name='description'/> தமிழ்ப் பணி மன்றம்: ஐந்திறம்
ஐந்திறம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ஐந்திறம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், செப்டம்பர் 04, 2019

ஐந்திறம் (04) நாண்மீன்களின் தமிழ்ப் பெயர்கள் !

தமிழில் விண்மீன்களின் பெயர்கள் !


வான மண்டலத்தில் மீன் (நட்சத்திரம்) கூட்டங்கள் இரவில் ஒளிர்வதைப் பார்த்திருப்பீர்கள். நம் முன்னோர்கள் அவற்றை அடையாளம் கண்டு, 27 மீன்களாகப் பகுத்திருக்கிறார்கள். 27 மீன்களுக்கும் பண்டைக் காலத்தில் வழக்கில் இருந்த தமிழ்ப் பெயர்களும், அவற்றின் பொருளும் அவற்றுக்கு இக்காலத்தில் வழங்கி வரும் வடமொழிப் பெயர்களும், வருமாறு :- 
           
             --------------------------------------------------------------------------------------------
           
             தமிழ்...........................பொருள்...........................வடமொழி
          
             --------------------------------------------------------------------------------------------

           புரவி..............................குதிரை...........................அசுவதி
           அடுப்பு.........................அடுப்பு............................பரணி
           ஆரல்.............................நெருப்பு..........................கார்த்திகை
           சகடு..............................சக்கரம்...........................ரோகிணி
           மான்றலை.................மானின் தலை.............மிருகசீரிடபம்.
           மூதிரை........................வீணை............................திருவாதிரை
           கழை.............................புல்லாஙகுழல்.............புனர்பூசம்
           காற்குளம்...................கொடிறு(குறடு)..........பூசம்
           கட்செவி.......................பாம்பு.............................ஆயில்யம்
           கொடுநுகம்................நுகத்தடி........................மகம்
           கணை..........................அம்பு................................பூரம்
           உத்தரம்.......................ஊழித் தீ.........................உத்தரம்
           கை................................கரங்கள்.........................அஸ்தம்
           அறுவை......................ஆடை...............................சித்திரை
           விளக்கு........................அகல்................................சுவாதி
           முறம்.............................சுளகு................................விசாகம்
           பனை...........................பனைமரம்.....................அனுஷம்
           துளங்கொளி.............எரியொளி.....................கேட்டை
           குருகு............................கொக்கு............................மூலம்
           உடைகுளம்................வழியும்குளம்...............பூராடம்
           கடைக்குளம்.............குளத் துறை...................உத்திராடம்
           முக்கோல்...................ஊன்றுகோல்.................திருவோணம்
           காக்கை......................காகம்................................அவிட்டம்
           செக்கு..........................காணம்.............................சதயம்
           நாழி.............................அளக்கும் படி..................பூரட்டாதி
           முரசு.............................பேரிகை...........................உத்திரட்டாதி
           தோணி.......................படகு...................................ரேவதி

-------------------------------------------------------------------------------------------------------

[வழக்கொழிந்து போயிருந்த  புரவி முதல் தோணி வரையிலான 27 மீன்கள் பெயரையும்   பாவாணர் அவர்கள் மீட்டெடுத்துத் தந்துள்ளார்].

-------------------------------------------------------------------------------------------------------

பின்குறிப்பு:-
--------------------

1) மீன்கள் எல்லாமே ஒற்றை மீன்கள் (SINGLE IN NUMBER)  அல்ல. 6 மீன்கள் சேர்ந்ததே அசுவதி. பரணியில் 3 மீன்கள். 6 மீன்கள் சேர்ந்த கூட்டத்தின் பெயரே கார்த்திகை. பல மீன்கள் சேர்ந்த கூட்டமே அவிட்டம். திருவாதிரை,  சுவாதி போன்ற சில மட்டுமே  ஒற்றை மீன்கள் !


2).அசுவமேத யாகம் என்பது பற்றிப் படித்திருப்பீர்கள். இதில் குதிரையை வெட்டிப் பலி கொடுப்பார்கள். அசுவம் என்றால் குதிரை. அசுவம் என்ற சொல்லின் அடிப்படையில் உருவான பெயர்தான்அசுவதி”, ”அசுபதி”,  அஸ்வினி”, ”அசுவினிஎல்லாம்.  குதிரையைத் தமிழில்புரவிஎன்போம். எனவேஅசுவதிஎன்பது தமிழில்புரவிஆகிறது !


3) வடமொழியில் மீன் (STAR) பெயர்கள் இவ்வாறு உருவானவையே. வடமொழிச் சொல்லுக்கு என்ன பொருளோ, அதே பொருள் தரும் சொல் தான் இப்போது தமிழில் தரப்பட்டுள்ளது !


4) பண்டைக் காலத்தில் தமிழில் வழங்கிவந்த மீன் பெயர்கள் எல்லாம் வடமொழி மயமாகி விட்டன. ”ஆடு இயல் அழல் குட்டத்து ஆரிருள் அரையிரவில் முடப் பனையத்து வேர்முதலாக் கடைக்குளத்து கயம் காய.....” என்பது புறநானூற்றுச் செய்யுள் (229). இதில் வரும்அழல் கார்த்திகை ஆகிவிட்டது.  பனைஅனுஷம் ஆகிவிட்டது. ”கடைக்குளம்உத்திராடம் ஆகிவிட்டது. இப்படித் தான் 27 மீன்களின் தமிழ்ப் பெயர்களும்  மறைக்கப்பட்டு வடமொழி திணிக்கப் பட்டுவிட்டது. வடமொழித் திணிப்புக்குசோதிடம்ஒரு கருவியாகப் பயன்படுத்தப்பட்டதுஇன்றும் பயன்படுத்தப் படுகிறதுஎதிர் காலத்திலும் பயன்படுத்தப்படும். தமிழர்கள் இப்போதாவது விழித்துக் கொள்வார்களாக !


-----------------------------------------------------------------------------------------------------
     
  ”தமிழ்ப் பணி மன்றம் முகநூற்குழுவில் வெளியிடப் பெற்ற
 கட்டுரை.

-----------------------------------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை,

வை.வேதரெத்தினம்,
ஆட்சியர்,
தமிழ்ப் பணி மன்றம்.
[ தி.பி: 2049, சிலை, 24.] 
{08.01.2019}

-----------------------------------------------------------------------------------------------------




ஐந்திறம் (05) ஆண்டுகளின் தூய தமிழ்ப் பெயர்கள் !

தமிழ்ப் பற்றாளர் முதுமுனைவர் மு.பெ.சத்தியவேல் முருகனார் பரிந்துரைத்த அறுபது ஆண்டுகளின் தமிழ்ப் பெயர்கள் !



       01)   பிரபவ..........................= நற்றோன்றல்
       02)   விபவ...........................= உயர் தோன்றல்
       03)   சுக்கில........................= வெள்ளொளி
       04)   பிரமோதூத...............= பேருவகை
       05)   பிரஜோற்பத்தி........= மக்கட்செல்வம்
       06)   ஆங்கிரச....................= அயல்முனி
       07)   ஸ்ரீமுக..........................= திருமுகம்
       08)   பவ................................= தோற்றம்
       09)   யுவ.................................= இளமை
       10)  தாது...............................= மாழை
       11)  ஈஸ்வர..........................= ஈச்சுரம்
       12)  வெகுதான்ய..............= கூலவளம்
       13)  பிரமாதி........................= முன்மை
       14)  விக்கிரம......................= நேர்நிரல்
       15)  விஷு............................= விளைபயன்
       16)  சித்திரபானு...............= ஓவியக்கதிர்
       17)  சுபானு..........................= நற்கதிர்
       18)  தாரண..........................= தாங்கெழில்
       19)  பார்த்திப......................= நிலவரையன்
       20)  விய................................= விரிமாண்பு
       21)  சர்வசித்து....................= முற்றறிவு யாவுந்திறல்
       22)  சர்வதாரி......................= முழுநிறைவு
       23)  விரோதி.......................= தீர்பகை
       24)  விக்ருதி........................= வளமாற்றம்
       25)  கர...................................= செய்ந்நேர்த்தி
       26)  நந்தன...........................= நற்குழவி
       27)  விஜய.............................= உயர்வாகை
       28)  ஜய..................................= வாகை
       29)  மன்மத..........................= காதன்மை
       30)  துன்முகி........................= வெம்முகம்
       31)  ஹேவிளம்பி................= பொற்றடை
       32)  விளம்பி..........................= அட்டி
       33)  விகாரி.............................= எழில்மாறல்
       34)  சார்வரி...........................= வீறியெழல்
       35)  பிலவ...............................= கீழறை
       36)  சுபகிருது........................= நற்செய்கை
       37)  சோபகிருது...................= மங்கலம்
       38)  குரோதி...........................= பகைக்கேடு
       39)  விசுவாவசு.....................= உலகநிறைவு
       40)  பராபவ...........................= அருட்டோற்றம்
       41)  பிலவங்க........................= நச்சுப்புழை
       42)  கீலக.................................= பிணைவிரகு
       43)  சௌமிய.........................= அழகு
       44)  சாதாரண.......................= பொதுநிலை
       45)  விரோதிகிருது..............= இகல்வீறு
       46)  பரிதாபி...........................= கழிவிரக்கம்
       47)  பிரமாதீச........................= நற்றலைமை
       48)  ஆனந்த............................= பெருமகிழ்ச்சி
       49)  ராட்சஸ...........................= பெருமறம்
       50)  நள......................................= தாமரை
       51)  பிங்கள.............................= பொன்மை
       52)  காளயுக்தி.......................= கருமைவீச்சு
       53)  சித்தார்த்தி......................= முன்னியமுடிதல்
       54)  ரௌத்திரி........................= அழலி
       55)  துன்மதி............................= கொடுமதி
       56)  துந்துபி.............................= பேரிகை
       57)  ருத்ரோத்காரி................= ஒடுங்கி
       58)  ரக்தாட்சி..........................= செம்மை
       59)  குரோதன.........................= எதிரேற்றம்
       60)  அட்சய..............................= வளங்கலன்

