name='description'/> தமிழ்ப் பணி மன்றம்

சனி, ஜனவரி 02, 2016

புதிய தமிழ்ச் சொல் (32) கவடி ( KABADI )

புதுச்சொல் புனைவோம் !

KABADI = கவடி

---------------------------------------------------------------------------------------------

தமிழகத்தில் நாட்டுப் புற விளையாட்டுகளில் ஒன்றாக இருந்தது சடு குடு”. இந்த விளையாட்டு பலீஞ் சடு குடு”, ”பாடியாட்டம்உள்பட வெவ்வேறு பெயர்களில் வழங்கி வந்தன. அப்பெயர்களுள் ஒன்று தான் கவடி

 

இந்த விளையாட்டு தமிழ்நாட்டுக்கு அப்பாலும் பரவி, அந்தந்த வட்டாரத்திற்குத் தகுந்தாற்போல் பெயர்களில் மாற்றம் பெற்றது. இந்தி பேசும் மாநிலங்களில் கபடி” (KABADI) என்ற பெயர் வழங்கி வருகிறது.

 

கபடம்என்று ஒரு சொல்லைக் கேள்விப் பட்டிருப்பீர்கள் ! இதன் பொருள் வஞ்சகம்”, “சூழ்ச்சி”, “தந்திரம்என்பதாகும். எதிராளிக்குத் தெரியாமல், அவனைக் கவிழ்க்கவோ, வெல்லவோ, முடக்கவோ, தடுக்கவோ திட்டமிடுவதுதான் கபடம்”.


தமிழில் சில சொற்களில் வரும் கரம், வடமொழி ஆளுமை ஏற்பட்ட பின் கரமாகத் திரிபடைந்தது. வாலன்என்பது பாலன்என்றும், “வாலச்சந்திரன்என்பது பாலச்சந்திரன்என்றும் திரிபடைந்தது.

 

இவ்வாறே வாலாம்பாள்என்ற பெயர் பாலாம்பாள்என்றும் வாலிவன் என்பது வாலிபன்என்றும் வாலை வயதுஎன்பது பாலவயதுஎன்றும் திரிபடைந்திருக்கிறது. கலாவம்என்பது கலாபம்ஆகிவிட்டது.

 

கவடிஎன்ற தமிழ்ச்சொல் முன்பு புழக்கத்தில் இருந்தது. கவட்டுக்காரன்”, “கவட்டுக்காரி”, கவட்டுக்காரக் குழந்தைபோன்ற சொற்கள் இன்றும் கிராமப் புறங்களில் பேச்சு வழக்கில் உள்ளன. கவடுஎன்ற சொல்லில் இருந்து பிறந்ததே கவடி”. ”கவடிஎன்னும் தமிழ்ச்சொல் இந்தியில் கபடிஆகிவிட்டது. 

 

ஆமாம் ! கவடிவிளையாட்டு என்றால் என்ன ? இந்த விளையாட்டில் இரண்டு அணிகள் இடம் பெறும். ஒரு அணியில் 12 ஆளினர் இடம் பெறுவர். ஆனால் ஆட்டக் களத்தில் 7 பேர் மட்டுமே அனுமதிக்கப்படுவர். சுற்றுக் கோடுகளன்றி (boundaries) நடுக்கோடு ஒன்றும், தாண்டுகோடுகள் இரண்டும் இருக்கும்.

 

நடுக்கோட்டின் இருபுறமும் உள்ள களங்களில் அந்தந்த அணி வீர்ர்கள் அணிவகுத்து நிற்பார்கள். முதலில் ஒரு அணியைச் சேர்ந்த வீர்ர் மூச்சு விடாமல் பாடிக்கொண்டு எதிரணிக் களத்திற்குள் நுழைவார். 

 

எதிரணி வீர்ர்களில் ஒருவரையோ பலரையோ தொட்டுவிட்டு, நடுக்கோடு வரை அவர் வந்து விட்டால், தொடப்பட்டவர்கள் ஆட்டமிழந்தவர்களாகக் கருதப் படுவர்.

 

பாடிச் செல்பவரை, நடுக்கோட்டுக்குத் திரும்பி வர விடாமல் எதிரணி வீர்ர்கள் பிடித்துவிட்டால், அவரும் ஆட்டம் இழந்தவராகக் கருதப் படுவார்.

 

பாடிச் செல்பவர் யாரைக் குறி வைக்கிறாரோ அவரை நேர்ப் பார்வையாகப் பார்க்காமல் வேறு யாரையோ பார்ப்பது போல் போக்குக் காட்டி, ”கவட்டுத் தனமாகஇயங்கி, குறி வைக்கப்பட்டவர் விழிப்புக் குலையும் போது அவரைத் தொட்டு வீழ்த்துவார்.

 

அதுபோன்றே, எதிர் அணியினரும் கவட்டுத்தனமாகஇயங்கி, பாடிச்செல்பவர் விழிப்புக் குலையும்போது, அவரைப் பிடித்து வீழ்த்துவர்.

 

இரு அணியினரும் இவ்வாறு கவட்டுத் தனமாகஇயங்கி விளையாடுவதால், இவ்விளையாட்டு கவடிஆட்டம் எனப் பெயர் பெற்றது.

 

தமிழகக் கிராமங்களில் , ஒருகாலத்தில் கவடிஆட்டம் எனப் பெயர் பெற்றிருந்த இந்த விளையாட்டு, இப்போது கபடிஎன்று திரிபடைந்து வழங்கி வருகிறது. கபடிஎன்ற சொல்லுக்கு இந்திக் காரர்களும் சொந்தம் கொண்டாடி வருகின்றனர்.

 

எனவே இப்போதாவது விழிப்படைவோம் ! கபடியைக் கைவிடுவோம் ! கவடியைக் கைக்கொள்வோம் !

 

=========================================================      

                                 

KABADI  TOURNAMUNT

கவடிப் போட்டி

KABADI  TEAM

கவடி அணி

KABADI   REFEREE

கவடி நடுவர்

KABADI   MEN

கவடி ஆளினர்

KABADI   CHAMPIOM

கவடி வாகையர்

 

=========================================================

 

ஆக்கம் + இடுகை,

வை.வேதரெத்தினம்,

[veda70.vv@gmail.com]

ஆட்சியர்,

தமிழ்ப் பணி மன்றம்முகநூல்

{02-01-2016}

 

=========================================================






ஞாயிறு, டிசம்பர் 27, 2015

பெயர் (05) ஆண் மகவுப் பெயர்கள் (பட்டியல்.3)

அன்னைத் தமிழைப் போற்றுவோம் ! அருந்தமிழில்  பெயர் சூட்டுவோம் !




{ஆண் குழந்தைகளுக்கான  பெயர்கள்}

 "ம" வரிசை முதல் “வ” வரிசை வரை

மங்கைபங்கன்
மணிக்கொடி
மணிமொழி
மணியரசன்
மணியரசு
மணிவண்ணன்
மதியரசன்
மதியரசு
மதியழகன்
மதியொளி
மதிவாணன்
மதிவேந்தன்
மயிலரசன்
மயிலரசு
மயிலழகன்
மயிலுடைநம்பி
மயிலூர்தி
மயில்வாகனன்
மயில்வாணன்
மருதவாணன்
மருத்துவமணி
மரையண்ணல்
மரைவாணன்
மரைவேந்தன்
மலர்மணி
மலர்மன்னன்
மலர்வாணன்
மலர்வேந்தன்
மலைமகன்
மலையண்ணல்
மலையழகன்
மலைவாணன்
மறைமணி
மறைமலை
மறையண்ணல்
மன்றவாணன்
மன்னர்மன்னன்
மாசிலாமணி
மாதவன்
மாமல்லன்
மாயவன்
மாயழகன்
மாயன்
மாவேந்தன்
மாறன்
மீனவன்
முகிலரசு
முகிலன்
முகில்மணி
முகில்வண்ணன்
முக்கண்ணன்
முடியரசன்
முடியரசு
முதுகுன்றன்
முத்தமிழ்
முத்தமிழ்ச்செல்வன்
முத்தமிழ்நம்பி
முரசொலி
முருகவேல்
முருகவேள்
முல்லைவாணன்
முல்லைவேந்தன்
மூவேந்தன்
மெய்யழகன்
யாழ்வேந்தன்
வணங்காமுடி
வரம்பிலின்பன்
வல்லத்தரசு
வல்லரசு
வழுதி
வளநாடன்
வளவன்
வளனரசு
வள்ளல்
வள்ளிமணாளன்
வாகைவேந்தன்
வாய்மையழகன்
வாரணன்
வாலறிவன்
வானமாமணி
வானமாமலை
வானவரம்பன்
வானவராயன்
வான்மணி
விண்மணி
வில்லவன்கோதை
வில்லழகன்
வில்லாளன்
வில்வேந்தன்
வெண்மணி
வெண்மதிச்செல்வன்
வெற்றிச்செல்வன்
வெற்றியழகன்
வெற்றிவேந்தன்
வேந்தன்
வேல்மணி
வேழவேந்தன்
வைகறைச்செல்வன்
வைகைச்செல்வன்
வைகைத்துறைவன்
வையகம்
=============================================================
வரிசை முதல்வரிசை வரையிலான பெயர்களூக்கு 
 ஆண் மகவுப் பெயர் (1) காண்க !
=============================================================

