name='description'/> தமிழ்ப் பணி மன்றம்: நிழற்படம் (02) படமும் கதையும் !

திங்கள், அக்டோபர் 14, 2019

நிழற்படம் (02) படமும் கதையும் !

நினைவுகள் அழிவதில்லை !  கடந்தவையும் திரும்புவதில்லை !

-----------------------------------------------------------------------------------------------

புதுக்கோட்டை அரசினர் தொழிற் பயிற்சி நிலையத்தில் பண்டகக் காப்பாளராகப் பணி புரிந்த போது,  திருவாரூர் மாவட்டம், திருத்துறைப் பூண்டி வட்டம், இடும்பவனம் என்னும் ஊரில் உள்ள எனது தங்கை, இரா.கல்யாணி இராமமூர்த்தி வீட்டிற்குச் சென்றிருந்த போது எனது 26 - ஆம் அகவையில் (18-5-1970 அன்று) எடுத்துக் கொண்ட படம்.

-----------------------------------------------------------------------------------------------------------

புதுக்கோட்டை அரசினர் தொழிற் பயிற்சி நிலையத்தில், பண்டகக் காப்பாளராகப் பணி புரிந்த போது, எனது 27 -ஆம் அகவையில் (12-2-1971 அன்று) புதுக்கோட்டையில் பழைய பேருந்து நிலையம் அருகில் இருந்த  ஒரு நிழற்படக் கலையகத்தில்  எடுத்துக் கொண்ட படம். 

-------------------------------------------------------------------------------------------------------------

திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி வட்டம், சேரன்குளம் என்னும் ஊரில் உள்ள மாமனார் திரு. அர. இரகுநாத பிள்ளை அவர்கள்  வீட்டின் முன்பாக,  திருமணமான புதிதில் எனது 28 -ஆம் அகவையில் (10-7-1972 அன்று) எடுத்துக் கொண்ட படம்.

-------------------------------------------------------------------------------------------------------------

திருச்சி மாவட்டம், திருவெறும்பூர் அரசினர் தொழிற் பயிற்சி நிலையத்தில் பண்டகக் காப்பாளராகப் பணி புரிந்த போது, எனது 28 -ஆம் அகவையில் 2-7-1972 அன்று என் திருமணம் நிகழ்ந்தது. திருமணத்திற்குப் பின் 15-8-1972 அன்று திருவெறும்பூரில் உள்ள கெம்பு நிழற்படக் கலையத்தில் என் மனைவியுடன் எடுத்துக் கொண்ட படம்.

-------------------------------------------------------------------------------------------------------------

எனது திருமணத்திற்குப் பின்  என் 28 -ஆம் அகவையில் (15-8-1972 அன்று ) திருவெறும்பூரில் உள்ள கெம்பு நிழற்படக் கலையகத்தில்  நான் எடுத்துக் கொண்ட நிழற்படம்.

-------------------------------------------------------------------------------------------------------------

1 கருத்து:

உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன .