (23) பண்டம் (24) இரணியம் (25) நிதி (26) வெறுக்கை (27) ஈகை (28) கல்யாணம் (29) ஏமம் (30) பொருள் (31) உரை (32) சந்திரம் (33) சாம்பூனதம் (34) பூரி (35) ஈழம் (36) திரவியம் (37) சாதரூபம் (38) செங்கொல் (39) நிதானம் (40) மாழை (41) அரி (42) தபனியம் (43) ஆடகம்.

இவற்றுள் எத்தனை,  தமிழ்ச் சொற்கள், எத்தனை வடமொழிச் சொற்கள் என்பது ஆய்வுக்குரியது. தங்கத்தைக் குறிக்கும் இச்சொற்கள் சிலவற்றின் அடிப்படையில் மாந்தப் பெயர்கள் பல தோன்றியுள்ளன. அப்பெயர்களுக்கு இணையான அல்லது ஏறக்குறைய பொருத்தமான தமிழ்ப் பெயர்களும் தரப்பட்டுள்ளன. அவற்றைப் பார்ப்போமா !

-----------------------------------------------------------------------------------------------------


மாசை (தங்கம்) - மாசி = பொற்செல்வன்

மாசை (தங்கம்) - அம்மாசை ( அம் + மாசை = அம்மாசை = அழகிய மாசை) = பொற்செழியன்

மாசை (தங்கம்) - மாசி - அம்மாசி (அம் + மாசி = அம்மாசி = அழகிய மாசி) = பொன்மேனி

பீதம் (தங்கம்) - பீதாம்பரம் = பொன்னாடை = பொற்கிழி = பொன்முடி 

மாடை (தங்கம்) - மாடையன் = பொன்னரசன்

வேங்கை (தங்கம்) - வேங்கையன் = வேங்கைமார்பன்

வேங்கை (தங்கம்) - வேங்கன் = வேங்கையரசு

ஆசை (தங்கம்) - ஆசைத்தம்பி = ஆசைத்தம்பி.

சுவணம் (தங்கம்) - சுவர்ணம் - சொர்ணம் = பொன்மலர்

சுவணம் (தங்கம்) - சுவர்ணம் - சொர்ணம் - சொர்ணராஜ் = பொன்னரசு

சுவணம் (தங்கம்) - சுவர்ணம் - சொர்ணம் - சொர்ணமூர்த்தி = பொன்மேனி

சுவணம் (தங்கம்) - சுவர்ணம் - ஸ்வர்ணலதா = பொற்கொடி

சுவணம் (தங்கம்) - சுவர்ணம் - சுவர்ணமுகி = பொற்பாவை

காஞ்சனம் (தங்கம்) - காஞ்சனமாலா = பொன்மாலை

காஞ்சனம் (தங்கம்) - காஞ்சனவல்லி = பொற்கொடி

காஞ்சனம் (தங்கம்) - காஞ்சனா = பொற்பாவை

தேசிகம் (தங்கம்) - தேசிகன் = பொன்னெழிலன்

கனகம் (தங்கம்) - கனகா = பொற்செல்வி

கனகம் (தங்கம்) - கனகலதா = பொற்கொடி

கனகம் (தங்கம்) - கனகவல்லி = பொற்கொடி

கனகம் (தங்கம்) - கனகராஜ் = பொன்னரசு

கனகம் (தங்கம்) - கனகசுந்தரம் = பொன்னழகன்

கனகம் (தங்கம்) - கனகாம்புஜம் = பொற்றாமரை

கனகம் (தங்கம்) - கனகபுஷ்பா = பொன்மலர்

பொலம் (தங்கம்) - போலம் - போலப்பன் = பொன்னரசு

சாமி (தங்கம்) = பொன்னீலன்

தனம் (தங்கம்) - தனசாமி = பொற்செல்வன்

தனம் (தங்கம்) - தனபாக்கியம் = பொற்செல்வி

தனம் (தங்கம்) - தனலட்சுமி = பொற்பாவை

தனம் (தங்கம்) - தனவேந்தன் = பொற்செம்மல்

இரணியம் (தங்கம்) - இரணியன் = பொற்கதிர்

நிதி (தங்கம்) - நிதீஷ்குமார் = பொன்னிளவல்

கல்யாணம் (தங்கம்) - கல்யாணசுந்தரம் = பொன்னழகு

கல்யாணம் (தங்கம்) = பொன்னிலவன்

ஏமம் (தங்கம்) - ஹேமம் - ஹேமலதா = பொற்கொடி

ஏமம் (தங்கம்) - ஹேமம் - ஹேமச்சந்திரன் = பொன்மதி

ஏமம் (தங்கம்) - ஹேமா = பொன்னி

திரவியம் (தங்கம்) - திரவியசாமி = பொற்செம்மல்

-----------------------------------------------------------------------------------------------------

நண்பர்களே ! பதிவினைப் படித்துச் சுவைத்த பின்பு, உங்கள் கருத்துகளைப் பதிவிடுங்கள் ! குழந்தைகளுக்குப் பெயர் சூட்டும் வாய்ப்பு வருகையில் தமிழ்ப் பெயராகத் தெரிவு செய்து  சூட்டுங்கள் !


----------------------------------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை,
வை.வேதரெத்தினம்,
ஆட்சியர்,
தமிழ்ப் பணி மன்றம்.
{14-08-2018)

-----------------------------------------------------------------------------------------------------
        
 ”தமிழ்ப் பணி மன்றம்” முகநூற் குழுவில் வெளியிடப் பெற்ற
 கட்டுரை !
-----------------------------------------------------------------------------------------------------



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன .