name='description'/> தமிழ்ப் பணி மன்றம்

செவ்வாய், டிசம்பர் 15, 2015

புதிய தமிழ்ச் சொல் (23) சிமிழி ( CHUCK )

புதுச்சொல் புனைவோம் !



சிமிழி = CHUCK.
----------------------------------------------------------------------------------------------------------

ஒரு வேடன் காட்டுக்குச் செல்கிறான். பறவைகளைப் பிடிக்கும் சிறுபொறியைக் கையில் வைத்திருக்கிறான். பறவைகள் மிகுதியாகத் தென்படும் ஒரு இடத்தில் அதை நிறுவிவிட்டுப் புதர் மறைவில் காத்திருக்கிறான் !

பறவைகள் வருகின்றன: பொறியில் சில மாட்டிக்கொள்கின்றன. சிக்கிய பறவைகளுடன் வீடு திரும்புகிறான் !

கூடாவொழுக்கம் என்னும் அதிகாரத்தில் திருவள்ளுவர் இந்த நிகழ்வை எடுத்தியம்புகிறார். எப்படி ? தவக் கோலத்தில் மறைந்து கொண்டு தவமல்லாத தீய செயல்களைச் சில பெரிய மனிதர்கள் செய்து கொண்டு இருக்கிறார்கள் !