name='description'/> தமிழ்ப் பணி மன்றம்: பாக்கள் (02) வெண்பாவும் அதன் இனமும் !

வெள்ளி, ஏப்ரல் 23, 2021

பாக்கள் (02) வெண்பாவும் அதன் இனமும் !

 வெண்பாவும் அதன் இனமும்


சீர்கள் (பக்.22)

(01)    ஈரசைச் சீர் நான்கும் = ஆசிரிய உரிச்சீர் (.22)

(02)    ஈரசைச் சீரை இயற்சீர் என்றும் சொல்வ (பக்.23)

(03)    நேரசை இறுதியாகிய மூவசைச் சீர் (காய்ச்சீர்) நான்கும் = வெண்பா உரிச்சீர்! (.24)

(04)    ஈரசை  கூடியசீர்  இயற்சீர்   அவை

      ஈரிரண்  டென்பர்  இயல்புணர்ந்தோரே !

மூவசைச் சீர் உரிச் சீர் இருநான்கினுள்

நேரிரு நான்கும்  வெள்ளைஅல்லன,

பாவினுள்  வஞ்சியின்  பாற்பட்  டனவே !

நாலசைச்  சீர்பொதுச்  சீர்பதினாறே,

ஓரசைச்  சீருமஃ  தோரிரு  வகைத்தே ! (பக்.23. யாப்பு)

 

(05)    நிரையசை இறுதியாகிய மூவசைச் சீர் (கனிச்சீர்) நான்கும் = வஞ்சி உரிச்சீர் (.24)

(06)    நாலசைச் சீர் 16-ம்............ = பொதுச்சீர் (.24)

(07)    ஓரசைச் சீர்  இரண்டும் = அசைச்சீர் (.24)

(08)    நாலசைச் சீர் செய்யுளில் பொதுவாக வராது. ஆனால் அருகி வரும் (.25)

(09)    தண்பூ, நறும்பூ என்று முடியும் நாலசைச்  சீர்கள் எட்டும், அசை பிரிக்கையில் காய்ச் சீராகக் கொள்ளப்படும் (.25)

(10)    தண்ணிழல், நறுநிழல் என்று முடியும் நாலசைச் சீர்கள் எட்டும் அசை பிரிக்கையில் கனிச் சீராகக் கொள்ளப்படும் (.25)

(11)    ஆசிரியப் பாவினுள்  குற்றுகரம் வந்துழி அன்றி நாலசைச் சீர் வாரா (.26)


தளை (பக்.30)

 

(12)    மாமுன் நேர்  (நேர் முன் நேர்)..............= நேரொன்றாசிரியத் தளை

(13)    விளமுன் நிரை (நிரை முன் நிரை).....= நிரையொன்றாசிரியத் தளை

(14)    மாமுன் நிரை ( நேர் முன் நிரை).........= இயற்சீர் வெண்டளை

(15)    விளமுன் நேர் (நிரை முன் நேர்)..........= இயற்சீர் வெண்டளை

(16)    காய்முன் நேர்  (.....................................).......= வெண்சீர் வெண்டளை

(17)    காய்முன் நிரை (....................................)......= கலித்தளை

(18)    கனிமுன் நிரை (.....................................)......= ஒன்றிய வஞ்சித்தளி

(19)    கனிமுன் நேர்  (.....................................).......= ஒன்றாத வஞ்சித்தளை

 

வெண்பா வகைகள் (பக்.64.யாப்பு) (பக்.432. நன்னூல்)

(1)     குறள் வெண்பா = இரண்டடிகளாய் வருவது

(2)     சிந்தியல் வெண்பா = மூன்றடிகளாய் வருவது.

(3)     நேரிசை வெண்பா = நான்கடிகளாய், இரண்டாம் அடி இறுதிச் சீர் தனிச்சொல் பெற்று, முதற் சீருக்க்ய் ஏற்ற எதுகையுடன் வருவது.

(4)     இன்னிசை வெண்பா = நான்கடிகளாய், நேரிசை வெண்பாவில் மாறுபட்டு வருவது.

(5)     பஃறொடை வெண்பா = ஐந்து முதல் பன்னிரண்டு அடிகள் அளவாய் வருவது.

(6)     கலிவெண்பா = பன்னீராடிகளின் மிக்கு வருவது.


வெண்பா இனம் (பக்.64) (பக்.434. நன்னூல்)

 

(7)     வெண்டாழிசை

(8)     வெண்டுறை

(9)     வெளிவிருத்தம்

(10)    வெண்செந்துறை

(11)    குறட்டாழிசை

(12)    வெள்ளொத்தாழிசை


வெண்பா இலக்கணம் (பக்.431.நன்னூல்)

(01)    ஈற்றடி முச்சீராகவும், ஏனைய அடி நாற்சீராகவும், இயற்சீர் வெண்டளை, வெண்சீர் வெண்டளை என்னும் தலைகளைக் கொண்டு  பிற சீர்களும் தளைகளும்  கலவாமல், நாள், காசு, மலர், பிறப்பு என்னும் வாய்பாட்டுகளுள் ஒன்றை இறுதியாகப் பெற்று  ஒருவிகற்பத்தாயினும், பல விகற்பத்தாயினும் வருவது, வெண்பா ஆகும். (ஒரு விகற்பம் = ஒரே எதுகை, பல விகற்பம்பல எதுகை) (பக்.431. நன்னூல்)

(02)    வெண்பாவினுள் வஞ்சி உரிச்சீர் வராது. அயற்றளை விரவாது (பக்.143. யாப்பு)

(03)    செப்பலோசை மூன்று வகைப்படும். அவை;- (1) ஏந்திசைச் செப்பலோசை (02) தூங்கிசைச் செப்பலோசை (3) ஒழுகிசைச் செப்பலோசை.

 

(04)    யா,தா,னு நா,டா,மால் ஊ,ரா,மால் என்,னொரு,வன்

சாந்,துணை,யும்  கல்,லா,த வாறு

(05)    இது வெண்சீர் வெண்டளையால் வந்தமையான், ஏந்திசைச் செப்பலோசை (பக்.57.யாப்பு)

 

(06)    பா,லொடு  தேன்,கலந்  தற்,றே  பணி,மொழி

வா,லெயி  றூ,றிய நீர்.

(07)    இஃது இயற்சீர் வெண்டளையான் வந்தமையால், தூங்கிசைச் செப்பலோசை (.57. யாப்பு)

 

(08)    கொல்,லான்  புலா,லை  மறுத்,தா,னைக்  கை,கூப்,பி

எல்,லா  உயி,ருந்  தொழும்

(09)    இது வெண்சீர் வெண்டளையும், இயற்சீர் வெண்டளையும் விரவி வந்தமையால், ஒழுகிசைச் செப்பலோசை. (பக்.58. யாப்பு)


குறள்வெண்பா (பக்.76)

 

     மஞ்,சு,சூழ்   சோ,லை   மலை,நா,   மூத்,தா,லும்

அஞ்,சொன்   மட,வாட்   கரு,ளு.

 

(10)    இது பிறப்பு என்னும் வாய்பாட்டான்  முற்றியலுகரம் ஈறாய் இற்ற ஒரு விகற்பக் குறள் வெண்பா (பக்.77)

(11)    இக்குறள் வெண்பாவில் 3 வெண்சீர் வெண்டளையும், 3 இயற்சீர் வெண்டளையும் வந்துள்ளன. அயற்றளை ஏதும் வரவில்லை.

 

நேரிசை வெண்பா

(12)    ஈற்றடி முச்சீராய், ஏனைய அடி நாற்சீராய் இரண்டாம் அடியின் இறுதிச் சீர் தனிச்சொல்லாய், செப்பலோசை உடையதாய், இயற்சீர் வெண்டளையானும், வெண்சீர் வெண்டளையானும் இயன்று, வேற்றுத் தளை விரவாமல், ஒருவிகற்பத்தாலேனும், அல்லது இருவிகற்பத்தாலேனும் வந்துநாள், காசு, மலர், பிறப்பு என்னும் வாய்பாட்டால் இறுவது நேரிசை வெண்பா ஆகும்.

 

(1)     பா,லுந்  தெளி,தே,னும்  பா,கும்  பருப்,பு,மிவை

நா,லுங்  கலந்,துனக்,கு  நான்,தரு,வேன்  –  கோ,லஞ்,செய்

துங்,கக்  கரி,முகத்,துத்  தூ,மணி,யே  நீ,யெனக்,குச்

சங்,கத்  தமிழ்,மூன்,றுந்  தா.

(2)     இப்பாடலில் 9 வெண்சீர் வெண்டளையும், 5 இயற்சீர் வெண்டளையும் வந்துள்ளமையால் இது ஒழுகிசைச் செப்பலோசை உடைட நேரிசை வெண்பா.

 

(3)     இரண்டு குறள் வெண்பாவாய், இரண்டாம் அடியில் முதல் சீருக்கு ஏற்ற தனிச் சொல்லால் அடி நிரம்பி. செப்பலோசை வழுவாது முதல் இரண்டடியும் ஒரு விகற்பமாய்க் கடையிரண்டு அடியும் மற்றொரு விகற்பமாய் வரினும், நான்கடியும் ஒரு விகற்பமாய் வரினும், அவ்வெண்பா, இருகுறள் நேரிசை வெண்பா என்றும் சொல்லப்படும். (பக்.65. யாப்பு)

 

இன்னிசை வெண்பா (பக்.68)

(4)     ஈற்றடி முச்சீராய், ஏனைய அடி நாற்சீரடியாய் அளவடியாய் அமைந்து,தனிச் சொல் இல்லாமல் ஒரு விகற்பத்தாலேனும் பல விகற்பத்தாலேனும் இயல்வது இன்னிசை வெண்பா ஆகும். (பக்.68. யாப்பு)

 

வை,கலும்   வை,கல்   வரக்,கண்,டு   மஃ,துண,ரார்

வை,கலும்   வை,கலை   வை,குமென்   றின்,புறு,வர்

வை,கலும்   வை,கற்,றம்   வாழ்,நாண்,மேல்   வை,குதல்

வை,கலை  வைத்,துண,ரா  தார்

(5)     இது தனிச் சொல் இல்லாமல் வந்துள்ளமையால் இன்னிசை வெண்பா (பக்.68. யாப்பு)

(6)     இப்பாடலில் இயற்சீர் வெண்டளை ஏழும், வெண்சீர் வெண்டளை ஏழும் வந்துள்ளன.

 

(7)     இரண்டாமடியின் இறுதி தனிச் சொல் பெற்று மூன்று விகற்பத்தான் வந்தாலும் அது இன்னிசை வெண்பாவே. (பக்.69)

(8)     மூன்ற்றாம் அடியின் இறுதி தனிச் சொல்ம்பெற்று இரு விகற்பத்தான் வந்தாலும் அது இன்னிசை வெண்பாவே (பக்,69)

 

(9)     பல விகற்பாகி அடிதோறும் ஒரூஉத் தொடை (1,3,சீர்) பெற்று வந்தாலும் அஃது இன்னிசை வெண்பாவே. (பக்,69)

 

(10)    எடுத்துக்காட்டாகத் தரப்பட்டிருக்கும் கீழ்க்கண்ட பாடலில் 11 இயற்சீர் வெண்டளையும், 3 வெண்சீர் வெண்டளையும் வந்துள்ளன.

மழை,யின்,றி   மா,நிலத்,தார்க்   கில்,லை;  மழை,யும்

தவ,மிலா   ரில்,வழி  யில்,லைதவ,மும்

அர,சிய   லில்,வழி  இல்,லைஅர,சனும்

இல்,வாழ்,வா   ரில்,வழி   யில்.

 

 

(11)    நேரிசை வெண்பாவிற் சிறிது வேறுபட்டு நான்கடியான் வருகிற அனைத்து வெண்பாவும் இன்னிசை வெண்பா ஆகும் (பக். 69. யாப்பு)

பஃறொடை வெண்பா (பக்.72)

 

பன்,மா,டக்   கூ,டல்   மது,ரை   நெடுந்,தெரு,வில்

என்,னோ,டு   நின்,றா   ரிரு,வர்   அவ,ருள்,ளும்

பொன்,னோ,டை   நன்,றென்,றாள்   நல்,லளே   பொன்,னோ,டைக்

கியா,னை,நன்   றென்,றா,ளும்  அந்நிலை,யள்  யா,னை

எருத்,தத்   திருத்,   இலங்,கிலை,வேல்   தென்,னன்

திருத்,தார்,நன்   றென்,றேன்   தியே,ன்

 

(12)    இஃது ஆறடியான் வந்த பலவிகற்பப் பஃறொடை வெண்பா. (பக்.72)

(13)    இப்பாடலில் 11 வெண்சீர் வெண்டளையும், 11, இயற்சீர் வெண்டளையும் வந்துள்ளன. அயற்றளை ஏதும் வரவில்லை.

(14)    கியானைநன்என்பதில் உள்ள குற்றியலிகரத்தை நீக்கி, அலகிட்டு அசை காணவேண்டும். (பக்.133. யாப்பு)

 

நேரிசைச் சிந்தியல் வெண்பா (பக்.73)

(01)    நேரிசை வெண்பா போல இரண்டாம் அடியின் இறுதி  தனிச்சொல் பெற்று இரு விகற்பத்தானும், ஒரு விகற்பத்தானுன், மூன்றடியால் வருவன நேரிசைச் சிந்தியல் வெண்பா ஆகும். (பக்.73. யாப்பு)

 

நற்,கொற்,   வா,யில்   நறுங்,குவ,ளைத்   தார்,கொண்,டு

சுற்,றும்,வண்   டார்ப்,பப்   புடைத்,தா,ளே  –  பொற்,றே,ரான்

மா,லை,நல்   வா,யில்  மகள்.

 

(02)    இஃது இரண்டாம் அடியின் இறுதி தனிச் சொல் பெற்று, இரு விகற்பத்தான் வந்த நேரிசைச் சிந்தியல் வெண்பா. (பக்.74. யாப்பு)

(03)    இப்பாடலில் 7 வெண்சீர் வெண்டளையும், 3 இயற் சீர் வெண்டளையும் வந்துள்ளன. அயற்றளை ஏதும் வரவில்லை.


இன்னிசைச் சிந்தியல் வெண்பா

 

நறு,நீ,   நெய்,தலுங்   கொட்,டியுந்   தீண்,டிப்

பிற,நாட்,டுப்   பெண்,டிர்   முடி,நா,றும்   பா,ரி

       அற,நாட்,டுப்   பெண்,டி   ரடி.

 

(01)    இது தனிச் சொல் இன்றி ஒரு விகற்பத்தான் வந்த இன்னிசைச் சிந்தியல் வெண்பா. (பக்.74. யாப்பு)

(02)    இப்பாடலில் வெண்சீர் வெண்டளை 4-ம், இயற்சீர் வெண்டளை 6-ம் வந்துள்ளன. அயற்றளை ஏதும் வரவில்லை.


வெண்செந்துறை (பக்.78)

(01)    குறள் வெண் செந்துறை விழுமிய பொருளும் ஒழுகிய ஓசையும் உடையடதாகி, எனைத்துச் சீரானும் அளவொத்த  இரண்டடியாய் வரும்.(பக்.22.யாப்பிலக்கணம்-விசாகப் பெருமாள் ஐயர்)

(02)    இரண்டடியாய் தம்முள் அளவொத்து  வருவது வெண்செந்துறை. இதை செந்துறை வெள்ளை என்றும் குறள் வெண் செந்துறை என்றும் கூறுவர். (பக்.78. யாப்பு)

 

ஆர்,கலி  யுல,கத்,து  மக்,கட்  கெல்,லாம்

,தலிற்  சிறந்,தன்  றொழுக்,  முடை,மை

 

கொன்,றை  வேய்ந்,  செல்,  னடி,யிணை

என்,று மேத்,தித் தொழு,வோ  மியா,மே

 

(03)    முதற் பாடலில் ஆசிரியத்தளை (நிரை-2,நேர்-2) 4-ம், இயற்சீர் வெண்டளை  2-ம், வெண்சீர் வெண்டளை 1-ம் வந்துள்ளன.

(04)    இரண்டாவது பாடலில் ஆசிரியத்தளை (நேர்-3) 3-ம், இயற்சீர் வெண்டளை 4-ம் வந்துள்ளன.


குறட்டாழிசை (பக்.79)

(01)    நாற்சீரின் மிக்க பல சீரான் வந்து, அடி இரண்டாய், ஈற்றடி குறைந்து வருவன குறட்டாழிசை (பக்,79. யாப்பு)

(02)    செப்பலோசையிற் சிதைந்து, வேற்றுத்தளைகள் வந்து, குறள் வெண்பாவிற் சிதைந்து வருவன எல்லாம் குறட்டாழிசை எனப்படும் (பக்.80. யாப்பு)

(03)    வேற்றுத் தளை விரவிய குறள் வெண்பாவும் குறட்டாழிசை எனச் சொல்லப்படும். (பக்.22.யாப்பிலக்கணம்-விசாகப் பெருமாள் ஐயர்)

(04)    குறட்டாழிசை எனினும் தாழிசைக் குறள் எனினும் ஒக்கும் (பக்.79)

(05)    சீர் வரையறை இன்மையால், எனைத்துச் சீரானும், அடியானும் வரப்பெறும் (பக்.79)

 

நண்,ணு   வார்,வினை   நை,   நா,டொறு   நற்,   வர்க்,கர  சா,  ஞா,னநற்,

கண்,ணி  னா,னடி  யே,யடை  வார்,கள்  கற்,றவ,ரே.

 

(06)    இஃது ஈற்றடி குறைந்து, இரண்டடியாய்ப் பல சீரான் வந்தமையால் குறட்டாழிசை (பக்.79)

(07)    இதில் (நேரொன்று) ஆசிரியத்தளை 7 –ம், இயற்சீர் வெண்டளை

      -5 ம் வந்துள்ளன.

 

வெளிவிருத்தம்

(01)    மூன்றடியானும் முற்றுப் பெற்று அடிதோறும் ஒரு சொல்லே இறுதிக்கண் தனிச் சொல்லாய் வருவது வெளிவிருத்தம் எனப்படும் (பக்.80. யாப்பு)

(02)    நான்கடியானும் வருதல் உண்டு. (பக்.81. யாப்பு)

(03)    நாற்சீராய் அடிகள் வந்தாலும், தனிச் சொல்லானது நாற்சீரினுள் அடங்காது (பக்.81. யாப்பு)

 

,வா  வென்,றே  யஞ்,சின  ராழ்ந்,தாரொரு,சா,ரார்

கூ,கூ  வென்,றே   கூ,விளி   கொண்,டாரொரு,சா,ரார்

மா,மா  வென்,றே   மாய்ந்,தனர்  நீந்,தாரொரு,சா,ரார்

,கீர்  நாய்,கீ   ரென்,செய்,து  மென்,றாரொரு,சா,ரார்

 

(04)    இது நான்கடியாய் ஒருசாரார் என்னுந்  தனிச்சொல் பெற்று வந்த வெளிவிருத்தம் (பக்.81.யாப்பு)

(05)    இப்பாடலில் (நேரொன்று) ஆசிரியத்தளை 7-ம், இயற்சீர் வெண்டளை -8-ம், வெண்சீர் வெண்டளை -4-ம் வந்துள்ளன.

 

வெண்டாழிசை () வெள்ளொத்தாழிசை

(01)    வெண்டாழிசை மூன்றடியாய், முதலிரண்டடி நாற்சீராயும், ஈற்றடியொன்றும் வெண்பாவை போல் முச்சீராயும் முடிவு பெற்று, வேற்றுத்தளை விரவி வருவனவும், சிந்தியல் வெண்பா ஒரு பொருண்மேல் மூன்றடுக்கி வருவனவும் என இரு வகைப்பட்டு வரும். (பக்.23.யாப்பிலக்கணம்-விசாகப் பெருமாள் ஐயர்)

(02)    மூன்றடியான், ஈற்றடி முச்சீரடியாய் இறுவது வெண்டாழிசை அல்லது வெள்ளொத்தாழிசை எனப்படும் (பக்.81. யாப்பு)

 

நண்,பி   தென்,று  தீ,  சொல்,லார்

முன்,பு  நின்,று  முனி,  செய்,யார்

அன்,பு  வேண்,டு  பவர்

 

(03)    இது மூன்றடி ஆசிரியத் தளையான் வந்த வெண்டாழிசை (பக்.82)

(04)    இப்பாடலில் (நேரொன்று) ஆசிரியத்தளை 8-ம், இயற்சீர் வெண்டளை -2-ம் வந்துள்ளன.

 

வெண்டுறை (பக்.82)


(05)    மூன்றடிச் சிறுமையாய், ஏழடிப் பெருமையாய், இடையிடை நான்கடியானும், ஐந்தடியானும், ஆறடியானும் வந்து, பின்பிற சில அடி சில சீர் குறைந்து வருவன வெண்டுறை எனப்படும் (பக்.82.யாப்பு)

 

தா,ளா,   ரல்,லா,தார்   தாம்,பல   ரா,யக்,கா   லென்,னா  மென்,னாம்

,ளியைக்   கண்,டஞ்,சி   யா,னை,தன்   கோ,டிரண்,டும்

பீ,லிபோற்   சாய்த்,துவி,ழும்   பிளிற்,றி   யாங்,கே.

