நேர்மையான வாழ்வே அறவாழ்வு ஆகும் !
பதினெண் கீழ்க் கணக்கு என நமது முன்னோர்களால் வகைப்படுத்தப் பெற்றுள்ள நூல்களுள் ஒன்று நான்மணிக் கடிகை. கடைச் சங்க கால நூலான இதிலிருந்து ஒரு பாடல் !
---------------------------------------------------------------------------------------------------
பாடல் (08)
--------------------------------------------------------------------------------------------------
திருவொக்கும் தீதில் ஒழுக்கம்; பெரிய
அறனொக்கும் ஆற்றின் ஒழுகல்;
பிறனைக்
கொலையொக்குங் கொண்டுகண் மாறல்; புலையொக்கும்
போற்றாதார் முன்னர்ச் செலவு.
----------------------------------------------------------------------------------------------------
கருத்துரை:
----------------------
தீய எண்ணம் துளியும் கலவாத நல்லொழுக்கமானது கிடைத்தற்கரிய பெரிய செல்வத்துக்கு ஒப்பானது !
வாழ்க்கையில் நேர்மையுடன் முறையாக ஒழுகுதல் மிகச் சிறந்த அறத்துக்கு ஒப்பானதாகும் !
ஒரு மனிதனுடன் நட்புப் பூண்டு ஒழுகிவிட்டு, பிறகு
அதை மறந்து அவனைப் பற்றிப் புறங் கூறுதல் அவனைக் கொலை செய்வதற்கு ஒப்பாகும் !
அது போல், தம்மை மதியாதாரிடத்திற் சென்று அவரிடம் ஒன்றைக் கேட்டுக்
கெஞ்சுதல் என்பது
மிக மிக இழிய செயலுக்கு ஒப்பாகும்
!
----------------------------------------------------------------------------------------------------
சொற்பொருள்:
------------------------------
திரு ஒக்கும் = கிடைத்தற்கரிய செல்வத்திற்கு ஒப்பானது; ஆற்றின்
ஒழுகல் = வாழ்க்கையில் நேர்மையுடன் முறையாக ஒழுகுதல்; பிறனை = ஒரு
மனிதனை; கொலை ஒக்கும் = கொலை செய்வதற்கு ஒப்பாகும்; கொண்டு = நட்புக்
கொண்டு ; கண் மாறல் = பின்பு நட்பை மறந்து
புறங்கூறல்; புலை ஒக்கும் = மிக
மிக இழிந்த செயலுக்கு ஒப்பாகும்;
போற்றாதார் = நம்மை மதியாதார் ; முன்னர்ச்
செலவு = முன்பாகச் சென்று உதவி கேட்டுக் கெஞ்சுதல்.
----------------------------------------------------------------------------------------------------
கருத்துச் சுருக்கம்:
----------------------------------
நல்லொழுக்கம் செல்வம் போன்றது; முறையான இல்லற ஒழுக்கம் துறவறத்தைப் போன்றது; பிறரைப் புறங்கூறல் அவரைக் கொலை செய்வதற்கு ஒப்பானது; தம்மை மதியாரை தாம் மதித்தல் இழிதகைமை ஆகும் !
------------------------------------------------------------------------------------------------------
ஆக்கம் + இடுகை;
வை.வேதரெத்தினம்,
ஆட்சியர்,
தமிழ்ப்
பணி மன்றம்.
[தி.ஆ:2052,கும்பம் (மாசி),07]
{19-02-2021}
------------------------------------------------------------------------------------------------------