கொத்து (01) மலர் (045)
------------------------------------------------------------------------------------------------------------------------------------
நாகைக்கு இடமாற்றலாகிச் செல்லும்
இளநிலை உதவியாளர் திரு. இராசாமணிக்கு
அளித்த தேனீர் விருந்தின்
போது
நான் ஆற்றிய உரை !
(ஆண்டு 1971)
-------------------------------------------------------------------------------------------------------------
அனைவர்க்கும் வணக்கமென் அன்பார்ந்த நன்றி !
அமுதான தமிழேநீ அருள்தந்து வாழ்த்து !
பசும்புல் நுனிவாழும் பனித்துளியாய் சிலகாலம்
பழகியின்று எமைவிட்டுப் பறந்துசெலும் நன்னண்ப !
விசும்பின் துளிவீழ்ந்த வெண்மணலாய் நெஞ்சமதில்
வேதனையைத் தூவியின்று விரைந்துசெலும் என்னன்ப !
கரும்பின் சுவைபோலக் கற்கண்டாய் நீர்பழகிக்
கனிவோடு என்னுடைய கருத்தொத்த துணையானீர் !
இரும்பின் மனவலியும் இணையில்லாச் செயல்திறனும்
இணைந்திங்கு சிலதிங்கள் எம்முடனே பணிபுரிந்தீர் !
விரும்பிப் பிரிவோலை வேண்டியின்று நாகைக்கு
விரைகின்றீர் எமக்கதுவோர் விளம்பரிய பேரிழப்பு !
நரம்பின் துணைநாடி ஒலிகூட்டும் வீணையென
நானிலங்க நீராயின் நாகைதனை நாடுகிறீர் !
இல்லத்தார் நலங்கருதி ஏகுகின்ற காரணத்தால் ,
இன்முகமாய் வாழ்த்திவிடை கூறுகிறோம் ! போய்வருக !
முல்லைத்தார் சூடிமண வாட்டிதனை ஏற்குமடல் ,
முத்திங்கள் நிறையும்முன் முறையாகத் தந்திடுக !
தொல்லைசூழ் கணக்காயத் தேர்வெழுதி நன்னிலையில்
தேர்வதுடன் மேற்பதவி ஏற்குநிலை வரவேண்டும் !
செல்வங்கள் யாவையுமே செறிந்தோங்க வாழ்வுதனில் ,
செம்மையுற வாழ்த்துகிறோம் ! வாழியநீர் ! வாழியவே !
வணக்கம் !
---------------------------------------------------------------------------------------------
ஆக்கம் + இடுகை,
வை.வேதரெத்தினம்,
[veda70.vv@gmail.com]
ஆட்சியர்,
தமிழ்ப் பணி மன்றம் முகநூல்.
--------------------------------------------------------------------------------------------------------