------------------------------------------------------------------------------------------------------------

ஆண்டுக்குரிய தமிழ்ச் சொற்கள் இட்டுக் கட்டப்பட்டவை அல்ல. சமற்கிருதச் சொல்லின் பொருள் தமிழில் தரப்பட்டிருக்கிறது. அவ்வளவுதான் !

------------------------------------------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை:

வை.வேதரெத்தினம்,
ஆட்சியர்,
தமிழ்ப் பணி மன்றம்.
[தி.:2050,சுறவம்,12.]
{26-01-2019}
-----------------------------------------------------------------------------------------------------------..

“ தமிழ்ப் பணி மன்றம்” முகநூற் குழுவில் வெளியிடப் பெற்ற
 கட்டுரை !
-------------------------------------------------------------------------------------------------------------





ஞாயிறு, செப்டம்பர் 01, 2019

ஐந்திறம் (06) மாதங்களின் தூய தமிழ்ப் பெயர்கள் !

சுறவம், கும்பம், மீனம், மேழம் முதலிய தமிழ் மாதங்கள் !


                

                     ---------------------------------------------------------------------
                                 *****மாதங்களின் பெயர்கள்*****
திரிசொல்.....................தமிழ்ச்சொல்............சொல்லின் பொருள்
                     ----------------------------------------------------------------------
                     தை.........................= சுறவம்.................(சுறா மீன்)
                     மாசி.......................= கும்பம்.................(குடம்)
                     பங்குனி................= மீனம்...................(மீன்)
                     சித்திரை...............= மேழம்.................(ஆடு)
                     வைகாசி...............= விடை..................(காளை)
                     ஆனி......................= ஆடவை............. (இரட்டை)           
                     ஆடி........................= கடகம்................. (நண்டு)
                     ஆவணி................= மடங்கல்............ (சிங்கம்
                     புரட்டாசி..............= கன்னி.................(இளம்பெண்)
                     ஐப்பசி....................= துலை..................(தராசு)
                     கார்த்திகை..........= நளி..................... (தேள்)
                     மார்கழி.................= சிலை..................(வில்)

-----------------------------------------------------------------------------------------------------------                        

மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம் ஆகிய 12 இராசிகளின் அடைப்படையில் தான் சித்திரை, வைகாசி, ஆனி, ஆடி, ஆவணி, புரட்டாசி, ஐப்பசி, கார்த்திகை, மார்கழி, தை, மாசி, பங்குனி ஆகிய மாதங்களும் தோன்றின !


பன்னிரண்டு இராசிகளுக்கும் உருவங்களை வைத்தே வடமொழியில் பெயர்கள் தரப்பட்டன. அதாவது மேஷம் என்றால் ஆடு, ரிஷபம் என்றால் காளை, மிதுனம் என்றால் இரட்டை மனிதர்கள், கடகம் என்றால் நண்டு, சிம்மம் என்றால் சிங்கம், கன்னி என்றால் இளம்பெண், துலாம் என்றால் தராசு, விருச்சிகம் என்றால் தேள், தனுசு என்றால் வில், மகரம் என்றால் சுறா மீன், கும்பம் என்றால் குடம், மீனம் என்றால் மீன் எனச் சின்னங்கள் வழங்கி வந்தன !


இந்த இராசிகளை வைத்தே சித்திரை முதலான 12 மாதங்களும் உருவாக்கப்பட்டன. ஆனால், இராசியின் பெயரை மாதத்திற்கு வைக்காமல், எந்த நட்சத்திரத்தன்று  பௌர்ணமி வருகிறதோ அந்த நட்சத்திரப் பெயரை அந்த மாதத்திற்கு வடமொழியாளர்கள் சூட்டினர். இது பற்றிய விளக்கம் எனது முந்தைய பதிவு ஒன்றில் தரபட்டுள்ளது !


