name='description'/> தமிழ்ப் பணி மன்றம்: பெயர் விளக்கம்
பெயர் விளக்கம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பெயர் விளக்கம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, செப்டம்பர் 06, 2019

பெயர் விளக்கம் (23) சேஷசாயி - பெயரின் பொருள் என்ன ?

சேஷன் என்றால் பாம்பு; பாம்பின் மீது படுத்திருப்பவன் சேஷசாயி !


திருமால் பல அவதாரங்கள் எடுத்தவர். பல பெயர்களால் அழைக்கப்படுபவர். திருமாலின் பெயரை ஆண் குழந்தைகளுக்குச் சூட்டுவது மக்களிடையே வழக்கத்தில் இருந்து வருகிறது. ஆனால் பெயரின் பொருள் தெரிந்துதான் சூட்டுகிறோமா என்றால்இல்லைஎன்றுதான் சொல்ல வேண்டி இருக்கிறது. பெருமாளின் பெயர் தாங்கிய பலருக்கு, அப்பெயரின் பொருள் தெரியாமலேயே இன்னும் இருக்கிறார்கள் என்பதே உண்மை.  திருமாலின் பெயர்களில் பெரும்பான்மையானவை சமற்கிருதப் பெயர்களாகவே உள்ளன. மானிடரிடையே வழக்கத்தில் உள்ள திருமால்  பெயர்களையும், அவற்றுக்குப் பொருத்தமான  தமிழ்ப் பெயர்களையும் அறிவோமா !

-------------------------------------------------------------------------------------------------------
       
      அச்சுதன்.....................................................= மாலவன்
அப்புசாமி (அப்பு=நீர்)..............................= பொன்னித்துறைவன்
அனந்தசயனம்..........................................= அரவணை நம்பி
கரிவரதன்...................................................= மணிவண்ணன்
காளன் (கருப்பன்).....................................= கார்வண்ணன்
காளமேகன் (திருமால்)...........................= முகிலன்
கேசவன் (கேசம்=முடி).............................= மணிமுடி
கோதண்டபாணி (கோதண்டம்=வில்).......................= வில்லாளன்
சக்கரபாணி...............................................= ஆழியண்ணல்
சாரங்கபாணி............................................= வில்லாளன்
சாரங்கன் (சாரங்கம்=வில்)...................= வில்லாளன்
சுதர்சனன் (சுதர்சனம்=சக்கரம்)..........= ஆழியேந்தல்
சேஷசாயி (சேஷன்=பாம்பு)..................= அரவத்துயிலி
சேஷன் (சேஷம்=பாம்பு).........................= அரவண்ணல்
தாமோதரன்(தாமம்=கயிறு).................= மணிவண்ணன்
 நந்தபாலன் (நந்தர்=இடையர்)............= இளங்கண்ணன்
 நரசிம்மன் (நரன்=மனிதன்).................= அரிமா அண்ணல்
 நவநீதன் (நவநீதம்=வெண்ணெய்).....= கார்வண்ணன்
 நவநீதகிருஷ்ணன்...................................= மாலன்
 நாராயணசாமி.........................................= அலையரசு
 நாராயணமூர்த்தி....................................= அலைவாணன்
 நாராயணன் (நாரம்=கடல்)...................= கடல்வண்ணன்
 நேமிநாதன் (நேமி=சக்கரம்)..................= ஆழியமுதன்
 பத்மநாபன் (பத்மம்=தாமரை).............= தாமரைச்செல்வன்
 பரந்தாமன்..................................................= திருமால்வளவன்
  பார்த்தசாரதி............................................= அந்திவண்ணன்
 பாலாஜி........................................................= திருமலைவாணன்
 பெருமாள்= பெருமால்..............................= மாலவன்
 மகாவிஷ்ணு (மகா=பெரிய)...................= வானவரம்பன்
 மதுசூதனன்  (திருமால்)...........................= மாயவன்
 ரமாபதி (ரமா=இலக்குமி).......................= திருமகள்நம்பி
 ரெங்கசாமி (ரெங்கம்=அரங்கம்)..........= அரங்கண்ணல்
 ரெங்கநாதன்...............................................= அரங்கண்ணல்
 ரெங்கராஜன்...............................................= அரங்கமாலன்
 ரெங்கையன்...............................................= அரங்கநம்பி
 வராகமூர்த்தி...............................................= மேகவண்ணன்
 விஷ்ணு........................................................= பெருமாள்
 விஷ்ணுவர்த்தன்.......................................= குயிலன்
 வேங்கடகிருஷ்ணன்...............................= மலைவாணன்
 வேணுகோபால்.........................................= குழலமுதன்
 ஸ்ரீதரன்........................................................= தாமரைமணாளன்
 ஸ்ரீநிவாசன்.................................................= தாமரைவாணன்
 ஸ்ரீரங்கன்.....................................................= திருவரங்கன்
 ஹயக்கிரீவன்............................................= திருமால்
------------------------------------------------------------------------------------------------------
                                                         
