புதுச்சொல் புனைவோம் !
துயிலி = NIGHTY
------------------------------------------------------------------------------------------------
மகளிருக்கான ஆடைகள் பலவுள்ளன ! அவற்றுள் முதன்மை இடம்
வகிப்பது சேலை. பண்டைக் காலத்தில் வழங்கி
வந்த “சீரை” என்ற சொல்லே இக்காலத்தில் “சீலை” என்றும் “சேலை” என்றும் வழங்கப் பெறுகின்றன. “சேலை”யைப் “புடைவை” என்றும் அழைக்கிறோம் !
மகளிரின் பிற ஆடை வகைகளுள் ”நைட்டி” (NIGHTY) என்பதும் ஒன்று ! இரவில் துயிலறையில் அணிந்து
கொள்வதற்காக இது உருவாக்கப் பெற்றது. இறுக்கமின்றித் தளர்வாக இருக்கும் இவ்வாடையை மகளிர்
பகல் நேரத்திலும் அணிந்து கொள்வதைப் பார்க்கிறோம் !
துயிலறையில் அணிந்து
கொள்வதற்காகத் தோன்றியுள்ள இந்த ஆடையைத் “துயிலி” என்று அழைப்போமே ! ”துயிலி” என்பதற்குத் தமிழ் அகரமுதலி சொல்லும் பொருள் “ஒரு வகை ஆடை” என்பதே !
எனவே, இனி நாம் NIGHTY என்று சொல்லாமல் “துயிலி” என்றே சொல்லிப் பழகுவோம் !
-------------------------------------------------------------------------------------------------
NIGHTY = துயிலி
-------------------------------------------------------------------------------------------------
------------------------------------------------------------------------------------------------
ஆக்கம் + இடுகை,
வை.வேதரெத்தினம்,
ஆட்சியர்,
தமிழ்ப் பணி மன்றம்.
[தி.ஆ:2050,மடங்கல்,10]
{27-08-2019}
-------------------------------------------------------------------------------------------------
துயிலி |