name='description'/> தமிழ்ப் பணி மன்றம்

திங்கள், மே 03, 2021

நன்னூல் விதிகள் (12) உயிரீற்றுப் புணரியல் - உகரம் (குற்றுகரம்) முன் வல்லினம் புணரல் (நூற்பா.181,182.183)

 

                              உயிரீற்றுச் சிறப்புப் புணர்ச்சி                     

 

                               குற்றுகரஈற்றுச் சிறப்பு விதி

 

நூற்பா.181. ( அல்வழியில்குற்றுகரம் முன் வலி மிகா.)

 

வன்றொடர் அல்லனமுன் மிகா அல்வழி (நூற்பா.181)

 

{வன்றொடர் தவிர்த்து}  நெடில் தொடர், ஆய்தத் தொடர், உயிர்த் தொடர், மென்றொடர், இடைத்தொடர் ஆகிய ஐந்து பிற தொடர்களில்  வரும் குற்றியல்கர ஈற்றின் முன் வரும் வல்லினம் , அல்வழியில் மிகா. (பக்.146)

 

அல்வழியில் நெடில் தொடர் குற்றியலுகரம் முன் வரும் வலி மிகா) (பக்.146) (நூற்பா.181)

 

நாகு + கடிது = நாகு கடிது

ஆறு + தலை = ஆறு தலை

மாறு + படை = பாறு படை.

(அல்வழியில் நெடிற்றொடர் குற்றியலுகரம் முன் வலி இயல்பாயது) (பக்.146)

 

அல்வழியில்  ஆய்தத்  தொடர் குற்றியலுகரம் முன் வரும் வலி மிகா) (பக்.146) ) (நூற்பா.181)

 

அஃகு + சிறிது = எஃகு சிறிது

அஃகு + பிணி = அஃகு பிணி

(அல்வழியில் ஆய்தத் தொடர் குற்றியலுகரம் முன் வலி இயல்பாயது) (பக்.146)

 

அல்வழியில்  உயிர்த்  தொடர் குற்றியலுகரம் முன் வரும் வலி மிகா) (பக்.147) (நூற்பா.181)

 

வரகு + சிறிது = வரகு சிறிது

பொருது + சென்றான் = பொருது சென்றான்

(அல்வழியில் உயிர்த் தொடர் குற்றியலுகரம் முன் வலி இயல்பாயது) (பக்.147)

 

அல்வழியில்  மென்  தொடர் குற்றியலுகரம் முன் வரும் வலி மிகா) (பக்.147) (நூற்பா.181)

 

வந்து + சென்றான் = வந்து சென்றான்

கண்டு + கொண்டான் = கண்டு கொண்டான்

(அல்வழியில் மென்றொடர்க் குற்றியலுகரம் முன் வலி  இயல்பாயது (பக்.147)

 

அல்வழியில்  இடைத் தொடர் குற்றியலுகரம் முன் வரும் வலி மிகா) (பக்.147) (நூற்பா.181)

 

எய்து + கொன்றான் = எய்து கொன்றான்.

செய்து + தந்தான் = செய்து தந்தான்.

(அல்வழியில் இடைத் தொடர்க் குற்றியலுகரம் முன் வலி  இயல்பாயது (பக்.147)

 

ஏழாம் வேற்றுமை இடப் பொருள் உணர்த்தும் அங்கு, இங்கு, உங்கு, எங்கு, ஆங்கு, ஈங்கு, ஊங்கு, யாங்கு, யாண்டு  என்னும் மென்றொடர்க் குற்றியலுகர ஈற்று இடைச் சொற்களின் முன் வரும் வல்லினம் மிகும் (பக்.147) (நூற்பா.181)

 

அங்கு + கொண்டான் = அங்குக் கொண்டான்.(பக்.147) (நூற்பா.181)

இங்கு + காண்பான் = இங்குக் காண்பான். .(பக்.147)

உங்கு + போவான் = உங்கு போவான் .(பக்.147)

எங்கு + போன்னான் = எங்குப் போனான் (பக்.147)

ஆங்கு + சென்றான் = ஆங்குச் சென்றான். .(பக்.147)

ஈங்கு + பார்த்தான் = ஈங்குப் பார்த்தான். .(பக்.147)

