கொத்து (01) மலர் (028)
===========================================================================
குமுதம் இதழில் வெளியான ஒரு படத்தை வைத்துக் கொண்டு எழுதிய ஒரு கவிதை !
(ஆண்டு 1970)
=========================================
நீலத் திரைவானில் நீந்திவரும் வெண்மதிபோல்
நின்வதனம் தோன்றுவதேன்
? நிலவு முகத்தினிடை
சேலிரண்டு துள்ளுவதேன் ? செந்தமிழின் காவலனாம்
சேரன்
புகழ்பாடிச் செங்கோட்டை
மீதுயர்ந்த
பட்டுத் துகிற்கொடியில் பறித்து எடுத்ததுவோ !
பைங்கொடியாள் நின்புருவம் ? பவளத்துப் பாறைதனில்,
வெட்டி எடுத்ததுவோ வேல்விழியாள்
நின்னிதழ்கள் ?
வெள்ளை
நறுமுல்லை வெட்கித் தலைகுனிய,
முத்து மணிகொண்டு கோத்ததுவோ பல்வரிசை ?
முக்கனியின் சாறெடுத்து
ஆக்கியதோ கன்னங்கள் ?
கத்து கடலனையக் காட்சிதரும் கருங்கூந்தல்,
கார்முகிலின் சொத்தலவோ ? காரிகைநீ கொண்டதுஏன் ?
தேன்கதலித் தண்டினிலே வடித்ததுவோ நின்மேனி ?
தீங்கரும்புத் துண்டாமோ சேயிழையாள் நின்கரங்கள் ?
அன்னத்தின் சிறகெடுத்து
ஆக்கியதோ சீரடிகள் ?
அஞ்சுகமும்
பூங்குயிலும் அடைக்கலமோ நின்னிடமே ?
பொதியமலைத் தென்றலிடைப் பூங்கொடிகள் ஆடுதல்போல்,
புன்னகையின் ஆட்சிதனில் பொன்மலர்நீ ஆடுதலால்,
மதுவூறும் மாமலரே !
மான்மறியே
! பூம்பொழிலே !
மல்லிகையே ! இன்றுமுதல் பூங்கொடியே
நின்பெயராம் !
பூங்கொடியே நீவாழ்க !!
நின்முறுவல் நனிவாழ்க !
பொன்மணியே
நீவாழ்க ! நின்மனைவாழ்க ! வாழியவே !
----------------------------------------------------------------------------------------------------------
ஆக்கம் + இடுகை,
வை.வேதரெத்தினம்,
[veda70.vv@gmail.com]
ஆட்சியர்,
தமிழ்ப்
பணி மன்றம் முகநூல்.
-------------------------------------------------------------------------------------------------------------------------