யார் பெரியவர் ?
-----------------------------------------------------------------------------------------------------------
[ஔவையார் அருளிய தனிப்பாடல்]
------------------------------------------------------------------------------------------------------------
வான்குருவி யின்கூடு வல்லரக்குத் தொல்கரையான்
தேன்சிலம்பி யாவர்க்குஞ் செய்யரிதால் - யாம்பெரிதும்
வல்லோமே யென்று வலிமைசொல வேண்டாம்காண்
எல்லார்க்கும் ஒவ்வொன் றெளிது.
------------------------------------------------------------------------------------------------------------
சந்தி பிரித்து எழுதிய பாடல்

வான்
குருவியின் கூடு வல் அரக்கு தொல் கரையான்
தேன் சிலம்பி
யாவர்க்கும் செய் அரிதால் - யாம் பெரிதும்
வல்லோமே
என்று வலிமை சொல வேண்டாம் காண் !
எல்லார்க்கும்
ஒவ்வொன்று எளிது !
-----------------------------------------------------------------------------------------------------------
பொருளுரை:
வான் குருவி எனப்படும் தூக்கணாங் குருவிக்கூடு, அரக்கு எனப் படும் வலிமையான இயற்கைப்
பசை, தேன்அடை, சிந்தனைச் சிக்கலை நம்முள் உருவாக்கிவிடும்
சிலந்தி வலை இவற்றை மேலோட்டமாகப் பார்த்தால் புல்லிய புலனங்களே !
ஆனால் இந்த அறிவியல் உலகில் எந்த மேதையாலும் இவற்றை உருவாக்க
இயலுமா?
ஒவ்வொருவரிடமும் ஒரு சிறப்பு இருக்கிறது; சாதாரண பறவையான வான் குருவி கட்டுகின்ற (தூக்கணாங் குருவிக்) கூட்டை இந்தக் கணினி யுகத்தில் வேறு எவராலும் கட்டித் தொங்கவிட்டு அதில் அக் குருவிகளைக் குடி வைக்க முடியுமா? முடியவே முடியாது !
அதாவது இந்த உலகத்தில் ஆற்றிவு படைத்த மனிதர்களாலும் செய்ய முடியாத செயல்களும் இருக்கவே செய்கின்றன என்பதை இடித்துக் காட்டி, வாழ்வில் பிற மனிதர்களிடத்தும், பிற உயிர்களிடத்தும் நாம் சமத்துவ உணர்வு கொண்டிருக்க வேண்டும் என்பதை எடுத்துக் காட்டுவதே இப்பாடலின் நோக்கம் !
‘யாம் பெரிய வல்லாளன்’ என்பதாய் எண்ணம் கொண்டு பிறரைத் தாழ்மையாக நினைத்து விடக் கூடாது’ என்ற எச்சரிக்கையை இப்பாடல் மூலம் நமக்கு அளிக்கிறார் ஔவையார் !
------------------------------------------------------------------------------------------------------------
அருஞ்சொற்பொருள்:
வான் குருவி = தூக்கணாங் குருவி ;
வல் அரக்கு = ஒரு வகைக் குளவி யால் சேகரித்து உருவாக்கப்படும் அரக்கு
; தொல் கரையான் = பழங் காலம் முதல் இருந்து வரும் கரையான் உருவாக்குகின்ற மண் புற்று
; தேன் = தேனீக்கள் பூக்களிலிருந்து துளித் துளியாகத் தேனைச் சேகரித்து சேர்த்து வைக்கும் அறுகோண
வடிவ சிற்றறைகள் கொண்ட தேனடைகள் ; சிலம்பி = சிலந்தி வலை ; (ஆகியவை) யாவர்க்கும்
= எந்த மனிதருக்கும் ; செய்யரிதால் = செய்ய முடியாதவை ; யாம் பெரிதும் வல்லோம் = நான் எதையும் செய்ய வல்லவன் ; என்று வலிமை சொல வேண்டாம்
= என்று ஆணவம் கொள்ள வேண்டாம் ; காண் =
அசைச்சொல் (இதற்கு இவ்விடத்தில் பொருள் ஏதும் இல்லை)
;
------------------------------------------------------------------------------------------------------------
”தமிழ்ப் பணி மன்றம்” முகநூற் குழுவில்
வெளியிடப் பெற்ற கட்டுரை.
------------------------------------------------------------------------------------------------------------
ஆக்கம் + இடுகை:
வை.வேதரெத்தினம்,
ஆட்சியர்,
தமிழ்ப்
பணி மன்றம்.
[தி.ஆ:2050,மீனம்,10]
{24-03-2019}
-------------------------------------------------------------------------------------------------------------