(04)மெய் ஈற்றுப் புணரியல்
மெய் ஈற்றின் முன் மெய்.
நூற்பா.219. (மகரத்தின் முன் நாற்கணமும் புணர்தல் )
’ம”வ்வீறு ஒற்றழிந்து உயிர் ஈறு ஒப்பவும்
வன்மைக்கு இனமாகத் திரியவும் ஆகும் (நூற்பா.219)
மகர ஈற்றுச் சொற்களின் முன் உயிர் வந்தால்,அவை உடம்படு மெய் பெறும்;
வல்லினம் வந்தால் மிகும்;
மெல்லினமும்
இடையினமும் வந்தால் இயல்பாகும்.
வருமொழி முதலில் உயிரெழுத்து வருகையில் , நிலைமொழி ஈற்றில்
நிற்கும் “ம”கர ஒற்று கெட்டு, உயிர் ஈறு போல (உடம்படு மெய் பெற்றுப்)
புணரும்.(பக்.177) (நூற்பா.219)
மரம் + அடி = மரவடி (பக்.177)
அரம் + அடி = அரவடி
(வேற்றுமையில் உயிரீறு போல்
உடம்படு மெய் பெற்றுமுடிந்தன)
வட்டம் + ஆழி = வட்டவாழி (பக்.177)
பவளம் + இதழ் = பவளவிதழ் (பக்.177)
(அல்வழியில் உயிர் ஈறு போல்
உடம்படு மெய் பெற்று முடிந்தன.)
வருமொழி முதலில் வல்லெழுத்து வருகையில் , நிலைமொழி ஈற்றில்
நிற்கும் “ம”கர ஒற்று கெட்டு, உயிரீறு போல் (வல்லெழுத்து மிகும்) புணரும்.
(பக்.177) (நூற்பா.219)
மரம் + கோடு
= மரக்கோடு (பக்.177)
மரம் + கிளை
= மரக்கிளை
(வேற்றுமையில் உயிரீறு போல்
(வல்லெழுத்து மிக்கு) முடிந்தன)
வட்டம் + கல்
= வட்டக்கல் (பக்.177)
திட்டம் + செலவு
= திட்டச் செலவு.
(அல்வழியில் உயிரீறு போல்
(வல்லெழுத்து மிக்கு) முடிந்தன)
வருமொழி முதலில் மெல்லெழுத்து வருகையில் , நிலைமொழி ஈற்றில்
நிற்கும் “ம”கர ஒற்று கெட்டு, உயிரீறு போல் (இயல்பாக) புணரும்.(பக்.177)
(நூற்பா.219)
மரம் + நார்
= மரநார் (பக்.177)
அரம் = மடி
= அரமடி
(வேற்றுமையில் உயிரீறு போல்
(இயல்பாக ) முடிந்தன)
மரம் + நெடிது
= மரநெடிது
அரம் + மிகுதி
= அரமிகுதி
(அல்வழியில் உயிரீறு போல்
(இயல்பாக) முடிந்தன)
வருமொழி முதலில் இடையின எழுத்து வருகையில் , நிலைமொழி
ஈற்றில் நிற்கும் “ம”கர ஒற்று கெட்டு, உயிரீறு போல் (இயல்பாக) புணரும்.
(பக்.177) (நூற்பா.219)
மரம் + வேர்
= மரவேர் (பக்.177)
அரம் + வழி
= அரவழி
(வேற்றுமையில் உயிரீறு போல்
(இயல்பாக ) முடிந்தன)
-------------------------------------------------------------------------------------------------------------
ஆக்கம் + இடுகை
வை.வேதரெத்தினம்,
[Veda70.vvQgmail.com]
ஆட்சியர்,
தமிழ்ப் பணி மன்றம்
முகநூல்.
-------------------------------------------------------------------------------------------------------------