கொத்து (01) மலர் (029)
=========================================================================
குமுதத்தில் வெளிவந்த கடல் புறா தொடர்கதைக்காக
வரையப்பட்ட ஓவியத்தை மையமாக வைத்து
எழுதப்பட்ட ஓர் கவிதை !
(ஆண்டு 1970)
==============================================
பால்நிலவு கார்முகிலில் பதுங்கிவிளை
யாடும் ! – அதன்
பார்வைதனில் நின்வதனம் பவளநிறம் வீசும் !
கோலமயில் சோலைதனில் தோகைவிரித் தாடும் ! – உன்
குவளைவிழிப் பூமலர்ந்து கோடிமொழி பேசும் !
குமுதமலர் ஓடைதனில்
நீர்த்திரையி லாடும் ! - நின்
கொவ்வையிதழ் ஏக்கமுறக் கூம்பிமுகம் வாடும் !
அமுதமொழிப் பைங்கிளியே ! ஆழ்கடல்நல் முத்தே ! –
நின்
ஆசைமுகம் காணவுளம் அலைந்திடுதல் ஏனோ ?
காரணத்தை நானறியேன் கனிமொழியே
!
நின்பால்
கருணைகொண்ட எனதுநெஞ்சு கலங்கிதடு மாறி !
ஆரணங்கு நின்னிதயப் பூங்குடிலில் ஏறி !
அன்புகாண ஏங்குவதேன் ? ஆருயிரே கூறு !
கூறுவதைக் கூறுநின் குயில்மொழியாற் கூறு !
கொன்றைமலர் மேனியளே
! கூறுவதைக் கூறு !
நாறுகின்ற நறுமுல்லை
மல்லிகையைப் போல !
நகைமுறுவல் காட்டுகின்ற நங்கையேநீ
கூறு !
------------------------------------------------------------------------------------------------------------
ஆக்கம் + இடுகை,
வை.வேதரெத்தினம்,
[veda70.vv@gmail.com]
ஆட்சியர்,
தமிழ்ப்
பணி மன்றம் முகநூல்.
-------------------------------------------------------------------------------------------------------------------------