புதுச் சொல் புனைவோம் !
உடு விடுதி = STAR HOTEL
----------------------------------------------------------------------------------------------------
குழந்தையின் பிறப்பியத்தை
(ஜாதகத்தை) கணிக்கும் ஆளிநர், பிற செய்திகளுடன் குழந்தையின் நட்சத்திரம் இன்னதென்றும்
தெரிவிக்கிறார். திருமணப் பேச்சு நேர்வுகளில் மணமகன், மணமகளின் பிறந்த
நட்சத்திரம் என்ன என்பது பற்றிய உசாவல் (விசாரணை) எழுகிறது !
நகர்ப் புறங்களில் தங்கும்
விடுதிகள் (HOTELS
& LODGES) அமைக்கப் படுகின்றன. இவற்றுக்கு அங்குள்ள வசதிகளைப் பொறுத்து தரம்
பிரித்து நட்சத்திர நிலை (STAR STATUS) வழங்கப்படுகிறது !
குளிர்ப் பேழை (REFRIGERATOR) போன்ற மின்மவியல்
பொருள்களுக்கு (ELECTRONIC GOODS) அவற்றின் மின் துய்ப்பு (CURRENT CONSUMPTION) அளவைப் பொறுத்து
நட்சத்திரக் குறியீடு (STAR RATINGS) வழங்கப்படுகிறது !
இப்படித் தமிழ் வரி
வடிவில் சொல்லப்படும் “நட்சத்திரம்” என்ற சொல் தமிழ்ச் சொல் அன்று. வடமொழியிலிருந்து இறக்குமதி
செய்யப்பட்ட ஒரு சொல். சரி ! இதற்குத் தமிழ்ச் சொல்தான் என்ன ?
"மீன் திகழ் விசும்பில் பாயிருள் அகல.....” என்கிறது புறநானூற்றில் 25-ஆவது செய்யுள் !
மீன் என்ற சொல் இங்கு
நட்சத்திரத்தைக் குறிக்கிறது !
“விசும்பின்
மீன் பூத்தன்ன உருவ ஞாயில்........” (புறநானூறு - 21).
“பல்மீன்
நாப்பண் திங்கள் போலவும்.....” (புறநானூறு -13)
“படாஅச்
செலீஇயர், நின் பகைவர் மீனே....” (புறநானூறு-24)
“மீன்
பூத்தன்ன தோன்றலர்....” என்கிறது திருமுருகாற்றுப் படை (வரி 170).
“பல்மீன்
நடுவண் பால்மதி போல்.....” என்கிறது சிறுபாணாற்றுப்படை. (வரி-219) “
“மீன்
பூத்தன்ன வான் கலம் பரப்பி....” என்று பேசுகிறது பெரும்பாணாற்றுப்படை (வரி-477).
“பல்
மீன் நடுவண் திங்கள் போலவும்.....” இது மதுரைக் காஞ்சி (வரி 769) காட்டும் காட்சி !
இவ்வாறு பழந்தமிழ்
இலக்கியங்களில் ஆளப் பெற்றுள்ள “மீன்” என்ற சொல் இக்காலத்தில் “நட்சத்திரம்” என்றும், ஆங்கிலத்தில் “ஸ்டார்” (STAR), என்றும் நம் நாவில் தவழ்கிறது !
மீன் என்ற சொல்லுக்கு
நீரில் வாழும் ஓர் உயிரினம் (மீன் = FISH) என்றும் ஒரு பொருள் உண்டு.
இஃதன்றி, பொருத்தமான முன்னொட்டுடன்
நாண்மீன் (நாள் + மீன் = நாண்மீன் = STAR ), விண்மீன் (விண் + மீன் = விண்மீன்
= STAR), வான்மீன் (வான் + மீன் =
வான்மீன் = STAR)
கோண்மீன் (கோள் + மீன் =
கோண்மீன் = PLANET)
ஆகிய சொற்களும் தமிழ்
ஆர்வலரிடையே வழங்கி வருகின்றன !
சங்கே முழங்கு என்ற பாடலில் “விண்ணோடும் மண்ணோடும்
உடுக்களோடும்.....” என்பார் பாரதிதாசன். இங்கு “உடு” என்ற சொல் நட்சத்திரத்தைக் குறிக்கிறது.
இஃதன்றி “ஆனியம்” என்ற சொல்லும்
நட்சத்திரத்தைக் குறிப்பதாக இலக்கியங்களில் வழங்கப்படுகிறது.
சரி ! மீன், நாண்மீன், விண்மீன், வான்மீன், உடு, ஆனியம் என்று பல சொற்களைத்
தமிழில் வைத்துக் கொண்டு ”ஸ்டார் ஹோட்டல்” என்பதை “நட்சத்திர விடுதி” என்று சொல்வானேன் ? பழைய தமிழ்ச் சொல்லைப் பயன்படுத்தி புதிய சொற்களைப் படைப்போமே !
==========================================================
STAR HOTEL................................= உடு விடுதி
TWO STAR HOTEL.......................= ஈர்ம்மீன் விடுதி
THREE STAR HOTEL...................= மும்மீன் விடுதி
FOUR STAR HOTEL.....................= நான்மீன் விடுதி
FIVE STAR HOTEL.......................= ஐம்மீன் விடுதி
FIVE STAR AIR-CONDITIONER...= ஐம்மீன் பதனி
FIVE STAR REFRIGERATOR.......= ஐம்மீன் குளிர்ப் பேழை
===========================================================
===========================================================
உடுவிடுதி |
I agree to all of your insights. Engineering dept. in a hotel is important. Cheers!
பதிலளிநீக்குthree star hotels in nashik
best hotel near india bulls power plant
comfort standard suite
best party places
delicious gujarati thali near me
panchavati sinnar motel
veg hotels in nashik
affordable hotels in nashik
modern facillities hotels in nashik
Such an interesting and informative piece of guidance imparted by you. I am glad to discover this information here and I am sure that this might be beneficial for us.
பதிலளிநீக்குbanquets near me
Thank you for sharing your thoughts and knowledge on this topic. This is really helpful and informative, as this gave me more insight to create more ideas and solutions for my plan. I would love to see more updates from you.
பதிலளிநீக்குbest decorative rooms