புதுச்சொல்புனைவோம் !
LABORATORY = ஆயில்
----------------------------------------------------------------------------------------------
பள்ளிகளில் பாடம்
தொடர்பான சில சோதனைகளைச் செய்து பார்க்க சோதனைக் கூடங்கள் இருப்பதை அறிவீர்கள்.
அதுபோன்றே கல்லூரிகளிலும் சோதனைக் கூடங்கள் உள்ளன.
அரத்தம் (BLOOD) முதலியவற்றைப்
பகுப்பாய்வு செய்திட CLINICAL LAB, நகர்ப் புறத்தில் பல இடங்களில் இருக்கின்றன. இது போன்றே பல
துறைகளிலும் பரிசோதனைச் சாலைகள் இயங்கி வருவதை அறிவீர்கள்.
LABORATORY என்ற சொல் சுருங்கி ”LAB” ஆகிவிட்டது. பத்து
எழுத்துச் சொல்லை மூன்று எழுத்துச் சொல்லாக்கிப் பயன்படுத்துகிறோம் ஆங்கிலத்தில்.
சுருங்கிய வடிவம் தான் எழுதுவதற்கும், தட்டச்சு செய்வதற்கும் எளிதாக இருப்பதால், ஆங்கிலத்தில் பல சொற்கள்
சுருங்கிய வடிவைப் பெற்று விட்டன.
தமிழில் LAB என்பதை “பரிசோதனைக் கூடம்” என்று நீட்டி முழக்கி
எழுதி வந்தோம். பின்பு இந்தச் சொல் ”சோதனைக் கூடம்” ஆயிற்று. அண்மைக் காலமாக “ஆய்வகம்” என்ற ஐந்தெழுத்துச் சொல் சிலரால் பயன்படுத்தப் படுகிறது.
“ஆய்வகம்” சிறப்பான சொல்லே ! “ஆய்வகம்” என்ற ஐந்தெழுத்துச்
சொல்லுக்குப் பதிலாக “ஆயில்” என்ற மூன்றெழுத்துச் சொல் விரைவாக எழுதுவதற்கும், தட்டச்சு செய்வதற்கும்
உதவியாக இருக்கும். “இல்” என்ற சொல்லுக்கு இடம், வீடு, மனை என்றெல்லாம் பொருளுண்டு. ஆய்(வு) + இல் = ஆயில் !
ஆய்வு செய்யும் இடம் “ஆயில்”. இதில் கருத்துப் பிழை
ஏதுமில்லை. எனவே “ஆய்வகம்” என்ற சொல் அல்லாமல், இனி “ஆயில்” என்ற சொல்லையும் புழக்கத்தில் கொண்டு வருவோமே !
“ஆயில்” என்னும் சொல்லின்
அடிப்படையில் உருவாகும் பிற சொற்களையும் காண்போமா ?
=========================================================
LABORATORY...........................=
ஆயில்
LAB.............................................=
ஆயில்
CLINICAL
LAB...........................= மருத்துவ ஆயில்
CHEMICAL
LAB.........................= வேதியியல் ஆயில்
SCHOOL
LAB............................= பள்ளி ஆயில்
COLLEGE
LAB..........................= கல்லூரிஆயில்
LAB
ASSISTANT........................= ஆயில் உதவியர்
LAB
ATTENDANT......................= ஆயில் பணியர்
LAB
TECHNICIAN.....................= ஆயில் வலவர்
.....................................................=
(வல்லவர் = வலவர்)
ANALYSIS..................................=
பகுப்பாய்வு
ANALYTICAL
LAB.....................= பகுப்பாயில்
========================================================
ஆக்கம் + இடுகை,
வை.வேதரெத்தினம்,
(veda70.vv@gmail.com)
ஆட்சியர்,
“தமிழ்ப் பணி மன்றம்” முகநூல்.
========================================================