கொத்து (01) மலர் (020)
----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
தமிழகத் தலைவர்களும் அவர்தம் சிறப்பும்
! – கதம்ப மாலை – !
( ஆண்டு 1967)
அகத்தியனார் வளர்த்தமொழி அன்னைமொழி தமிழாம் ! – அதில்
அடங்கியுள்ள எழுத்துகளிள் முதலெழுத்து “அ”வாம் !
மகத்தான சாதனைகள் நிகழ்த்திவரும் மேதை,
மாண்புமிகு முதலமைச்சர் பெயர்முதலும் “அ”வாம் !
பிறந்தவுடன் குழவியது வாய்திறந்து அழுமாம் ! - அந்த
பிள்ளைதனின் அழுகைதனில் ஒலித்திடுதல் “ஆ”வாம் !
சிறந்தபெரும் தவப்புதல்வர் இராசாசி என்பார்,
செல்லமொழி “ஆச்சாரி”” பெயர்முதலும் “ஆ”வாம் !
உலகினையே உருவாக்கி உலவவிட்டான் ஒருவன் ! – அவன்
உற்றபெயர் ”இறைவன்”அதில் ஒலித்திடுதல் “இ”யாம் !
அலகினையும் கூர்த்தமதி அருள்மிகுந்த தீரர்,
இஸ்மாயில் எனும்பெரியார் பெயர்முதலும் “இ”யாம் !
வைகறையின் இருளகலப் பவனிவரும் பரிதி ! – தினம்
வையகத்தைச் சாடிவரும் வறுமையெனும் பேயும்,
கைகட்டி அடங்கிவரும், கதிரவனாம் அண்ணா !
கருணைமிக்க ஆட்சியினால் தமிழகமும் வாழும் !
கப்பலுக்குத் திசைகாட்டும் கருவியது விண்மீன் ! – நெஞ்சில்
கபடமுள்ள மனிதர்களின் கயமையினைப் போக்க,
ஒப்பரிய உத்தமராம் உலகத்தின் விண்மீன் !
ஓங்குபுகழ் இராசாசி உள்ளவரை சாலும் !
இரவுதனில் பிறைமதியும் குளிர்நிலவைப் பொழியும் – வாழ்வில்
இன்னலுறும் மாந்தரது இடர்ப்பாடு நீங்கும் !
புரவலராம் இஸ்மாயில் பிறைமதியாம்
! அன்னார்,
புவிமிசையில் வாழும்வரை பயநினைவும் வேண்டா !
உயிருக்கு ஒளியூட்டி உய்விக்கும் கோள்கள் ! – விண்ணில்
ஒளிப்பிழம்பு பானுமதி விண்மீன்கள் மூன்று !
பயிருக்கு வேலியிட்டுப் பாதுகாக்கும் தலைவர் - நமக்கு
பானுமதி விண்மீனாய் விளங்குகின்றார் உண்மை !
----------------------------------------------------------------------------------------------------------
ஆக்கம் + இடுகை,
வை.வேதரெத்தினம்,
[veda70.vv@gmail.com]
ஆட்சியர்,
தமிழ்ப்
பணி மன்றம் முகநூல்.
---------------------------------------------------------------------------------------------------------------------------------