பதினெட்டு இலக்கியங்கள் “பதினெண் கீழ்க் கணக்கு” என்னும் பெயரில் வகைப்படுத்தித் தொகுக்கப்பட்டுள்ளன !
தமிழ் இலக்கியங்கள் மூன்று
தலைப்புகளில் வகைப் படுத்தப்பட்டு உள்ளன ! அவை
(01) பத்துப் பாட்டு (02) எட்டுத் தொகை
(03) பதினெண் கீழ்க்கணக்கு ! பதினெண் கீழ்க் கணக்கில்
18 நூல்கள் இடம்பெற்றுள்ளன !
பதினெண் கீழ்க் கணக்கு
நூல்கள் வருமாறு :- (01) நாலடியார் (02) நான்மணிக் கடிகை (03) இன்னா நாற்பது (04) இனியவை நாற்பது (05) கார் நாற்பது (06) களவழி நாற்பது (07) ஐந்திணை ஐம்பது (08( ஐந்திணை எழுபது (09) திணைமொழி ஐம்பது (10) திணைமாலை நூற்றைம்பது
(11) திருக்குறள் (12) திரிகடுகம் (13)
ஆசாரக் கோவை (14) பழமொழி நானூறு (15) சிறுபஞ்சமூலம் (16) முதுமொழிக் காஞ்சி (17) ஏலாதி (18) கைந்நிலை !
இந்நூல்களை நினைவில் வைத்துக்
கொள்ளும்வகையில் ஒரு வெண்பா உள்ளது.அது வருமாறு
:-
--------------------------------------------------------------------------------------------
நாலடி, நான்மணி, நானாற்பது, ஐந்திணை,
முப்-
பால்,கடுகம், கோவை, பழமொழி, மாமூலம்,
இன்னிலைய காஞ்சியுடன், ஏலாதி, என்பவும்,
கைந்நிலையும், ஆம்கீழ்க் கணக்கு !
------------------------------------------------------------------------------------------
---------------------------------------------------------------------------------------------------------
பதினெண் கீழ்க்கணக்கு நூல்களை
இயற்றிய புலவர்கள், அந்நூல்களில் அடங்கியுள்ள பாடல்கள்
எண்ணிக்கை, அவை தோன்றிய காலம் (நூற்றாண்டு),
அந்நூல்களின் வகை (அறம்/ அகம்/ புறம்) ஆகிய விவரங்கள் அடியில்
தரப்பட்டுள்ளன !
---------------------------------------------------------------------------------------------------------
நாலடியார் –
400 பாடல் - சைன முனிவர்கள் - கி.பி.7- (அறநூல்)1/11
நான்மணிக்கடிகை –
400 பாடல் – விளம்பி நாகனார் – கி.பி.6- (அறநூல்)2/11
இன்னா நாற்பது –
40 பாடல் – கபிலர் – கி.பி.5- (அறநூல்)3/11
இனியவை நாற்பது –
40 பாடல் – பூதஞ்சேந்தனார் - கி.பி.5- (அறநூல்)4/11
கார் நாற்பது –
40 பாடல் – மதுரை கண்ணங் கூத்தனார்- கி.பி.6- (அகம்)1/6
களவழி நாற்பது –
40 பாடல் – பொய்கையார் - கி.பி.5- (புறம்)1/1
ஐந்திணை ஐம்பது –
50 பாடல் – மாறன் பொறையனார்
- கி.பி.6- (அகம்)2/6
ஐந்திணை எழுபது –
70 பாடல் – மூவாதியார் - கி.பி.6- (அகம்)3/6
திணைமொழி ஐம்பது –
50 பாடல் – கண்ணம்பூதனார் - கி.பி.6- (அகம்)4/6
திணைமாலை நூற்றைம்பது –
150 பாடல் – கணிமேதாவியார் - கி.பி.6-. (அகம்)5/6
முப்பால் –
1330 பாடல் – திருவள்ளுவர் - கி.மு.1- (அறநூல்)5/11
திரிகடுகம் –
100 பாடல் – நல்லாதனார் - கி.பி.4- (அறநூல்)6/11
ஆசாரக் கோவை –
100 பாடல் – பெருவாயின் முள்ளியார் - கி.பி.7- (அறநூல்)7/11
பழமொழி –
400 பாடல் – முன்றுரை அரையனார் - கி.பி.6- (அறநூல்)8/11
சிறுபஞ்சமூலம் –
100 பாடல் – காரியாசான் - கி.பி.6- (அறநூல்)9/11
முதுமொழிக் காஞ்சி –
100 பாடல் – மதுரைக்
கூடலூர் கிழார் - கி.பி.4- (அறநூல்)10/11
ஏலாதி –
80 பாடல் – கணிமேதாவியார் - கி.பி.6- (அறநூல்)11/11
கைந்நிலை –
60 பாடல் – புல்லங்காடனார் - கி.பி.7- (அகம்)6/6
----------------------------------------------------------------------------------------------------------
திருக்குறள் தவிர ஏனைய
நூல்கள அனைத்தும் கி.பி 4 –ஆம்
நூற்றாண்டு அல்லது அதற்குப் பின் தோன்றியவை. இக்காலத்தில் தான்
வடமொழி மேலாண்மை தமிழகத்தில் துளிர்விடத் தொடங்கியது. ஆகவே,
இந்நுல்களில் வடமொழிச் சொற்கள் கலப்பு காணப்படுகின்றன. !
ஆசாரக் கோவை, வடமொழி நூல்களைத் தழுவி எழுதப் பெற்ற ஒன்று என்பது அறிஞர்களின் கருத்து.
இந்நூலிற் கூறப்பட்டுள்ள ஒழுக்கங்கள் சில இக்காலத்திற்கு ஏற்றதாக இல்லை
என்று பல அறிஞர்கள் கருதுகின்றனர் !
படித்துப் பயனடைய வேண்டிய
பல கருத்துகள் கீழ்க்கணக்கு நூல்களில் நிரம்பவும் இடம்பெற்றுள்ளன ! தமிழ் கூரும் நல்லுலகம் இவற்றைப் படித்துப் பயன் பெறுமாக !
----------------------------------------------------------------------------------------------------------
ஆக்கம் + இடுகை,
வை.வேதரெத்தினம்,
ஆட்சியர்,
தமிழ்ப் பணி மன்றம்.
[தி.ஆ:2050,ஆடவை,19]
{4-7-2019}
----------------------------------------------------------------------------------------------------------
”தமிழ்ப் பணி மன்றம்”
முகநூற் குழுவில் வெளியிடப் பெற்ற
கட்டுரை !
----------------------------------------------------------------------------------------------------------
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன .