பொதுப்புணர்ச்சி
நூற்பா.160 (வினாப் பெயர், விளிப் பெயர் முன் வல்லினம்) (பக்.127
ஈற்று ‘யா’ வினாவிளிப் பெயர்முன் வலி இயல்பே. (நூற்பா.160)
ஆ, ஏ, ஓ என்னும் மூன்று ஈற்று வினா முன் வரும் வலி இயல்பாகும் (பக்.127) (நூற்பா.160)
சாத்தனா + கொண்டான் = சாத்தனா கொண்டான்.
சாத்தனே + கொண்டான் = சாத்தனே கொண்டான்.
சாத்தனோ + கொண்டான் = சாத்தனோ கொண்டான்.
’யா’ என்னும் வினா முன் வரும் வல்லெழுத்து இயல்பாகும் (பக்.127)
யா + கொண்டான் = யா கொண்டான். (நூற்பா.160)
உயிர் ஈறும், மெய் ஈறுமாகிய விளிப் பெயர்கள் முன்
வரும் வல்லெழுத்து இயல்பாகும் (பக்.127)
நம்பி + கொள் = நம்பி கொள்(நூற்பா.160)
விடலை + கொள் = விடலை கொள்.
கிள்ளாய் + கொள் = கிள்ளாய் கொள்.
தாய் + கொள் = தாய் கொள்.
------------------------------------------------------------------------------------------------------
ஆக்கம் + இடுகை,
[veda70.vv@gmail.com]
ஆட்சியர்,
தமிழ்ப் பணி மன்றம் முகநூல்.