வரிசை  முதல் வரிசை வரையிலானபெயர்களுக்கு 
ஆண் மகவுப் பெயர் (2) காண்க !
      ===========================================================

ஆக்கம் + இடுகை
வை.வேதரெத்தினம்
(veda70.vv@gmail.com)
ஆட்சியர்
தமிழ்ப் பணி மன்றம்
{27-12-2015}

       ===========================================================




பெயர் (04) ஆண் மகவுப் பெயர்கள் (பட்டியல்.2)

அன்னைத் தமிழைப் போற்றுவோம் ! அருந்தமிழில்  பெயர் சூட்டுவோம் !




{ஆண் குழந்தைகளுக்கான பெயர்கள்}

”ச” வரிசை முதல் “ப” வரிசை வரை

  1. சங்கத்தமிழன் 
  2. சங்குவண்ணன் 
  3. சங்கேந்தி 
  4. சந்தன வண்ணன் 
  5. சமரன் 
  6. சாதனைச்செல்வன் 
  7. சாமந்திவண்ணன் 
  8. சாலை இளந்திரையன் 
  9. சிந்தனைச்சிற்பி 
  10. சிந்தனைச்செல்வன் 
  11. சிலம்பன் 
  12. சிலம்புச்செல்வன் 
  13. சிவநேயன் 
  14. சிவமணி 
  15. சிவன் 
  16. சிற்பி 
  17. சிற்றம்பலம் 
  18. சிற்றம்பலன் 
  19. சிற்றரசன் 
  20. சிற்றரசு 

பெயர் (03) ஆண் மகவுப் பெயர்கள் (பட்டியல்.1)

அன்னைத் தமிழைப் போற்றுவோம் ! அருந்தமிழில்  பெயர் சூட்டுவோம் !



{ஆண் குழந்தைகளுக்கான பெயர்கள்}



”அ” வரிசை முதல் “க” வரிசை வரை


அடியார்
அதியமான்
அந்திவண்ணன்
அம்பலக்கூத்தன்
அம்பலவாணன்
அரங்கண்ணல்
அரங்கநம்பி
அரங்கவாணன்
அரசு
அரவணை
அரிமுகநம்பி
அரியணைநம்பி
அருட்கடல்
அருட்கோ
அருட்சுடர்
அருட்செல்வன்
அருண்மணி
அருண்மொழி
அருமறைநம்பி

பெயர் (02) பெண் மகவுப் பெயர்கள் (பட்டியல்.2)

அன்னைத் தமிழைப் போற்றுவோம் ! அருந்தமிழில்  பெயர் சூட்டுவோம் !



பெண்  குழந்தைகளுக்கான  பெயர்கள்.

[“த” வரிசை முதல் “வ” வரிசை வரை]
  1. தணிகைச்செல்வி
  2. தணிகைமதி
  3. தணிகைமலர்
  4. தண்ணிலா
  5. தண்மதி
  6. தண்மொழி
  7. தமிழரசி
  8. தமிழருவி
  9. தமிழழகி
  10. தமிழிசை
  11. தமிழொளி
  12. தமிழ்க்கடல்
  13. தமிழ்க்கனி
  14. தமிழ்க்குயில்
  15. தமிழ்க்கொடி
  16. தமிழ்க்கோதை
  17. தமிழ்ச்சுடர்
  18. தமிழ்ச்சுனை
  19. தமிழ்ச்செல்வி
  20. தமிழ்த்தென்றல்

பெயர் (01) பெண் மகவுப் பெயர்கள் (பட்டியல்.1)

அன்னைத் தமிழைப் போற்றுவோம் ! அருந்தமிழில்  பெயர் சூட்டுவோம் !


          
                பெண் குழந்தைகளுக்கான பெயர்கள்

                [“வரிசை முதல்வரிசை வரை]

  1. அகல்நிலா
  2. அகல்மதி
  3. அகல்விழி
  4. அங்கயற்கண்ணி
  5. அரசி
  6. அருட்செல்வி
  7. அருண்மொழி
  8. அருளரசி
  9. அருளழகி
  10. அருள்மதி
  11. அருள்விழி
  12. அலர்மகள்
  13. அலர்மதி
  14. அலர்மேல்மங்கை
  15. அலர்மொழி
  16. அலர்விழி
  17. அலைமகள்
  18. அலையரசி
  19. அலையழகி
  20. அல்லி