name='description'/> தமிழ்ப் பணி மன்றம்: பல்வகை (22) பிறரை மதிக்கக் கற்றுக் கொள்வோம் !

வியாழன், ஜனவரி 23, 2020

பல்வகை (22) பிறரை மதிக்கக் கற்றுக் கொள்வோம் !

அனைவரையும் மதிப்போம் ! அப்பொழுது தான் நாமும் மதிக்கப்படுவோம் !




எதிரில் வருபவர் நமக்கு அறிமுகம் ஆனவராக இருந்தால் அவருக்கு வணக்கம் சொல்கிறோம். அவரும் நமக்கு வணக்கம் சொல்கிறார். இது தான் பண்பாடு. நாம் வணக்கம் சொன்னாலும் சிலர் நமக்கு திரும்ப வணக்கம் சொல்வதில்லை. இத்தகைய பண்பாடற்ற செயல் சிலரிடம் இருக்கத்தான் செய்கிறது !

யார் இத்தகைய பண்பாடில்லாத மனிதர்கள் ? (01) மேட்டுக் குடிமக்கள் எனத் தம்மை கருதிக் கொண்டிருக்கும் தன்முனைப்பு (ஆணவம்) எண்ணம் கொண்டவர்கள் (02) நம்மை விட எல்லா வகையிலும்  தாம் உயர்ந்த நிலையில்  இருப்பதாகக் கருதிக் கொண்டிருக்கும் சில அதிகாரிகள் !

இத்தகைய பண்பாடற்ற மனிதர்களை நாம் திருத்த முடியாது. அவர்களாக உணர்ந்து திருந்தினால் தான் உண்டு. பாவம் ! இந்தபெரியமனிதர்களை விட்டுவிடுவோம் !

முகநூலில் நாம் ஒருகட்டுரை எழுதுகிறோம். அதைப் பலர் படிக்கிறார்கள். படித்துவிட்டு எதுவும் சொல்லாமல் சிலர் கடந்து போய்விடுகிறர்கள். “SEEN BY” என்று காணப்படும் குறிப்பைச் சொடுக்கிப் பார்த்தால், யார் யார் இப்படிக் கடந்து போனவர்கள் என்பதை முகநூல் பட்டியல் இட்டுக் காட்டிவிடுகிறது !

நம்முடைய இடுகைக்கு, தாம்விழைவு” (LIKE) கொடுத்தாலோ, அல்லது பின்னூட்டம் (COMMENTS) இட்டாலோ, தம் தரம் தாழ்ந்து விடும் என்ற மிதப்பு எண்ணம் கொண்ட இத்தகையமாமனிதர்களையும் நாம் திருத்த முடியாது. நம் இடுகையைப் படித்துக் கருத்துச் சொல்வதால்  அவர்களது தரம் தாழ்ந்து போகிறது என்றால், அவர்கள் உயரத்திலேயே இருக்கட்டும் ! அவர்களையும் விட்டு விடுவோம் !

இந்தமாமனிதர்கள் அல்லாமல் வேறு சிலர் நமது இடுகைக்குவிழைவு” (LIKE) தருகிறார்கள்; அல்லதுகருத்துரை” (COMMENTS) சொல்கிறார்கள்; அல்லதுபகிர்வு” (SHARE) மட்டும் செய்கிறார்கள் !

இரண்டொரு சொற்களில் கூட கருத்துரை (பின்னூட்டம்) எழுத நேரமில்லாமல் அல்லது மடிமை (சோம்பல்) கொண்டுவிழைவு” (LIKE) மட்டும் தருபவர்களையும் விட்டுவிடுவோம். அவர்களுக்கு என்ன மிகுதேவையோ (அவசரம்) “கருத்துரை” (COMMENTS) சொல்ல நேரமில்லை !

சிலர்பகிர்வு” (SHARE) மட்டும் செய்கிறார்கள். அவர்கள் கருத்துரை (COMMENTS) எழுதாவிட்டாலும் நம் வாழ்த்துக்குரியவர்கள். அவர்களை மனதிற்குள்ளேயே வாழ்த்துவோம். இவ்விரு வகையினரைத் தவிர்த்து, கருத்துரை (COMMENTS) எழுதுபவர்கள், தம் நேரத்தைச் செலவிட்டு, நம் இடுகையை முழுவதுமாகப் படித்துப் பார்த்து, ஒரு வரியிலோ அல்லது பல வரிகளிலோ தம் கருத்தினை வெளிப்படுத்துகிறார்கள் !

இவ்வாறு கருத்துரை (COMMENTS) எழுதுபவர்கள் நமது நன்றிக்கு உரியவர்கள். இடுகை செய்யும் நாம், நண்பர்களின் பின்னூட்டங்களையும் (கருத்துரையையும்) முழுமையாகப் படிக்க வேண்டும். என்ன சொல்கிறார்கள் என்பதை உள்வாங்கி,  அவர்களுக்கு அன்புடன் மறுமொழி (பதில்) தரவேண்டும் !

நமது மறுமொழி (பதில்), நேர்வுக்குத் தக்கபடி, ஒருவிழைவு” (LIKE) தருவதன் மூலமும் இருக்கலாம்; ஒரு சொல்லிலும் அமையலாம்; ஒரு வரியிலும்  அமையலாம்; பல வரிகளிலும்  அமையலாம். நமக்கு வணக்கம் சொல்பவருக்கு நாம் ஆற்றும் எதிர்வினையாக வணக்கம் சொல்வதுபோன்றது இச்செயல். எந்தவொரு வகையிலும் நமது நன்றியை அவருக்கு உணர்த்தாவிட்டால், அவரை நாம் மதிக்கவில்லை என்பதாக ஆகிவிடும் !

பல பின்னூட்டங்கள் (கருத்துரைகள்) இடுகையாளரின் எதிர்வினையின்றி (NIL RESPONSE) மொட்டை மரமாகக் காட்சி அளிப்பதைக் கண்டு மனம் வருந்தி இந்த இடுகையைச் செய்திருக்கிறேன். இடுகை செய்யும் அனைத்து நண்பர்களும், தம்மை மதித்துக் பின்னூட்டம் (கருத்துரை) இட்டவர்களை மதியுங்கள் எனக் கேட்டுக் கொள்கிறேன் !

அனைவரையும் மதிப்போம் ! அப்பொழுது தான் நாமும் மதிக்கப்படுவோம் !


----------------------------------------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை,
வை.வேதரெத்தினம்,
ஆட்சியர்,
தமிழ்ப் பணி மன்றம்,
[தி.:2051:சுறவம்(தை)06]
{20-01-2020}
----------------------------------------------------------------------------------------------------------

     தமிழ்ப் பணி மன்றம் முகநூற் குழுவில் வெளியிடப் பெற்ற
கட்டுரை !

----------------------------------------------------------------------------------------------------------

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன .