கொத்து (01) மலர் (016)
-----------------------------------------------------------------------------------------------------------
பாபநாசத்தில் பணி புரிகையில் எழுதிய
பொங்கல் வாழ்த்து !
(ஆண்டு 1968)
-----------------------------------------------------------------------------------------------------------
கழனியில் விளையும் கதிர்நெல் மணிகள் !
காவினில் விளையும் கமுகும் தெங்கும் !
செழுமணல் விளையும் செயிர்தீர் கரும்பு !
செம்மண் விளையும் பைங்கனி வாழை !
புழுதியில் விளையும் பொன்மணி மஞ்சள் !
பொடிமணல் விளையும் பூவா இஞ்சி !
கழிநிலம் விளையும் கவின்சா மந்தி !
கலந்துற வருவாள் கனித்தமிழ்த் தையல் !
விழுமிய பொங்கல் விளைத்திட வருவாள் !
வேதனை தீர்த்து வாழ்ந்திட அருள்வாள் !
உழைத்திடும் மக்கள் உவப்புடன் மகிழ்வார் !
உள்ளம் நிறைவுற நலம்பெற வாழ்வோம் !
-------------------------------------------------------------------------------------------
ஆக்கம் + இடுகை,
வை.வேதரெத்தினம்,
[veda70.vv@gmail.com]
ஆட்சியர்,
தமிழ்ப் பணி மன்றம் முகநூல்.
--------------------------------------------------------------------------------------