ஆக்கம் + இடுகை,
வை.வேதரெத்தினம்,
ஆட்சியர்,
தமிழ்ப் பணிமன்றம்.
{25-08-2018}
------------------------------------------------------------------------------------------------------
      ”தமிழ்ப் பணி மன்றம்முகநூற் குழுவில் வெளியிடப் பெற்ற 
கட்டுரை !
------------------------------------------------------------------------------------------------------







பெயர் விளக்கம் (22) ஸ்ரீதேவி - பெயரின் பொருள் என்ன ?

தேவிகள் பலவகை; அவர்களுள் சீதேவி ஒரு வகை !


மக்களுக்குச் செல்வத்தை வாரி வழங்கும் தெய்வமாக இலட்சுமி பார்க்கப்படுகிறார். சமற்கிருதத்திலும் தமிழிலுமாகப் பல பெயர்கள் இலட்சுமிதேவிக்கு வழங்கப்படுகின்றன. இலட்சுமி, கடற்பிறந்த கோதை, மா, அரிப்பிரியை, செய்யாள், ஆக்கம், பொன், பொறி, ஸ்ரீதேவி, அலர்மகள், பொருளின்செல்வி, தாக்கணங்கு, இளையாள், பூமின், சலசை, இந்திரை எனவெல்லாம் இலக்குமி அழைக்கப்படுகிறாள். மக்களிடையே வழங்கப் பெறும் ஸ்ரீதேவியின் சமற்கிருத, தமிழ்ப் பெயர்களையும், அவற்றுக்கு இணையான புதிய தமிழ்ப் பெயர்களையும் காண்போமா !


                       -----------------------------------------------------------------------------------------
·         இந்திரா............................= திருமகள்
·         இராஜலட்சுமி.................= திருமகள்
·         இலக்குமி........................ = பூம்பாவை
·         இலட்சுமி........................ .= திருப்பாவை
·         இலட்சுமிதேவி............... = செல்வி
·         கமலவேணி....................= அலர்மேல்மங்கை
·         கமலி................................ = மலர்மங்கை
·         சீதாலட்சுமி...................  = பொய்கைச்செல்வி
·         பத்மாசனி.......................= மலர்ச்செல்வி
·         பத்மாவதி....................... = தாமரைச்செல்வி
·         புஷ்ப வல்லி.................. = மலர்க்கொடி
·         புஷ்பம்............................= மலர்
·         புஷ்பலீலா..................... = தாமரைச்செல்வி
·         மகாலட்சுமி.................. = தாமரைவாணி
·         ரமா (இலக்குமி)........... = செல்வி
·         லக்ஷ்மி............................= திருமகள்
·         லக்ஷ்மிஸ்ரீ.......................= மாயவன் மங்கை
·         விஜயலட்சுமி.................= வெற்றிச்செல்வி
·         ஜலஜா.............................= தாமரைச்செல்வி
·         ஜெயலட்சுமி................. = வெற்றிச்செல்வி
·         ஸ்ரீதேவி.......................... = செல்வத்திருமகள்

                      ------------------------------------------------------------------------------------------
 கமலம் = தாமரை மலர் சீதம் = குளிர்நீர் (பத்மம்=தாமரை)  ஜலஜா = தாமரை 
------------------------------------------------------------------------------------------
                                      ஆக்கம் + இடுகை
                                    வை.வேதரெத்தினம்,
                                                ஆட்சியர்,
                                    தமிழ்ப் பணி மன்றம்.
                                               {22-08-2018}
-------------------------------------------------------------------------------------------
 ”தமிழ்ப் பணி மன்றம்” முகநூற் குழுவில் வெளியிடப் பெற்ற கட்டுரை !
--------------------------------------------------------------------------------------------








பெயர் விளக்கம் (21) காத்தமுத்து - பெயரின் பொருள் தெரியுமா ?

   முத்துக்கள் தான் எத்தனை வகை ? 


முத்து என்பது தமிழ்ச்சொல் தான். வெண்மணி, ஆரம், தரளம், நித்திலம் எனப் பல பெயர்கள் முத்துக்கு வழங்கப்படுகின்றன. முத்து என்பது முருகனையும் பிள்ளையாரையும் சிவனையும் குறிக்கும் சொல் ஆகும்.. முத்து என்ற சொல் தனியாகவும் பிற சொல்லுடன் இணைந்தும் மாந்தர்களின் பெயர்களைச் சுட்டி நிற்கின்றன. சில பெயர்களுக்கு பலருக்குப் பொருள் தெரியாது. இப்போதாவது பொருள் தெரிந்து கொள்வோமா !

------------------------------------------------------------------------------------------------------

  • ஆண்டிமுத்து (ஆண்டி =முருகன்=எழிலன்)...........= எழில்மணி
  • ஆனைமுத்து (ஆனை= யானை)........................= வேழவேந்தன்
  • ஒண்டிமுத்து (ஒண்டி=தனியாள்=பிள்ளையார்)......= வேழமுகன்
  • கருமுத்து  (கார் = கரிய முகில்)...........................= முகில்வண்ணன்
  • காத்தமுத்து (காத்தல்=காக்கும் கடவுள்) (சிவன்.........= அழல்வண்ணன்
  • சிங்கமுத்து (சிங்கம்=அரிமா).............................= அரிமாமணி
  • சுடலைமுத்து (சிவன்) (சுடலை=சுடுகாடு).............= நுதல்விழியன்
  • சோனைமுத்து  (சோனை=மழை, புனல்).............= புனல்வேந்தன்
  • தங்கமுத்து (தங்கம்=பொன்)..............................= பொன்மணி
  • நாகமுத்து (நாகம் = முகில்) )...............................= முகில்மணி
  • நாடிமுத்து (நாடி=துளை)=துளையிடப்பட்ட முத்து.........= மணியொளி
  • பச்சைமுத்து (பசுமை = இளமை).........................= இளமுருகு
  • பேச்சிமுத்து (சிவன்)........................................= சிவமணி
  • மஞ்சமுத்து (மஞ்சு =  மேகம்)...............................= மேகவண்ணன்
  • மாரிமுத்து  ( மழைத்துளி )..................................= சாரல்நாடன்
  • முத்தம்மாள் (முத்து=வெண்மணி).........................= வெண்மணி
  • முத்து (கடல் சிப்பியில் விளைவது)............................= கடல்மணி
  • முத்துக்கண்ணு (கண்ணு = விழி)........................= மணிவிழி
  • முத்துக்கிருஷ்ணன் (கிருஷ்ணன்=மாலன்)..........= மணிமாலன்
  • முத்துக்குமரன் (குமரன்=இளந்தை.......................= இளமுருகு
  • முத்துச்சாமி (சாமி = தலைவன்).............................= மணியரசன்
  • முத்துராஜ் (ராஜ் = அரசு).......................................= முத்தரசன்
  • முத்துலட்சுமி (லட்சுமி = எழில் ; செல்வி)...................= எழில்மணி
  • வைரமுத்து (வைரம்=ஒளிமணி)..............................= ஒளிமணி

-------------------------------------------------------------------------------------------------------


01.ஆண்டி = ஆண்டிக் கோலத்தில் பழனியில் இருக்கும் முருகன். 03. ஒண்டி = திருமணமே செய்து கொள்ளாது தனித்து இருக்கும் பிள்ளையார். 11. ஆரமாகக் கோப்பதற்கு துளையிடப்பட்ட முத்து = நாடிமுத்து.
---------------------------------------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை,
வை.வேதரெத்தினம்,
ஆட்சியர்,
தமிழ்ப் பணி மன்றம்.
{22-08-2018}

--------------------------------------------------------------------------------------------------------
       
  ”தமிழ்ப் பணி மன்றம்” முகநூற் குழுவில் வெளியிடப் பெற்ற 
கட்டுரை !
---------------------------------------------------------------------------------------------------------




பெயர் விளக்கம் (20) பாலையா - பெயரின் பொருள் தெரியுமா ?

