ஒரு அரசியல் கட்சி தொடங்க வேண்டுமானால் அதற்கு ஒரு முகாமையான தேவை இருக்க வேண்டும் ! நாட்டு
விடுதலையை முன்னிறுத்தி இந்தியப் பேராயக் கட்சி (INDIAN NATIONAL CONGRESS) தொடங்கப்பட்டது. முதலாளிகளின் சுரண்டலுக்கு எதிராக உழைக்கும் மக்களின் உரிமையைக்
காப்பதற்குப் பொதுவுடைமைக் கட்சி தொடங்கப்பட்டது !
நாட்டு விடுதலைக்குப் பின்,
வடமாநிலத்தவரின் மேலாளுமை நடுவணரசில் அதிகமாகி, தமிழ்நாடு
மாற்றான் தாய் மனப்பான்மையுடன் அணுகப்பட்டது. தமிழ்
மொழிக்கு உரிய முன்னிடம் தராமல் புறக்கணிக்கப்பட்டது. இதை
எதிர்த்து, திராவிட முன்னேற்றக் கழகம் தொடங்கப்பட்டது !
இவ்வாறு இந்தியப் பேராயக் கட்சி, இந்தியப் பொதுவுடைமைக்
கட்சி, திராவிட முன்னேற்றக் கழகம் ஆகியவை தோன்றுவதற்குக் காரணம்
இருந்தது – கொள்கைகள் இருந்தன !
ஆனால் மத அடிப்படையில் மக்கள்
கட்சி (ஜனசங்கம்),
இசுலாமியக் கட்சி (முஸ்லில்
லீக்) ஆகியவையும், தாழ்த்தப்
பட்டவர்களுக்கெனச் சாதி அடிப்படையில் இந்தியக் குடியரசுக் கட்சியும் தோன்றின
!
தமிழ்நாடு அளவில் வேறு
கட்சிகள் தோன்றுவதற்கான தேவை இருந்ததா என்பதை
மட்டும் இனிப் பார்ப்போம்
!
திராவிட முன்னேற்றக் கழகத்திலிருந்து, பிரிந்து
அண்ணா திராவிட முன்னேற்றக்
கழகம் 1972 –ஆம் ஆண்டு ம.கோ.இரா.
அவர்களால் தொடங்கப்பட்டது. ம.கோ.இரா. தனிக்கட்சித்
தொடங்க வேண்டிய தேவை எதுவும் அப்போது இல்லை. முழுநேரத் திரைப்பட நடிகராக இருந்த திரு.ம.கோ.இரா. தி.மு.க.வில் பகுதி நேர அரசியல் ஆளிநராகத் தான் இருந்து வந்தார் !
ஆட்சியில் இருந்த தி.மு.க.
தன் விருப்பத்திற்கு ஏற்றவாறு செயல்பட வேண்டும் என்று அவர்
ஆசைப்பட்டார். அவர்
ஆசை பகுதி அளவில் நிறைவேறி சட்ட மேலவை உறுப்பினராகவும், சட்ட
மன்ற உறுப்பினராகவும், சிறு சேமிப்பு வாரியத் துணைத் தலைவராகவும் பதவி வகித்து வந்தார் !
தன் செல்வாக்கினால் தான் தி.மு.க.
ஆட்சிக்கு வந்தது என்று அவர் நம்பினார்; அதன்
விளைவாக தி.மு.க
தலைமை / ஆட்சித் தலைமை தன்னைக்கேட்டுத் தான் எதையும் செய்ய வேண்டும்
என்று எதிர்பார்க்கலானார்.. அவரது
ஆசைகள், எதிர்பார்ப்புகள் நிறைவேற்றப்படுவதில் தி.மு.க.
தலைமை சுணக்கம் காட்டியது. பகுதி
நேர அரசியல் ஆளிநருக்கும்,
முழு நேர அரசியல் ஆளிநர்களுக்கும் கட்சிக்குள் ஏற்பட்ட மோதல், கட்சிப்
பிளவுக்கு வழி வகுத்தது
!
தான் முதலமைச்சராக ஆகவேண்டுமெனில் தனிக் கட்சி தொடங்கியாக வேண்டும் என்ற முடிவுக்கு
அவர் வந்தார். விளைவு, அ.தி.மு.க
என்ற புதிய கட்சியை 1972 –ஆம் ஆண்டு அவர் தொடங்கினார். அந்தக் கட்சியின் கொள்கை “அண்ணாயிசம்” என்றார். ஆனால் அதற்கு இன்று வரை அந்தக் கட்சியினரால் விளக்கம் சொல்ல
முடிய வில்லை ! அண்ணா தி.மு.க என்ற கட்சி, பின்பு அகில இந்திய
அண்ணா தி.முக என்று பெயர் மாற்றம் பெற்றது !
