”ஐந்தும்” என்பது “ஐந்து” என மருவியதன் விளைவு !
ஐந்து
பெற்றால் அரசனும் ஆண்டியாவான் என்பது மக்களிடையே வழங்கும் சொலவடை ! இதன் மூல வடிவம் “ஐந்தும் பெற்றால் அரசனும் ஆண்டியாவான்”
என்பது ! ஐந்து என்பது எவற்றைக் குறிக்கிறது
? காண்போமா !
(01) ஆடம்பரமான
தாய்
:-
ஒரு
ஆடவனின் தாய்க்கு, ஆடம்பர வாழ்க்கை மீது அளவு கடந்த
ஈர்ப்பு இருக்குமேயானால், அவன் எத்துணை வருவாய் ஈட்டினாலும்,
போதாது ! அவனது செல்வ வளம் காலப்போக்கில் நலிவடைந்து
வறியவன் ஆகிப் போவான் !
(02)
பொறுப்பற்ற தந்தை :-
தந்தை
குடும்பப் பொறுப்பு சற்றும் இல்லாதவராக இருந்தால், எந்தக்
குடும்பமாக இருந்தாலும், அது நாளடைவில் நிலகுலைந்து தான் போகும்
! இத்தகைய குடும்பத்து ஆடவன் எத்துணைப் பாடுபட்டாலும், அக்குடும்பம், உயர்நிலைக்கு வருவது அரிதினும் அரிது
!
(03)
சோம்பேறிச் சகோதரர்கள் :-
சகோதரர்கள்
சோம்பேறிகளாக இருந்தால், அவர்களால் வருவாய் வாய்ப்புகள்
துப்புரவாக இராது ! ‘குந்தித் தின்றால் குன்றும் குலைந்து போம்’
என்னும் முதுமொழியின்படி இவர்கள் குடும்பத்துச் சொத்துகளைத் தின்றே அழித்து
விடுவார்கள் !
(04)
ஒழுக்கமில்லாத மனைவி :-
நன்முறையில்
குழந்தை வளர்ப்பு, தேவையற்ற செலவுத் தவிர்ப்பு,
சிக்கனமான வாழ்க்கை, பேராசை இன்மை, இனிய பேச்சு, ஆகிய நல் ஒழுக்கங்கள் இல்லாத மனைவி ஒருவனுக்கு
அமைந்துவிட்டால், அவனால் செல்வ வளத்தில் நிமிர்ந்து நிற்கவே முடியாது
! குடும்பம் மென்மேலும் உயர்வடைய ஒழுக்கசீலரான மனைவி இன்றியமையாத்
தேவை ஆகும் !
(05)
சொற்பேச்சு கேளாப் பிள்ளைகள் :-
தாய்
தந்தையரின் உயரிய வழிகாட்டுதலின்படி நடந்து, அவர்களின் அறிவுரைப்படி
தம்மை நல்வழிப் படுத்திக் கொள்ளும் பிள்ளைகள் அமைவது ஒரு குடும்பத்திற்குக் கிடைக்கும்
பெரும் பேறாகும் ! மாறாக, பெற்றோரின் சொற்
பேச்சினைக் கேட்டு நடவாத பிள்ளைகள்
இருக்கும் குடும்பம், எக்காலத்திலும் முன்னேறவே
முடியாது !
எதிர்மறை
விளைவுகளைத் தரும் மேற்கண்ட ஐந்து தீய குணங்களையும் உடைய எந்தக் குடும்பமும், எந்தக் காலத்திலும், முன்னேற முடியாது ! குடும்பத் தலைவன் எத்துணை உழைத்தாலும், அவனது வருவாய்
நலிவடைந்து, குடும்பமே வறிய நிலைக்கு ஆட்பட்டுப் போகும்
! குடும்பத் தலைவன் அரசனே ஆனாலும்கூட நாளடைவில் ஆண்டியாகிப்போவான்
!
மேற்கண்ட
கருத்தை எடுத்துச் சொல்ல உருவான சொலவடை, காலப் போக்கில்
கருத்துச் சிதைவு ஏற்பட்டு, “ஐந்து பெண் பெற்ற அரசனும் ஆண்டியாவான்”,
“ஐந்தாறு பெண் பிறந்தால், அரசனும் ஆண்டியாவான்”
என்று வடிவம் மாறி நிலைபெற்றுவிட்டது !
“ஐந்தும் பெற்றால், அரசனும் ஆண்டியாவான்” என்று நாம் இனிமேல் திருத்தமாகப் பேசுவோம் ! எழுதுவோம்
! சரிதானே !
-------------------------------------------------------------------------------------------------------
ஆக்கம் + இடுகை,
வை.வேதரெத்தினம்,
ஆட்சியர்,
தமிழ்ப் பணி மன்றம்.
[தி.ஆ:2049, துலை,23.]
(09-12-2018)
-----------------------------------------------------------------------------------------------------
”தமிழ்ப் பணி மன்றம்”
முகநூற் குழுவில் வெளியிடப் பெற்ற
கட்டுரை !
--------------------------------------------------------------------------------------------------
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன .