வணக்கம் சொல்வது எப்படி என்பது பற்றி மக்களிடையே போதுமான புரிதல் இல்லை !
***************
இரண்டு பேர் சந்தித்துக் கொள்ளும் போது வணக்கம் சொல்லுதல் என்பது ஒரு நல்ல பண்பாடு ! இரண்டு பேரும் தமது பேச்சைத் தொடங்குவதற்கு இது முன்னோட்டமாக அமையும் ! சீறூர்களில் (கிராமங்களில்) வணக்கம் சொல்பவர்களும் இருக்கிறார்கள்; இதற்கு மாற்றாக “வாங்க அண்ணே” “வாங்க மாமா” “வாம்மா மல்லிகா” என்று விளித்துப் பேச்சைத் தொடங்குபவர்களும் உண்டு !
நாம்
சந்திப்பவர் நமது நண்பராகவும் இருக்கலாம்;
அல்லது
நமது மனதிற்கு உகந்தவராக இல்லாமலும் இருக்கலாம்
! எதிரில் வருபவர் நம்முடன் பகைமை பாராட்டுபவராக இருந்தால்,
அவரைக்
கண்டவுடன் நம் மனதில்
ஓர் இறுக்கம்
தோன்றும். அந்த இறுக்கத்துடன்
நாம் பேச்சைத் தொடங்க முடியாது. இறுக்கம்
விலகிட இந்த வணக்கம் சொல்லும் முறை கைகொடுக்கிறது
!
வணக்கம்
சொல்வதற்கென்று ஏதேனும் மரபுகள் இருக்கின்றவா
? ஆம் ! மரபுகள்
இருக்கின்றன ! ஆனால்
அவற்றை எத்தனை பேர் பின்பற்றுகிறார்கள் என்று ஆய்வு செய்தால்,
நமக்கு
ஏமாற்றம் தான் மிஞ்சும் ! எப்படி
வணக்கம் சொல்வது என்பது பற்றிப் போதுமான புரிதல் இல்லாமலேயே செயற்கைத் தனமாக வணக்கம்
சொல்வோர் நிரம்பவே இருக்கிறார்கள் !
ஒருநாள்
பிற்பகல் இரண்டு மணி அளவில் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தேன்.
அஞ்சற்காரர்
(POST-MAN) எதிரில் வந்தார்.
என்னைப்
பார்த்துவிட்டு ஈருருளியிலிருந்து (BI-CYCLE) இறங்கியவர்
”குட் மாணிங் சார்.
உங்களுக்கு
ஒரு கடிதம் வந்திருக்கிறது “ என்று
சொல்லிக் கடிதத்தை என்னிடம் கொடுத்தார் !
“தம்பி
! இப்பொழுது நேரம் என்ன
? “ “மணி இரண்டு சார்”
“இது காலை நேரமா
?” “இல்லையே !” ”அப்புறம்
ஏன் குட் மாணிங் என்று வணக்கம் சொல்கிறாய்
?”
இன்றைக்கு
முதன்முதலாக இப்பொழுது தானே உங்களைப் பார்க்கிறேன்.
அதனால்
தான் குட்
மாணிங் என்று சொன்னேன்”
சரி
! இப்பொழுது பிற்பகல் நேரம்
! அடுத்து மாலை நேரம்
வரப்போகிறது. இன்று நீ மீண்டும்
என்னைப் பார்க்கப் போவதில்லை. அப்படியானால்
எனக்கு “குட் ஆப்டர் நூன்”,
”குட் ஈவினிங்
“ ஆகிய வணக்கங்களை எப்போது சொல்லப் போகிறாய்
?”
அஞ்சற்காரர் செய்வதறியாது தடுமாறினார்
! அவரைப் பார்க்க இரக்கமாக இருந்தது
!
நானே
விடை இறுத்தேன். ”தம்பி
! ஒரு நாளில், முதன்முதலாக
எப்போது, எந்த வேளையில் பார்த்தாலும்
“குட் மாணிங்” என்று வணக்கம் சொல்ல வேண்டும் என்பது தவறு.
முதன்முதல் காலையில்
பார்த்தால் “குட் மாணிங்”.
பிற்பகலில்
பார்த்தால் “குட் ஆப்டர்நூன்”
“மாலையில் பார்த்தால்
“குட் ஈவினிங்”.
அவ்வளவு
தான் !
”முதன்முதல்”
என்பதை
மறந்து விடு. எப்போது பார்க்கிறாயோ
அந்த வேளைக்குத் தக்கபடி வணக்கம் சொல்வதே சரி
! பிற்பகலில் பார்த்தால்
“குட் ஆப்டர்நூன்”
! மாலையில் பார்த்தால்
“குட் ஈவினிங்”
முதன்முதல்
எப்போது பார்க்கிறாய் என்பதைக் கருத்திற் கொள்ளாதே
!
”சரி
ஐயா ! என் அறியாமையைப் போக்கி விட்டீர்கள்
! இனி தவறு செய்ய மாட்டேன்
! மிக்க நன்றி ! வருகிறேன்
!”
”காலை
வணக்கம்” ”மாலை
வணக்கம்” என்பதெல்லாம் ஆங்கிலேயர்கள்
பண்பாடு. தமிழ்ப் பண்பாடு
“வணக்கம்” மட்டுமே
! எப்போது யாரைக் கண்டாலும்
“வணக்கம் அய்யா “வணக்கம் அம்மா”
என்று
சொல்லிப் பழகுவோம் !
“காலை
வணக்கம்” “நண்பகல்
வணக்கம்”, “மாலை
வணக்கம்”, “இரவு
வணக்கம்” என்பதெல்லாம் நமக்கு
ஒத்து வராது. ஆங்கிலேயர்களின் வழக்கத்தைப்
பின்பற்றுவதால் விளைந்த தவறே பிற்பகல் நேரத்தில் கூட
“குட் மாணிங்” சொல்வது.
இனி
எந்த நேரம் என்றாலும் “வணக்கம்”
என்றே
சொல்வோமே !
-----------------------------------------------------------------------------------------------------------
ஆக்கம் + இடுகை:
வை.வேதரெத்தினம்,
(veda70.vv@gmail.com)
ஆட்சியர்,
தமிழ்ப் பணி மன்றம்.
தி.பி: 2051, கன்னி (புரட்டாசி),14]
{30-09-2020}
----------------------------------------------------------------------------------------------------------
தமிழ்ப் பணி மன்றம் முகநூற் குழுவில் வெளியிடப் பெற்ற
கட்டுரை !
----------------------------------------------------------------------------------------------------------