எண்களையும் விட்டுக் கொடுத்து ஏமாளி ஆகலாமா?
பள்ளிப்பருவத்தில்
நமது ஆசிரியர்கள் இரண்டு வகை எண்களை நமக்குச் சொல்லித் தந்தது நினைவிருக்கலாம்.. அவற்றுள் ஒன்று அரபு எண்கள் எனச் சொல்லப்பட்டன. அவை
1, 2, 3, 4, 5, 6 எனத் தொடர்ந்து வருபவை. இரண்டாவது
உரோமன் எண்கள் எனப்பட்டன. அவை I, II, III, IV, V, VI எனத் தொடர்ந்து வருபவை !
உலகத்திலேயே
தொன்மையான மொழி எனச் சான்றுகளுடன் நிறுவப்பட்டிருப்பது தமிழ். தமிழ் நூல்களுள் தொல்காப்பியம் கி.மு. 3000 ஆண்டுகளுக்கு முற்பட்டது எனக் கூறப்படுகிறது !
“எழுத்து எனப்படுப அகரம் முதல் னகர இறுவாய் முப்பஃது என்ப” என்னும் தொகாப்பிய நூற்பாவினால் தொல்காப்பியர் காலத்திலேயே “எண்கள்” பயன்பாட்டில் இருந்தன என்பது புலப்படுகிறது !
இவ்வாறிருக்கையில், அரபு எண்கள், உரோமன் எண்கள் மட்டுமே நமக்குச்
சொல்லித் தரப்பட்டு தமிழ் எண்கள் நமக்குச் சொல்லித் தரப்படாமைக்குக் காரணம் என்ன
? தமிழில் “எண்கள்” இல்லாமலா
இருந்தன ?
தமிழில்
எண்களைக் குறிக்க “க, உ,
ங, ச, ரு ...” போன்ற எழுத்துகள் பயன்பாட்டில் இருந்தன என்பதை நாம் அறிவோம். அவை உங்கள் பார்வைக்காக மீளத் தரப்படுகின்றன !
இவற்றை “எழுத்துகள்” எனக் குறிப்பிடுவதை விட “குறியீடுகள்” என்று சொல்வதே பொருந்தும். ஏனெனில், க, உ, ரு, எ, அ என்பவை மட்டுமே
“எழுத்து” வடிவில் இருப்பவை. 3, 4, 6, 9 ஆகியவற்றைக் குறிப்பவை “எழுத்துகள்” அல்ல.
அவை வெறும் குறியீடுகளே !
”க” முதல் ”க0” அல்லது ”ய” வரை
எண்களைக் குறிக்கும் குறியீடுகள் மட்டுமே “தமிழ்
எண்கள்” எனவும் “1,
2, 3, 4, 5, 6, 7, 8, 9 …… ஆகியவை
அரபு எண்கள் எனவும் ஒரு கருத்து பரவலாக மக்கள் மனதில் பதிவாகி இருக்கிறது. இது
உண்மை தானா என்பதைச் சற்று ஆய்வு செய்வோம் !
இக்காலத்தில் தமிழில் வழக்கில் உள்ள அ, ஆ, இ, ஈ
போன்ற எழுத்துகளின் வரி வடிவங்கள் பண்டைக் காலத்தில் இல்லை. அப்போது
இருந்த வரி வடிவங்கள் மெல்ல மெல்ல உரு மாற்றம் அடைந்து இப்போதுள்ள எழுத்துகளாக படிமுறை வளர்ச்சி (பரிணாம
வளர்ச்சி) பெற்றுள்ளன ! (இது பற்றிய செய்தி தனிப்பதிவில்
தரப்பட்டுள்ளது.)
எழுத்துகளின் வரி வடிவம் போலவே, பண்டைக் காலத் “தமிழ் எண்”களின்
குறியீடுகளில் ( க, உ முதலியவை ) சிற்சில மாற்றங்கள் (படிமுறை
வளர்ச்சி) ஏற்பட்டு 1,
2, 3, 4, 5, 6, 7, 8, 9 என இப்போதைய
நிலையை அடைந்துள்ளன !
மேலே
உள்ள பட்டியலைப் பாருங்கள். “ க ” என்னும்
குறியீட்டுக்குள் “ 1 ” இருப்பதைக் காணலாம். “ உ” என்னும் குறியீட்டுக்குள் “ 2 ” இருப்பதைக் காணலாம். “ ரு ” என்னும்
குறியீட்டுக்குள் “ 5 “ இருப்பதைக் காணலாம்.
அடியில்
தரப்பட்டுள்ள படத்தைப் பாருங்கள் ! பண்டைக் காலத்தில்
எண்களைக் குறிக்கப் பயன்படுத்தப்பட்டு வந்த “குறியீட்டுக்குள்”
இப்போது பயன்பாட்டில் உள்ள “1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 போன்ற எண்கள் உள்ளொடுங்கி நிற்பதைக் காணலாம் !
இதிலிருந்து
உங்களுக்கு ஒரு செய்தி தெளிவாகி இருக்கும். 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9,
என்பவை தமிழ் எண்களே ! அவை அரபு எண்களல்ல
! இந்தியா முழுவதும் – ஏன் பெரும்பாலான உலக
நாடுகளில் 1, 2, 3, 4, 5 6, 7, 8, 9, என்னும் தமிழ் எண்களே
பயன்பாட்டில் உள்ளன என்பது நமக்குப் பெருமையே !
கிரேக்க நாகரிகத்தைப் போல பழம் பெரும்
நாகரிகத்திற்குச் சொந்தக் காரர்களான தமிழர்களின் கொடை – உலக
நாடுகளுக்கு அளித்த கொடை - தான் 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, என்னும்
தமிழ் எண்கள் என்பதை உலகெங்கும் பறைசாற்றி ஓங்கி ஒலித்திடுவோம் !
---------------------------------------------------------------------------------------------------------
ஆக்கம் + இடுகை”
வை.வேதரெத்தினம்,
ஆட்சியர்,
தமிழ்ப் பணி மன்றம்.
[தி.ஆ:2050,மேழம்,30]
{13-05-2019}
----------------------------------------------------------------------------------------------------------
”தமிழ்ப் பணி மன்றம்” முகநூற் குழுவில் வெளியிடப் பெற்ற
கட்டுரை !
---------------------------------------------------------------------------------------------------------------------------
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன .