name='description'/> தமிழ்ப் பணி மன்றம்

செவ்வாய், செப்டம்பர் 22, 2020

புதிய தமிழ்ச் சொல் (57) கட்டளை ( REMOTE )

புதுச்சொல் புனைவோம் !


கட்டளை - REMOTE
-------------------------------------------------------------------------------------------------------------

தமிழில் “கட்டளை” என்று ஒரு சொல் உண்டு ! “பெருமைக்கும் ஏனைச் சிறுமைக்கும் தத்தம் கருமமே கட்டளைக் கல்” என்கிறார் திருவள்ளுவர்ஒரு மனிதன்  நல்லவனா அல்லது  கெட்டவனா  என்பதை அறிவதற்கு உதவும் உரைகல்லாக (கட்டளைக் கல்அமைவது அவனது செயல்களே என்பது இக்குறளின் கருத்து !

 

தங்கத்தின் தரத்தை அறிவதற்கு, அதை ஒரு கல்லில் உரசிப் பார்க்கிறோமே அந்தக் கல்லின் பெயர் தான்கட்டளைக் கல்.பொன் காண் கட்டளை கடுப்ப என்பது பெரும்பாணாற்றுப் படை (பாடல் வரி.220) !


கட்டளைஎன்பது  கட்டுஎன்னும் பகுதியிலிருந்து பிறந்த சொல்.
கட்டு = மிகுதி; அளை = வருடல்; கட்டளைக் கல் = மிகுதியாக வருடிஅதாவது பொன்னை மிகுதியாக வருடித் துகளாக்கிக் காட்டும் கல் !

கட்டளைஎன்பதற்கு உத்தரவு”, ”உரைகல்”, ”முறைமை”, ”விதி,” ”கட்டுப்பாடுஎனப் பல பொருள்கள் உள்ளன !

கட்டளை இடுதல்என்றால்  ஆணையிடுதல்”, ”கட்டுப்படுத்தல்”, “அடக்குதல்என்று பொருள் !

கட்டளைத் தம்பிரான் = சைவ மடத்தைச் சார்ந்த கோயில்களை மேற்பார்த்து நெறிப் படுத்தும் சைவத் துறவி !

அறக்கட்டளை = அறச் செயல்களை மேற்கொள்வதற்காக நிறுவப்படும் அமைப்பு !

இந்த விளக்கங்களிலிருந்து உங்களுக்கு ஒன்று தெளிவாகும். அதாவதுகட்டளைஎன்பதற்குக்கட்டுப் படுத்தும்அல்லதுகட்டளை இடுகின்ற ஒரு அமைப்பு அல்லது ஒரு கருவி என்று பொருள் !

ஒரு கருவி இன்னொரு கருவியின்இயக்கத்தைக் கட்டுப்படுத்தும்தன்மை உள்ளது என்றால் அந்தக் கருவியைக்கட்டளைஎன்று சொல்வதில் தவறில்லை ! பொன் உரைத்துப் பார்க்கும்  கல்லைக்கட்டளைஎன்று சொல்வது போல, ஒரு இயக்கத்தைக் கட்டுப்படுத்தும் கருவியையும்கட்டளைஎன்று சொல்வதில் பிழை இருக்க முடியாதன்றோ ?

வேறு வகையில் சொல்லப்போனால், ஒரு கருவி இன்னொரு கருவியைதனது உத்தரவுப் படி இயங்குகஎன்று கட்டளை இடும் தன்மை உடையது என்றால் அந்தக் கருவியைக்  கட்டளைஎன்று சொல்வது தவறாகாது  !

கட்டளைக் கருவிஎன்று சொல்லலாமே, “கட்டளைஎன்று ஏன் சுருக்கமாகச் சொல்ல வேண்டும் என்று சிலருக்கு ஐயம் வரக்கூடும் !

வற்றல் குழம்பு  என்று சொல்கிறோம். இங்குவற்றல்என்பது இலக்கணப்படித் தொழிற் பெயர் ஆகும்.   வற்றல்”, என்னும் தொழிற் பெயர் நீர் வற்றிக் காய்ந்துபோன (சுண்டை, மணித்தக்காளி, கத்தரி போன்ற) காய்களுக்கு ஆகி வந்துள்ளமையால், “வற்றல்என்பது தொழிலாகுபெயர் என்னும் இலக்கணத்தின் படி அமைகிறது !

சீறூர்களில் கிணற்றிலிருந்து பாசனத்திற்கு நீர் இறைக்கும் ஏற்றங்களைப் பார்த்திருப்பீர்கள்.  ஏற்றம்என்பது இலக்கணப்படித் தொழிற் பெயர். இத்தொழிற் பெயரானது  (நீர்) ஏற்றுதலைச் செய்யும் கருவிக்கு ஆகி வந்து, அந்தக் கருவிக்குஏற்றம்என்னும் பெயரைத்  தந்துள்ளது. இலக்கணப்படி இது தொழிலாகு பெயர் எனப்படும் !

அதுபோன்றே, ”கட்டளைஎன்னும் தொழிற்பெயர், கட்டளை இடும் கருவிக்கு ஆகி வருவதால், கட்டளைஎன்னும் சொல் தொழிலாகுபெயர் ஆகிறது ! “கட்டளைக் கருவிஎன்று நீட்டிச் சொல்ல வேண்டியதில்லை. “கட்டளைஎன்று சுருக்கமாகச் சொல்லுதல் சாலும் !

தொலைக்காட்சிப் பேழையின் இயக்கத்தைக் கட்டுப்படுத்தி, அதற்குக் கட்டளை இடும் தன்மை உடைய கருவியானரிமோட்” (REMOTE) என்னும் கருவியை இனி , “கட்டளை என்று அழைப்போமே !

கட்டளை என்னும் சொல்லுக்குத் தமிழில் அளவு, உத்தரவு, உருவங்கள் வார்க்கும் கருவி, உரைகல், உவமை, ஒழுங்கு, கற்பனை, செங்கல் அறுக்கும் கருவி, முறை, முறைமை, கட்டுப்பாடு,  என்று பல  பொருள்கள் இருக்கையில்ரிமோட்” (REMOTE) என்னும் கருவியையும்கட்டளைஎன்று சொன்னால் குழப்பம் வராதா, என்று சிலர் கேட்கக் கூடும் !

ஆங்கிலத்தில் ஒரு சொல்லுக்கு ஒரு பொருள் மட்டுமா இருக்கிறது. FLY என்னும் ஒரு சொல்லுக்குபற”. “”, “ஓடு”, எனப் பல பொருள்கள் இல்லையா ? RUN என்ற ஒருசொல்லுக்குஓடு”, “இயக்கு”, ”இயங்கு”,  ஓட்டம் (கிரிக்கெட்)” என்று பல பொருள்கள் இல்லையா ? அதுபோல் தமிழிலும் ஒரு சொல்லுக்குப் பல பொருள்கள் இருப்பதில் தவறில்லை !

ரிமோட்” (REMOTE) என்பது  REMOTE CONTROL என்னும் இரு சொற்களின் குறுக்கம்.. தொலைவில் இருந்து இயக்குவது என்று பொருள். “கட்டளைஎன்னும் சொல்லில்  தொலைவில் இருந்து இயக்குதல்என்னும் பொருள் வரவில்லையே என்று சிலர் கேட்கக் கூடும் !

ரிமோட்” (REMOTE) கருவியைக் கொண்டு தொலைகாட்சிப் பேழையைத் தொலைவில் இருந்து மட்டும் தான் இயக்க வேண்டுமா ; அருகில் இருந்து இயக்கினால் தொலைக்காட்சிப் பேழை இயங்காதா ? அப்புறம் எதற்குதொலைவுஎன்னும் தொடுப்பு ?

தமிழர்களில் ஒரு சிலருக்கு  எதிர்மறைக் குணம் உண்டு. தானும் எதையும் செய்ய மாட்டார்கள்; செய்பவர்களையும் விடமாட்டார்கள். ஏதாவது குறை சொல்லிக் கொண்டே இருப்பார்கள். அப்படிப்பட்ட சிலர்கட்டளைஎன்னும் சொல்லையும் ஏற்கமாட்டார்கள். அவர்களும் ஒரு பொருத்தமான சொல்லை உருவாக்கி அறிமுகப் படுத்த மாட்டார்கள் !

ரிமோட்என்பதை இப்போதுதொலையியக்கிஎன்று சொல்லி வருகிறோம். அப்படி இருக்கையில் இன்னொரு புதிய சொல் தேவையா என்போரும் இருக்கிறார்கள். வடிவில் சிறுமையும், ஒலிப்பில் நயமையும் உடைய சொற்களே என்றென்றும் நிலைத்து வாழும். “தொலையியக்கிஎன்பதை விடக்கட்டளைவடிவில் சிறியதாகவும்  ஒலிப்பில் நயமும் உடையதாகவும் இருக்கிறது அல்லவா ? அப்புறம் அதைப் பயன்படுத்தத் தயங்கலாமோ ?

இன்னும் எத்துணை காலத்திற்குத் தான்ரிமோட்என்றே சொல்லிக் கொண்டிருப்பது ? எனவே “REMOTE” என்னும் ஆங்கிலச் சொல்லைக் கைவிட்டு, “கட்டளைஎன்னும் தமிழ்ச் சொல்லைத் தமிழர்கள் புழக்கத்தில் கொண்டு வருவார்களாக !

-------------------------------------------------------------------------------------------------------------
 ஆக்கம் + இடுகை:
வை.வேதரெத்தினம்,
(veda70.vv@gmail.com)
ஆட்சியர்,
தமிழ்ப் பணி மன்றம்.
தி.பி: 2051, மடங்கல் (ஆவணி),08]
{24-08-2020}
-------------------------------------------------------------------------------------------------------------
                 தமிழ்ப் பணி மன்றம் முகநூற் குழுவில் வெளியிடப் பெற்ற கட்டுரை !
-------------------------------------------------------------------------------------------------------------

கட்டளை