புதுச்சொல் புனைவோம் !
VICE = கதுவை
--------------------------------------------------------------------------------------------------
பணிமனைகளில் எந்தப்
பொருளையும் திருத்தம் செய்வதற்கு முன்பு அதை நழுவாமல் இறுக்கமாகக் கவ்விப்
பிடிப்பதற்கு வைஸ் (Vice) என்னும் பிடிகருவியைப் பயன்படுத்துவதைப் பார்த்திருப்பீர்கள் !
இந்தக் கருவியின் தாடைகளுக்கு இடையில் திருத்தம் செய்ய வேண்டிய பொருளை நிறுத்தி தாடைத் திருகு மூலம் இறுக்கி விட்டால், முதலைப் பிடிதான். பொருள் நழுவ முடியாது !
இறுக்கமாகக் கவ்விப் பிடித்தல் என்பதைக் குறிக்கத் தமிழ் இலக்கியங்களில் “ கதுவு “ , “ கதுவுதல் “ என்னும் சொற்கள் கையாளப் பட்டுள்ளன. “ பொதி இரை கதுவிய போழ் வாய் வாளை “ என்பது பெரும் பாணாற்றுப் படை என்னும் இலக்கியத்தில் காணப்படும் வரி ! (வரி : 287).
இதே இலக்கியத்தில் வேறு ஒரு
இடத்தில் “
கொடு வாள் கதுவிய வடு ஆழ்
நோன் கை “ என்ற வரி வருகிறது ! (வரி ; 471)
வைஸ் என்பதை “ பிடிச்சிராவி “ “ பிடிப்பான் “ “ பிடி தண்டு “ என்று பலவாறாக அழைக்கின்றனர். இவற்றில் ஒலி நயமும் இல்லை; சுருங்கிய வடிவும் இல்லை !
கதுவும் (கவ்விப் பிடிக்கும்) செயலைச் செய்கின்ற கருவியைக் “ கதுவை “ என்று அழைக்கலாமே ! பொருள் நயமும் இருக்கிறது ! ஒலி நயமும் இருக்கிறது ! சுருங்கிய வடிவும் இருக்கிறது ! கதுவையின் அடிப்படையில் பிறக்கின்ற பிற சொற்களையும் பாருங்கள் !
===========================================================
VICE............................. .= கதுவை
BENCH VICE.................= விசிக் கதுவை
LEG VICE.......................= நிலைக் கதுவை
MACHINE VICE..............= பொறிக் கதுவை
PIPE VICE......................= புழல் கதுவை
CARPENTER'S VICE.....= தச்சுக் கதுவை
PNEUMATIC VICE.........= காற்றியல் கதுவை.
==========================================================
ஆக்கம் + இடுகை,
வை.வேதரெத்தினம்,
(veda70.vv@gmail.com)
ஆட்சியர்,
“தமிழ்ப் பணி மன்றம்” முகநூல்.
{13-12-2015}
==========================================================
நல்ல தமிழ்ச்சொல்.
பதிலளிநீக்குஅருமையான பதிவு...
மகிழ்ச்சி ! நன்றி !
நீக்குஅரியதோர் ஆய்வு ! கதுவை நல்ல தமிழ்ச் சொல் ! பயன்படுத்தத் தக்கதே ! மகிழ்ச்சி !
பதிலளிநீக்குநன்றி !
பதிலளிநீக்குஅரிய முயற்சி ! சொல் தேர்வு நன்று !
பதிலளிநீக்குமகிழ்ச்சி!
பதிலளிநீக்கு