கொத்து (01) மலர் (021)
=====================================================
காஞ்சித் தலைவன்
மறைந்த நேரத்தில் எழுதிய
கவிதை !
(ஆண்டு 1968)
=====================================================
நீலமுகில் திரைவானில் நீந்திவரும் வெண்மதிபோல்,
நெஞ்சத் திரைக்கடலில் நீமிதந்து ஆடுகிறாய் !
கோலமிகுத் திருமலரில் குடியிருக்கும் தேன்துளிபோல்
குவளைவிழிக் கண்மணியில் கொற்றவன்நீ ஆடுகிறாய் !
ஏட்டினை எடுக்கையிலே
எண்ணமதில் ஆடுகிறாய் !
எழுத்தாகத்
தூவலதின் கூர்முனையில் ஓடுகிறாய் !
பாட்டினை வடிக்கையிலே பண்ணமைத்துப் பாடுகிறாய் !
பைந்தமிழைப்
பாடுகையில் நாநுனியில்
பேசுகிறாய் !
ஏழையுளத் தாமரையில்
இன்பநடம் ஆடுகிறாய் !
இயலிசை நாடாகமாம் தமிழ்க்கோயில் வாழுகிறாய் !
தாழைமடல் பூவையிடம் தங்கையுரு எய்துகிறாய் !
தாளாளர்
உள்ளமதில் தந்தைபணி ஆற்றுகிறாய் !
அழுகின்றோர் நெஞ்சமதில் அன்னையெனத்
தோன்றுகிறாய் !
அன்புநிறைத்
தம்பியிடம்
அண்ணனுற
வாடுகிறாய் !
உழுபடையாம் வேளாளர்
தொழிலாளர் மாணவர்கள்,
உள்ளவரை அண்ணாநீ ஒளிவிளக்காய் வாழ்ந்திடுவாய் !
==============================================================
ஆக்கம் + இடுகை,
வை.வேதரெத்தினம்,
[veda70.vv@gmail.com]
ஆட்சியர்,
தமிழ்ப்
பணி மன்றம் முகநூல்.
------------------------------------------------------------------------------------------------------------------------------------