சொந்த ஆசைகள் நிறைவேறவில்லை என்னும் சினத்தினால், கொள்கையே
இல்லாமல், தொடங்கப்பட்ட கட்சி என்ற பெருமையை அக்கட்சி அரசியல் அரங்கில்
பெற்றது. திரைப்படங்களில் நல்லவராகவும், வல்லவராகவும், ஏழைகளுக்கு
உதவி செய்பவராகவும் நடித்து வந்ததால், அதை உண்மை என்று நம்பிய பகுத்தறிவில்லா மக்களிடையே அவருக்குச் செல்வாக்குப் பெருகியது !
மாநிலத் தன்னாட்சி என்னும் கொள்கையுடன் 1967 – முதல்
ஆட்சியில் இருந்து வந்த தி.மு.க.வை வீழ்த்துவதே
தன் பணி என்று திரு.ம.கோ.இரா.
செயல்படலானார். அண்ணா மறைவுக்குப் பிறகு முதல்வராக இருந்த திரு.கருணாநிதி
மீது ஊழல் புகார்களைக் கூறி குடியரசுத் தலைவரிடம் விண்ணப்பம் கொடுத்தார் !
வடநாட்டு அரசியல் ஆளிநருக்கு இது போதாதா ? நெருக்கடி
நிலையை ஆதரிக்கவில்லை என்பதற்காக, ஊழல்
புகார்கலைக் காரணம் காட்டி கருணாநிதி ஆட்சியை இந்திராகாந்தி கலைத்தார். கருணாநிதி
ஆட்சியில் தவறுகள் நடபெற்றன என்றால் அதைக் கட்சிக்குள்ளேயே பேசி, திரு.ம.கோ.இரா
சரிசெய்திருக்க வேண்டும்
. மாறாக கருணாநிதியை வீழ்த்துவதற்காக
ஊழல் புகார்ப் பட்டியல் தந்தது அரசியல் தவறு !
1972-ஆம் ஆண்டு தமிழ் நாட்டுக்கான
கேடு காலத்தைத் தொடங்கி வைத்தார் திரு.ம.கோ.இரா. அதற்குப்
பிறகு கருணாநிதி ஆட்சிக் கவிழ்ப்பு,
ம.கோ.இரா.
அரியணை ஏற்றம், ம.கோ.இரா. மறைவு, செயலலிதா
அரியணை ஏற்றம், செயலலிதா மறைவு, கருணாநிதி
மறைவு என்று பல நிகழ்வுகள் நடந்துவிட்டன ! இந்த இடைக்காலத்தில்
கருணாநிதி மீண்டும் ஆட்சிக்கு வருவதற்கும், ஆட்சிக்கு
வந்த பின் அதைத் தக்க வைப்பதற்கும்
. இந்தியப் பேராயக் கட்சி, பா.ச.க. என்று
மாற்றி மாற்றி கூட்டணி வைக்க வேண்டியதாயிறு !
அ.இ.அ.தி.மு.க.வினரும் ஆட்சிக்கு வருவதற்கும், வந்த
பின் அதைத் தக்க வைத்துக் கொள்வதற்கும் இந்தியப் பேராயக் கட்சி, பா.ச.க. என்று
மாறி மாறி கூட்டணி வைக்கலாயினர்.
மொத்தத்தில், எந்த வடநாட்டு அரசியல்
ஆளிநரின் மேலாளுமைக்கு எதிராகத் தமிழகம் கிளர்ந்து எழுந்த்தோ, அவர்களுடனேயே
கூட்டணி வைத்துக்
கொண்டு தேர்தலைச் சந்திக்க வேண்டிய கட்டாயம் தி.மு.க.வுக்கு ஏற்பட்டது !
திரு.ம.கோ.இராவின் பதவி ஆசைக்குத் தமிழ்நாடு பலிகடா ஆகிற்று ! இந்தியை
முனைப்பாக எதிர்த்த தி.மு.க.
இப்போது பெயரளவுக்கு மட்டுமே எதிர்ப்புக் காட்டுகிறது. பெரியாரின்
குமுகாயச் சீர்திருத்தக் கொள்கைகளைக்
கையிலெடுத்து முனைப்புடன்
செயல்பட்த் தொடங்கிய தி.மு.க இப்போது அதிலிருந்து எழுச்சியுடன் பின்வாங்கிக் கொண்டிருக்கிறது !
