name='description'/> தமிழ்ப் பணி மன்றம்: புதிய தமிழ்ச் சொல் (29) அளகை ( BANK)

வெள்ளி, டிசம்பர் 18, 2015

புதிய தமிழ்ச் சொல் (29) அளகை ( BANK)

புதுச்சொல் புனைவோம் !



BANK = அளகை

----------------------------------------------------------------------------------------------------

வங்கிக் கணக்கு இல்லாத மனிதனை, இப்போது காண்பது அரிது. நடுவணரசின் சில திட்டங்களால் வங்கிக் கணக்கு எண்ணிக்கையும் வங்கிகளின் செயல்பாடும் மிகுந்து விட்டன.

 

தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு வங்கிகள், நிலவள வங்கிகள், தனியார் வங்கிகள், நாட்டுடைமை வங்கிகள், அயல் நாட்டு வங்கிகள் என வங்கிகளின் வகையும் எண்ணிக்கையும் பல்கிப் பெருகிவிட்டன. 

 

பேங்க்என்ற ஆங்கிலச் சொல் தமிழில் எவ்வாறெல்லாம் மொழி பெயர்க்கப் பட்டது தெரியுமா ? முதலில் ”BANK ” என்பதை பேங்க்என்றனர். 

 


 

பின்பு அது பாங்குஆயிற்று. இப்போது வங்கிஎன வழங்கப்படுகிறது .(வங்கி என்றால் கோணல் என்று பொருள்) 

 

இவை எதுவுமே பேங்க்என்பதற்கு இணையான தமிழ்ச் சொல் அன்று. மூளை முடக்கம் பெற்றவர்களின் மொழி பெயர்ப்பு இவை !

 

வங்கியின் பணிகள் யாவை ? சுருங்கச் சொன்னால், பணத்தைப் பெறுதல், தருதல், அவ்வளவே ! 

 

ஆதாயம் ஈட்டும் எண்ணத்துடன் இது ஒரு தொழிலாகச் செய்யப் படுகிறது. எனவே இது ஒரு வணிகம் தான்! என்ன வகையான வணிகம்? பண வணிகம் !

 

பணவணிகம்என்ற அடிப்படையில், வங்கியின் பணிகள் விரிவு அடைகின்றன !  ”நகைக் கடன்”, “வீட்டு அடைமானக் கடன்” ,”நில அடைமானக் கடன்” - இப்படி நிறைய உள்ளன ! 

 

கடனுக்கு ஆதாயமாக வட்டி பெறுவதனால், வங்கி ஒரு வணிக நிறுவனம்ஆகிறது. சேவை நிறுவனம்அல்ல !

 

தமிழகத்தில் ஒரு காலத்தில் பணவணிகம்செய்வதில் செட்டியார்கள்முன்னணியில் இருந்தனர். 

 

இவர்களுக்கு அளகையர்என்று பெயர். அளகையர்என்றால், ”செட்டியார்”, ”பணவணிகர்என்று பொருள் உரைக்கிறது கழகத் தமிழ் அகராதி”.

 

முன்பு செட்டியார்கள் செய்து வந்த பண வணிகத் தொழிலைத்தானே இப்போது வங்கிகள் செய்து வருகின்றன. அப்படி இருக்கையில் வங்கியை அளகைஎன்று சொல்வது பொருத்தம் தானே !

 

வேறொரு செய்தியையும் இந்த இடத்தில் இணைத்துப் பாருங்கள்.நிதிக் கடவுளான குபேரனின் தலை நகரின் பெயர் அளகைஎனப்படும் அளகாபுரி ! 

 

நிதி புழங்கும் இடமான வங்கிக்கு நாம் சூட்டும் பெயரும் அளகை” !. என்ன பொருத்தம் பாருங்கள் !

 

எனவே நாம் இனிமேல் வங்கிஎன்னும் பொருத்தமற்ற சொல்லைத் துறப்போம் ! 

 

பொருள் ஆழமும், சுருங்கிய வடிவும், ஒலி நயமும் உடைய அளகைஎன்னும் சொல்லைப் புழக்கத்தில் கொண்டு வருவோம் ! 

 

அளகைஎன்னும் சொல்லின் அடிப்படையில் உருவாகும் பிற சொற்களையும் காண்போமா !

 

=========================================================

ஆக்கம் + இடுகை,

வை.வேதரெத்தினம்,

(veda70.vv@gmail.com)

ஆட்சியர்,

தமிழ்ப் பணி மன்றம்முகநூல்.

{18-12-2015}

=====================================================

 

8 கருத்துகள்:

  1. அளகை புதியதாகவும் சிறப்பாகவும் உள்ளது.

    வங்கி என்பது பொருத்தமான சொல் இல்லை என்பதை இன்று தான் தெரிந்துகொண்டேன்.

    நன்றி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது கருத்துரை எனது ஆர்வத்தை இன்னும் ஒளிபெறச் செய்யும் ! 31 சொற்கள் பற்றிய ஆய்வை வலைப் பூவில் வெளியிட்டுள்ளேன். அவற்றையும் காண்க ! கருத்துரை தருக !

      நீக்கு
    2. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

      நீக்கு
  2. கருத்தாழம் மிக்க சொல் ! பாராட்டுக்கள் !

    பதிலளிநீக்கு
  3. அருமையான சொல் தேர்வு !

    பதிலளிநீக்கு

உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன .