name='description'/> தமிழ்ப் பணி மன்றம்

செவ்வாய், டிசம்பர் 15, 2015

புதிய தமிழ்ச் சொல் (22) சத்துணி ( CHUTNEY )

புதுச்சொல் புனைவோம் !



CHUTNEY = சத்துணி 
--------------------------------------------------------------------------------------------------------

உணவுப் பொருள்களான அரிசி, காய்கள், கிழங்கு, கீரை முதலியவை சமைத்துப் பயன்படுத்தப்பட்டால் அதில் உள்ள சத்துப் பொருள்கள் பெருமளவுக்கு அழிந்து விடுகிறன என்பதைப் படித்திருக்கிறோம் !

அவித்தல், வறுத்தல், பொரித்தல், வதக்கல் போன்ற சமையல் செயல்பாடுகளின் போது இவற்றில் உள்ள உயிர்ச்சத்துக்கள் (Vitamins) பெருமளவு அழிந்து போகின்றன. இறுதியில் உயிச்சத்துக்களை இழந்துவிட்டு, சத்துக் குறைந்த வெறும் சக்கைகளைத்தான் நாம் உண்கிறோம் !