சித்திரை மாதம் முழுதும் மேஷ இராசியில் மட்டுமே  சூரியன் காலையில் உதிக்கும். இதனால் தான் சித்திரையை மேஷ மாதம் என்பார்கள். மேஷ இராசியின் சின்னம் ஆடு என்பது உங்களுக்குத் தேரியும். மேஷம் (வடமொழி) என்றாலும் மேழம் (தமிழ்) என்றாலும் அது ஆடுஎன்பதை நினைவில் கொள்ளுங்கள். சின்னத்தின் அடிப்படையிலேயே இம்மாதத்திற்குமேழம்எனத் தமிழில் பெயர் வைக்கப்பட்டுள்ளது !


வைகாசி முதல் நாள் சூரியன் ரிஷப இராசியில் உதிக்கும். வைகாசி முழுவதுமே சூரியன் இதே இராசியில் தான் உதிக்கும்.  இதனால் தான் வைகாசியை ரிஷப மாதம் என்பார்கள். ரிஷபம் என்பது தமிழில் விடை (காளை) என்று சொல்லப்படும். ரிஷபத்தின் குறியீடு காளை (விடை)  என்பதை நினைவிற் கொள்ளுங்கள். இந்த அடிப்படையிலேயே வைகாசியைத் தமிழில்விடைஎன்று சொல்கிறோம் !


தை மாதம் முழுவதும் சூரியன் காலையில் மகர இராசியில் மட்டுமே உதிக்கும். மகரத்தின் சின்னம் சுறா மீன். இதைசுறவம்என்றும் சொல்லலாம். இந்த அடிப்படையிலேயே மகர (தை) மாதத்திற்குசுறவம்எனத் தமிழில் பெயர் வைக்கப்பட்டுள்ளது !


மகர மாதம் என்று யாரும் சொல்வதில்லையே, தை மாதம் என்று தானே சொல்கிறோம் என்று உங்களுக்கு ஒரு ஐயம் எழும். வடநாட்டில் தை மாதம் என்று சொல்லாமல் மகர மாசம் என்றுதான் சொல்கிறார்கள். தைப் பொங்கலை மகர சங்கராந்தி என்று வடமொழியாளார் சொல்வதைச் சிந்தையிற் கொள்க !


பிற மாதங்களுக்கும் இவ்வாறே விளக்கத்தை ஆய்வு செய்து கொள்க !


சித்திரை முதலான மாதங்களின் வடமொழிப் பெயர்கள் அந்தந்த மாதங்களில் முழுமதி (பௌர்ணமி) வரும் நாண்மீன்கள் (நட்சத்திரங்கள்) பெயர்களின் அடிப்படையில்  பெயர் சூட்டப்பட்டவை !


ஆனால், மேழம், விடை, ஆடவை, கடகம், மடங்கல், கன்னி, துலை, நளி, சிலை, சுறவம், கும்பம், மீனம் ஆகிய தமிழ் மாதப் பெயர்கள் அந்தந்த மாதங்களில் சூரியன் காலையில் எழும் ஓரை யின் (இராசியின்) பெயர் அடைப்படையில் தோன்றியவை !


இங்கு ஒரு விளக்கம் தர விரும்புகிறேன். பண்டைக் காலத்தில் தமிழ் மாதங்களின் பெயர்கள் வருடை (ஆடு), விடை, இரட்டை (ஆடவை), நண்டு (கடகம்), அரி (மடங்கல்), மடந்தை (கன்னி), துலை, தேள் (நளி), சிலை, சுறா (சுறவம்), குடம் (கும்பம்), மீன் (மீனம்) என்பதாகத்தான் இருந்திருக்கின்றன.  வடமொழி ஆதிக்கம் ஏற்பட்ட பிறகு மாதப் பெயர்கள் சித்திரை, வைகாசி.... என ஆகிவிட்டன.  ஐயமிருந்தால், சூடாமணி நிகண்டு போன்ற நூல்களை படித்துப் பாருங்கள். !
-

----------------------------------------------------------------------------------------------------------
        
 ”தமிழ்ப் பணிமன்றம் முகநூற் குழுவில் வெளியிடப் பெற்ற
 கட்டுரை.

----------------------------------------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை:

வை.வேதரெத்தினம்,
ஆட்சியர்,
தமிழ்ப் பணி மன்றம்,
[தி.ஆ:2050;சிலை,20]
{04-01-2019}

-----------------------------------------------------------------------------------------------------------