 

(06)    இது மூன்றடியாய், ஈற்றடி இரண்டும் இரண்டு சீர் குறைந்து வந்த ஓரொலி வெண்டுறை.

(07)    மேற்கண்ட பாடலில் வெண்சீர் வெண்டளை 6-ம், இயற்சீர் வெண்டளை -2-ம், (நேரொன்று) ஆசிரியத்தளை 3-ம், கலித்தளை 1-ம் வந்துள்ளன.

 

முழங்,குதி,ரைக்  கொற்,கை,வேந்,தன்  முழு,துல,கு  மே,வல்,செய

......முறை,செய்  கோ,மான்,

வழங்,குதி,றல்  வாண்,மா,றன்  மாச்,செழி,யன்  றாக்,கரி, 

.......வை,வேல்  பா,டிக்

கலங்,கி  நின்,றா,ரெலாங்  கரு,தலா  கா,வணம்

இலங்,குவா  ளிரண்,டினா  லிரு,கை,வீ  சிப்,பெயர்ந்

              தலங்,கன்,மா  லை,யவிழ்ந்  தா,டவா  டும்,மிவள்

பொலங்,கொள்,பூந்  தடங்,கட்,கே  புரிந்,துநின்  றா,ரெலாம்

விலங்,கியுள் ளந்,தப  விளிந்,துவே  றா,பவே.

 

(08)    இவ்வெண்டுறையுள் வஞ்சி உரிச்சீரும், இயற்சீரும், வெண்சீரும், வஞ்சித் தளையும், ஆசிரியத் தளையும், வெண்டளையும், கலித்தளையும் மயங்கி வந்துள்ளன. (பக்.142. யாப்பு)

(09)    இப்பாடலில் 8 வெண்சீர் வெண்டளையும், 8 இயற்சீர் வெண்டளையும், 3 நேரொன்று ஆசிரியத் தளையும், 7 நிரையொன்று ஆசிரியத் தளையும், 3 வஞ்சித் தளையும், 2 கலித்தளையும் வந்துள்ளன.

 

வெள்ளொத்தாழிசை (பக்.84)

(10)    வெள்ளொத்தாழிசையின் முதலிரண்டு  அடியும் நான்கு சீரான் வரும். சிந்தியல் வெண்பா ஒரு பொருண் மேல் மூன்றடுக்கி வருவன எல்லாம் வெள்ளொத்தாழிசை எனப்படும். (பக்.84. யாப்பு)

 

அன்,னா   யறங்,கொ   னலங்,கிளர்   சேட்,சென்,னி

ஒன்,னா   ருடை,புலம்   போ,   நலங்,கவர்ந்,து

துன்,னான்   துறந்,து   விடல்.

 

,டீ   யறங்,கொ   னலங்,கிளர்   சேட்,சென்,னி

கூ,டா   ருடை,புறம்   போ,   நலங்,கவர்ந்,து

நே,டான்  துறந்,து   விடல்.

 

பா,வா   யறங்,கொ   னலங்,கிளர்   சேட்,சென்,னி

மே,வா   ருடை,புலம்   போ,   நலங்,கவர்ந்,து

கா,வான்   துறந்,து   விடல்.

(11)    இவை, சிந்தியல் வெண்பா, ஒரு பொருண்மேல் மூன்றடுக்கி வந்தமையான், வெள்ளொத்தாழிசை ஆகும். (பக்.85. யாப்பு)

(12)    இப்பாடலில் ஒவ்வொரு தாழிசையிலும் இயற்சீர் வெண்டளை 8-ம், வெண்சீர் வெண்டளை 2-ம் வந்துள்ளன. அயற்றளைகள் ஏதும் வரவில்லை.

 

-------------------------------------------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை,

வை.வேதரெத்தினம்,

[veda70.vv@gmail.com]

ஆட்சியர்,

தமிழிப் பணி மன்றம் முகநூல்.

-------------------------------------------------------------------------------------------------------------

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன .