வேறுபாடுகளைப் புரிந்து கொள்வோம் !
01. அரம்....................= ஒரு கருவி
02. அறம்...................= தருமம்
03. அரி.......................= அறுத்தல்
04. அறி......................= தெரிந்துகொள்
05. அரவு....................= பாம்பு
06. அறவு...................= நீக்கம்
07. அருகு..................= பக்கம்
08. அறுகு..................= அறுகம்புல்
09. அரை....................= பாதி
10. அறை....................= வீட்டின் அறை
11. அலரி....................= ஒருவகை பூ
12. அலறி...................= கதறி
13. இரப்பு....................= பிட்டை எடு
14. இறப்பு..................= மரணம்
15. இரை....................= தீனி
16. இறை...................= சிதறு
17. உரை....................= சொல்
18. உறை...................= மூடி
19. எரி.........................= தீ
20. எறி........................= வீசு
21. கர..........................= ஒளிந்துகொள்
22. கற.........................= பால் கற
23. கரி.........................= அடுப்புக்கரி
24. கறி........................= இறைச்சி
பிழையின்றி எழுதுவோம்
ரகர, றகரச் சொற்களின் வேறுபாடு
01) கரை......................= ஓரம்
02) கறை.....................= களங்கம்
03) குரங்கு..................= வானரம்
04) குறங்கு.................= தொடை
05) குரவன்.................= பெரியோன்
06) குறவன்................= ஒரு குலத்தான்
07) குரவை..................= கூத்து
08) குறவை.................= ஒரு மீன்
09) குரு.........................= ஆசிரியர்
10) குறு...........................= குட்டையான
11) குரும்பை...............= பனம்பிஞ்சு
12) குறும்பை...............= ஓர் ஆடு
13) குரைத்தல்.............= நாய் குரைப்பு
14) குறைத்தல்............= சுருக்குதல்
15) கூரிய ....................= கூர்மையான
16) கூறிய.....................= சொல்லிய
17) கூரை.......................= வீட்டின் கூரை
18) கூறை......................= புடைவை
19) சீரிய.........................= சிறந்த
20) சீறிய.........................=கோபித்த
21) சுருக்கு.....................= சுருங்கச் செய்
22) சுறுக்கு.....................= விரைவு
23) சுரா............................= கள்
24) சுறா...........................= ஒருவகை மீன்
பிழையின்றி எழுதுவோம்
ரகர, றகரச் சொற்களின் வேறுபாடு
01) செரித்தல்.............= .உணவு அற்றல்
02) செறித்தல்.............= திணித்தல்.
03) சொரி......................= பொழி
04) சொறி.....................= தினவு நோய்
05) தரி............................= அணி
06) தறி...........................= வெட்டு
07) தார்..........................= பூமாலை
08) தாறு........................= குலை
09) துரவு.......................= பெரிய கிணறு
10) துறவு......................= ஆசை ஒழித்தல்
11) துரை.......................= தலைவன்
12) துறை.......................= நீர்த்துறை
13) நரை.........................= வெண்முடி
14) நறை.......................= தேன்
15) நிருத்தம்................= நடனம்
16) நிறுத்தம்................= நிறுத்துமிடம்
17) நிரை........................= வரிசை
18) நிறை......................= நிறைவு, எடை
19) நெரி.........................= நசுக்கு
20) நெறி.......................= வழி
21) பரந்த......................= பரவலான
22) பறந்த.....................= பறந்து சென்ற
23) பரவை...................=.கடல்
பிழையின்றி எழுதுவோம்
ரகர, றகரச் சொற்களின் வேறுபாடு
01) பரி............................= குதிரை
02) பறி...........................= பிடுங்கு
03) பரை........................= பார்வதி
04) பறை.......................= பரிசு
05) புரம்.........................= பட்டணம்
06) புறம்........................= வெளி
07) பொரி......................= நெற்பொரி
08) பொறி.....................= தீட்டு, எழுது
09) பொரு.....................= போர் செய்
10) பொறு.......................= தாங்கு
11) பொருப்பு.................= மலை
12) பொறுப்பு.................= கடமை
13) மர..............................= உணர்ச்சி அறு
14) மற.............................= மறந்து போ
15) மரம்..........................= விருட்சம்
16) மறம்.........................= வீரம்
17) மருகி........................= மருமகள்
18) மறுகி.......................= தயங்கி
19) மரை........................= திருகு சுரை
20) மறை.......................= வேதம்
21) மாரன்......................= மன்மதன்
22) மாறன்.....................= பாண்டியன்
23) விரகு.......................= தந்திரம்
24) விறகு......................= எரிக்கும் கட்டை
பிழையின்றி எழுதுவோம்
"ளகர"," ழகர"ச் சொற்களின் வேறுபாடு
01. அளகு....................=.கோழி
02. அழகு....................= எழில்
03. ஆளி......................= சிங்கம்
04. ஆழி.......................= கடல்
05. உளவு.....................= வேவு
06. உழவு.....................= பயிர்த்தொழில்
07. ஒளி........................= மறை
08. ஒழி.........................= நீக்கு
09. கிளவி.....................= சொல்
10. கிழவி......................= முதியவள்
11. குளவி.....................= வண்டு வகை
12. குழவி......................= குழந்தை
13. குளம்பு....................= விலங்கின் ஐ
14. குழம்பு.....................= கலக்கம் உறு
15. குளி..........................= நீரில் மூழ்கு
16. குழி...........................= பள்ளம்
17. கேள்.........................= செவி கொடு
18. கேழ்..........................= ஒளி
19. கோளி......................= கொள்பவன்
20. கோழி.......................= பறவை வகை
21. சுளி............................=முகம் கோணு
22. சுழி.............................= வட்டமிடு
23. வளி...........................= காற்று
24. வழி............................= பாதை
-------------------------------------------------------------------------
-------------------------------------------------------------------------
ஆக்கம் + இடுகை,
வை.வேதரெத்தினம்,
ஆட்சியர்,
தமிழ்ப் பணி மன்றம்.
{23-12-2018
-------------------------------------------------------------------------
-------------------------------------------------------------------------
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன .