வானம்பாடி படத்தில் ஒலித்த “தாதி தூது ” பாடல் !
காளமேகப் புலவர் இரட்டுற மொழிதல் என்னும் வகையில் இரு பொருள்
படும்படிப் பாடுவதில் வல்லவர். இந்தப் பாடல் சற்று வேறுபட்டது !
படும்படிப் பாடுவதில் வல்லவர். இந்தப் பாடல் சற்று வேறுபட்டது !
------------------------------------------------------------------------------------------------------------
பாடல்
------------------------------------------------------------------------------------------------------------
தத்தித்தா தூதுதி தாதூதித் தத்துதி
துத்தித் துதைதி துதைதத்தா தாதுதி
தித்தித்த தித்தித்த தாதெது தித்தித்த
தெத்தாதோ தித்தித்த தாது?
------------------------------------------------------------------------------------------------------------
பொருள்:-
----------------
தத்தித் தாவிப் பறந்து சென்று பூக்களில் இருக்கும் தேன் துளியாகிய
தாதுவை உண்கின்ற வண்டே ! ஒரு பூவினுள் உள்ள தாதுவை (தேன்
துளிகளை) உண்ட பின்பு மீண்டும் வேறு ஒரு பூவினுள் சென்று தாது
எடுத்து உண்ணுகிறாய். உனக்கு எந்தப் பூவினுள் உள்ள தேன்
(எத்தாது) தித்தித்தது (இனித்தது) ?
எடுத்து உண்ணுகிறாய். உனக்கு எந்தப் பூவினுள் உள்ள தேன்
(எத்தாது) தித்தித்தது (இனித்தது) ?
------------------------------------------------------------------------------------------------------------
குறிப்பு :-
இப்பாடலில் “த”கர வரிசை எழுத்துகள் மட்டுமே பயன்படுத்தப்
பட்டுள்ளன.
-----------------------------------------------------------------------------------------------------------
சொற்பொருள்:-
--------------------------
தத்தி = பாய்ந்து பறந்து சென்று; தாது = பூவில் இருக்கும் தேனை; ஊதுதி
= நுகர்கிறாய் (உண்கிறாய்);
தாது ஊதி = அந்த மலரில் இருக்கும் தேன்
துளிகளை உண்டபின்; தத்துதி = மீண்டும் தத்திப் பறந்து அடுத்த
மலருக்குச் செல்கிறாய்; துத்தி = அந்த மலரில் உள்ள உண்பதற்குரிய
தேனை; துதைதி = நீ நெருங்கி; துதை தத்து = மிகுதியாக அப்பூவில்
பரவி; ஆ தாதுதி = அந்தத் தேனை உண்டு வெளி வருகிறாய்;
தித்தித்தது = அப்படி உண்ட தேன் உனக்கு இனிப்பாக இருந்திருக்கும்;
இத் தித்தித்த = இந்த வகையில் இனிப்பான; தாது எது ? = தேன் எந்த
மலருடையது ? தித்தித்தது = இனிமை ததும்பிய தேன் துளிகளில்
மிகுதியும் இனித்தது ; எத்தாதோ = எந்த மலரின் தேன் துளியோ ?
தித்தித்தது யாது = அவ்வாறு இனித்தமைக்குக் காரணம் யாது ?
------------------------------------------------------------------------------------------------------------
”தமிழ்ப் பணி மன்றம்” முகநூற் குழுவில் வெளியிடப் பெற்ற கட்டுரை.
--------------------------------------------------------------------------------------
ஆக்கம் + இடுகை:
வை.வேதரெத்தினம்,
ஆட்சியர்,
தமிழ்ப் பணி மன்றம்.
[தி.ஆ: 2049, சிலை, 10.]
{25-12-2018}
----------------------------------------------------------------------------------------