தமிழ் வளர்ச்சியில் முழுமையாக அக்கறை காட்டிய தி.மு.க , இப்போது அதை முற்றிலுமாகக் கைவிட்டுவிட்டது ! பகுத்தறிவுக் கொள்கைகளில் முனைப்புக் காட்டிய தி.மு.க, இப்போது அதைப் பற்றிப் பேசுவதையே விட்டுவிட்டது !
தமிழ் வழிக் கல்வி,
அனைத்து மக்களும் அர்ச்சகராகும் உரிமை, பிற்பட்டவர்களுக்கான
இட ஒதுக்கீடு அதிகரிப்பு,
மிகப் பிற்பட்டவர்களுக்கான தனி இட ஒதுக்கீடு, தரமணியில்
மென்பொருள் பூங்கா அமைப்பால் வேலை
வாய்ப்புப் பெருக்கம், யுண்டாய்
(HYUNDAI) போன்ற பெருந்தொழில்
வளாகப் பெருக்கம், பெரியார் சமத்துவ புரங்கள் மூலம் பல மக்களுக்கு இலவய வீடுகள், குடிசை
மாற்ரு வாரியம் அமைப்பு போன்ற எண்ணற்ற பயன்மிகு திட்டங்களை முன்னெடுத்த தி.மு.க
அரசு, திரு.ம.கோ.இராவின் குழிபறிப்பினால், தனது
திட்டங்களில் கவனம் செலுத்த முடியவில்லை !
கடந்த நான்கரை ஆண்டுகளாக மதம்
தமிழ்நாட்டையே ஆட்டுவித்துக் கொண்டிருக்கிறது. மத
நம்பிக்கையுள்ள இராசாசி பதவிப் பொறுப்பில் இருக்கையில் நெற்றியில் நாமம் தரிக்கவில்லை. இதற்கு
முன்பு தமிழ்நாட்டில் முதலமைச்சராகவோ, அமைச்சராகவோ பதவியிலிருந்த
எவரும் தமது மதம் சார்ந்த சின்ன்ங்களை தம் நெற்றியில் இட்டுக் கொள்ளவில்லை. இதற்குக்
காரணம் முதல்வரும், அமைச்சர்களும் அனைத்து மதத்தினருக்கும் பொதுவானவர் என்னும்
உயரிய கோட்பாடு
தான். ஆனால்
இப்போது முகல்வர் (இ.பி.எஸ்) உள்பட பலர் நெற்றியில் திருநீறோ குங்குமமோ இல்லாமல் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதில்லை !
ஒரு பக்கம் பெரியாரின் பெயரைச் சொல்லிக் கொண்டும் இன்னொரு பக்கம் மதச் சார்புடைவராகக் காட்டிக் கொண்டும் இரட்டை நிலை எடுத்திருக்கும் இன்றைய (அ.இ.அ.தி.மு.க) ஆட்சியாளர்கள் அனைவருக்கும் ஏமாற்றத்தைத் தந்து கொண்டிருக்கிறார்கள் !
தமிழ்நாடு இவ்வாறு சீரழிந்து போனமைக்கு முழு முதற்காரணம் திரு.ம.கோ.இரா தவிர வேறு யாருமல்ல !
--------------------------------------------------------------------------------------
ஆக்கம் + இடுகை,
வை.வேதரெத்தினம்,
ஆட்சியர்,
தமிழ்ப் பணி மன்றம்,
[தி.ஆ: 2052, ஆடவை (ஆனி) 32]
{16-07-2021}
--------------------------------------------------------------------------------------
அதில் பாதிப் பங்கு திரு கருணாநிதிக்கும் உண்டு... இருவருமே தன்னலத்தால் தமிழ்நாட்டைக் காலை வாரி விட்டனர்.
பதிலளிநீக்குதிரு. கருணாநிதிக்குத் தன்னலம் உண்டு என்பதை நான் மறுக்கவில்லை; ஆனால் தமிழ் நாட்டின் சீரழிவுக்கு அவர் காரணமல்லர்; திரு.ம.கோ.இராமச்சந்திர அய்யரே (மேனன் என்பது கேரளத்தில் அய்யருக்கான ஒரு பட்டப்பெயர்) முழுக் காரணமாகும் !
நீக்குமிக்க நன்றி !
பதிலளிநீக்கு