சங்க கால இலக்கியமான நான்மணிக்கடிகை முழுவதும் வெண்பாக்களால் ஆனது. ஒன்னொரு
பாடலிலும் நந்நான்கு கருத்துகள் சொல்லப்படுகின்றன ! ”மதி மன்னு மாயவன் வாள்முகம் ஒக்கும்” என்னும் கடவுள் வாழ்த்துப் பாடலின் மூலம் இந்நூலாசிரியர் திருமால்
வழிபாட்டினர் என்பது புலனாகிறது ! இதிலிருந்து ஒரு பாடல் !
--------------------------------------------------------------------------------------------------------
---------------------------
கற்பக் கழிமடம் அஃகும் மடம்அஃகப்
புற்கந்தீர்ந் திவ்வுலகின் கோளுணருங் கோளுணர்ந்தால்
தத்துவ மான நெறிபடரும் அந்நெறி
இப்பா லுலகின் இசைநிறீஇ - உப்பால்
உயர்ந்த உலகம் புகும்.
(ஐந்து அடிகள்
கொண்ட வெண்பாவாதலால், இதைப் பஃறொடை வெண்பா என்பர்)
-------------------------------------------------------------------------------------------------------
பொருள்:
----------------
அறிவார்ந்த நூல்களைக் கற்கக் கற்க,
மனிதனிடம் குடிகொண்டுள்ள அறியாமை
மெல்லெ மெல்லக் குறைகிறது
!
அறியாமை குறையக் குறைய அவனிடம் நிறைந்திருக்கும் புல்லறிவு (முட்டாள்தனம்)
நீங்கி , இவ்வுலகத்தைப் புரிந்து கொள்கிறான் !
உலக இயல்பைப் புரிந்து கொண்ட பின்
, உண்மையான அருள் நெறியில் நடைபயிலத் தொடங்குகிறான் !
அருள்நெறியில் ஒழுகத் தொடங்குவதால்
, இம்மையில் புகழை ஈட்டுவதுடன், மறுமையில் வீடுபேறும் எய்துகிறான்
!
--------------------------------------------------------------------------------------------------------
-------------------------------------
கற்ப = ஒருவன்
அறிவு நூல்களைக் கற்பதனால் ; கழிமடம் = மிக்க அறியாமை
; அஃகும் = குறையப் பெறுவான் ; மடம்
அஃக = அறியாமை குறைய ; புற்கம் தீர்ந்து
= புல்லறிவு நீங்கி ; இவ்வுலகின் = இவ்வுலகத்தின்
; கோள் உணரும் = இயற்கையைப் புரிந்து கொள்வான் ; (கோள் = இயல்பு,
இயற்கை) கோள் உணர்ந்தால் = அவ்வியற்கையை
அறிந்து கொண்டால் ; தத்துவமான = உண்மையான
; நெறி படரும் = அருள் நெறியில் செல்வான் ; அந்
நெறி = அந் நெறியினால் ; இப்பால்
உலகின் = இவ்வுலகின்கண் ; இசைநிறீஇ
= புகழ் நிறுத்தி ; உப்பால் = மறுமையில்
; உயர்ந்த உலகம் புகும் = உயர்ந்த வீடு பேறு அடைவான்.
------------------------------------------------------------------------------------------------------
----------------------
இப்பாடல் நான்மணிக் கடிகைக்கு
உரிய பாடலாகத்
தெரியவில்லை; இடைச்செருகல் போல் தோன்றுகிறது. ”தத்துவம்
” என்ற தமிழல்லாச் சொல் இடம்பெற்றிருப்பதும், இம்மை, மறுமை போன்ற கருத்துகள் புகுத்தப் பெற்றிருப்பதும் இடைச்செருகல்
என்பதை உணர்த்துகிறது
!
-----------------------------------------------------------------------------------------------------
ஆக்கம் + இடுகை;
வை.வேதரெத்தினம்,
ஆட்சியர்,
தமிழ்ப் பணி மன்றம்.
[தி.ஆ:2050,மடங்கல்(ஆவணி),31]
{17-09-2019}
-----------------------------------------------------------------------------------------------