   ’வாலம்’ என்றால் என்ன ?  தெரியவில்லையா ?


பாலையன் என்ற பெயரை பால + ஐயன் என்று பிரிக்கலாம். பால என்ற சொல்  வால  என்ற  சொல்லின் திரிபு.  தமிழில்  வால்  -  வாலம்  என்றால் இளமை, என்று பொருள்.

இளமைக் கருத்தைக் குறிக்கும் வால்  என்னும் சொல்லின் அடிப்படையில் வாலை [இளம்பெண்], வாலிசை [இளம்பெண்], வாலாம்பாள் [இளம்பெண்], வாலவயது [இளவயது], வாலலீலை [இளமை விளையாட்டு], வாலாதித்தன் [இளஞ்சூரியன்], வாலகன் [ இளைஞன் ], வாலச்சந்திரன் [இளம்பிறை], வாலன் [இளைஞன்] மற்றும் இதுபோன்ற பல சொற்கள் தோன்றியுள்ளன.

தமிழ்ச் சொற்களில் இடம்பெறும் ”வ”கரம்   ( )  வடமொழியில் பகரமாகத் திரியும். எடுத்துக்காட்டு:- வாலாம்பாள் = பாலாம்பாள்; வாலன் = பாலன்; வாலகிருஷ்ணன் = பாலகிருஷ்ணன்; வாலசுந்தரம் = பாலசுந்தரம்; வாலசந்தர் = பாலசந்தர்; வாலரமணி = பாலரமணி; வாலபருவம் = பாலபருவம்; வாலிவன் = வாலிபன்; கவடம் = கபடம்; கவடி = கபடி (சடுகுடு ஆட்டம்).

வால் + ஐயன் = வாலையன் என்ற பெயர் வடமொழித் தாக்கத்தால் திரிந்து பாலையன் என்று வழங்கப்படுகிறது. வால் என்பதற்கு இளமை; தூய்மை; தோகை; மிகுதி; வெண்மை; நன்மை; பெருமை; நீண்மை (நீளம்) என்று பொருள். ஐயன் என்பதற்கு  அரசன்; அரிகரபுத்திரன்; அருகன்; அழகன்; ஆசிரியன், உயர்ந்தோன்; இறைவன்; சிவன்; தமையன்; தலைவன்; மூத்தவன் எனப் பல பொருள்கள் உள்ளன.

பாலையன் = வாலையன் = வால் + ஐயன் = இளமை + அரசன் = இளவரசன் என்று பொருள். பாலையன் அல்லது பாலையா என்றால் இளவரசு என்று பொருளாகும். வாலம் = பாலம் = இளமை என்ற பொருள் அடிப்படையில் தோன்றும் சில பெயர்களைப் பார்ப்போமா !


---------------------------------------------------------------------------------------------------

·   பாலையன்..................................= இளவரசன்
·   பாலையா....................................= இளவரசு
·   பாலசந்திரன்..............................= இளம்பிறை
·   பாலசந்தர்....................................= இளமதி
·   பாலன்..........................................= இளவழகன்
·   பாலசுப்பிரமணியன்...............= இளமுருகு
·   பாலாம்பாள்................................= இளவழகி
·   பாலமுருகன்.................................= இளமுருகு
·   பாலகிருஷ்ணன்.........................= இளங்கண்ணன்
·   பாலகோபால்...............................= இளமாலன்
·   பாலதண்டாயுதம்.......................= இளமுருகு
·   பாலசரசுவதி................................= பூவழகி
·   பாலரமணி.(ரமணி=அழகு)....= இளவழகன்
·   பாலசுந்தரி...................................= இளவழகி
·   பாலாமணி (மணி.=.சூரியன்)..= இளங்கதிர்
·   பாலசுந்தரம்.................................= இளவழகன்


----------------------------------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை,
வை.வேதரெத்தினம்,
ஆட்சியர்,
தமிழ்ப் பணி மன்றம்.
{20-08-2018}

----------------------------------------------------------------------------------------------------
         ”தமிழ்ப் பணி மன்றம்முகநூற் குழுவில் வெளியிடப் பெற்ற 
கட்டுரை !
----------------------------------------------------------------------------------------------------



.