ஊங்கு + தேஎடினான் = ஊங்குத் தேடினான். .(பக்.147)

யாங்கு + சென்றான் = யாங்குச் சென்றான். .(பக்.147)

யாண்டு = போனான் = யாண்டுப் போனான். .(பக்.147)

 

ஏழாம் வேற்றுமை காலப் பொருள் உணர்த்தும் அன்று, இன்று, என்று, பண்டு, முந்து , என்னும் மென்றொடர்க் குற்றியலுகர ஈற்று இடைச் சொற்களின் முன் வரும் வல்லினம் இயல்பாகும் (பக்.147) (நூற்பா.181)

 

அன்று + கண்டான் = அன்று கண்டான் (பக்.147) (நூற்பா.181)

இன்று + சென்றான் = இன்று சென்றான். .(பக்.147)

என்று + தந்தான் = என்று தந்தான். .(பக்.147)

பண்டு + பெற்றான் = பண்டு பெற்றான். .(பக்.147)

முந்து + கொண்டான் = முந்து கொண்டான். .(பக்.147)

 

                           உயிரீற்றுச் சிறப்புப் புணர்ச்சி                     

 

                               குற்றுகரஈற்றுச் சிறப்பு விதி 

 

நூற்பா.182. ( சில தொடர்களில் வேற்றுமையில் வலி மிகா)

 

இடைத்தொடர், ஆய்தத் தொடர், ஒற்று இடையின்

மிகாநெடில் உயிர்த்தொடர் முன் மிகா வேற்றுமை. (நூற்பா.182)

 

இடைத் தொடர்க்  குற்றியலுகரத்தின் முன் வேற்றுமையில் வரும் வலி இயல்பாகும் (பக்.147) (நூற்பா.182)

 

தெள்கு + கால் = தெள்கு கால் (தெள்கு = ஒருவகைப்பூச்சி)

தெள்கு + சிறை = தெள்கு சிறை (பக்.147)

தெள்கு + தலை = தெள்கு தலை (பக்.147)

(இடைத் தொடர்க் குற்றியலுகரத்தின் முன் வேற்றுமையில் வலி இயல்பாயது)

 

ஆய்தத்  தொடர்க்  குற்றியலுகரத்தின் முன் வேற்றுமையில் வரும் வலி இயல்பாகும் (பக்.148) (நூற்பா.182)

 

எஃகு + கடுமை = எஃகு கடுமை (.148)

எஃகு + சிறுமை = எஃகு சிறுமை (.148)

எஃகு + தீமை = எஃகு தீமை (.148)

எஃகு + பெருமை = எஃகு பெருமை. (.148)

 

ஒற்று இடையே மிகாத  நெடில்   தொடர்க்  குற்றியலுகரத்தின் முன் வேற்றுமையில் வரும் வலி இயல்பாகும் (பக்.148) (நூற்பா.182)

 

நாகு + கால் = நாகு கால் (பக்.148)

நாகு + செவி = நாகு செவி(பக்.148)

பாகு + கொடு = பாகு கொடு(பக்.148)

பாகு + செய் = பாகு செய். (பக்.148)

 

ஒற்று இடையே மிகாத  உயிர்த்   தொடர்க்  குற்றியலுகரத்தின் முன் வேற்றுமையில் வரும் வலி இயல்பாகும் (பக்.148) (நூற்பா.182)

 

வரகு + கதிர் = வரகு கதிர். (பக்.148)

நாகு + செவி = நாகு செவி. (பக்.148)

நாகு + தலை = நாகு தலை(பக்.148)

நாகு + புறம் = நாகு புறம். (பக்.148)

 

 

 

                            உயிரீற்றுச் சிறப்புப் புணர்ச்சி                     

 

                               குற்றுகரஈற்றுச் சிறப்பு விதி  

 

நூற்பா.183. ( சில தொடர்களில் வேற்றுமையில் ஒற்று இரட்டல்)

 

நெடிலோடு  உயிர்த் தொடர்க்  குற்றுகரங்களுள்

”, “ ஒற்று இரட்டும்  வேற்றுமை மிகவே. (நூற்பா.183)

 

நெடில் தொடர் குற்றுகர மொழியின் முன் வலி வந்தால் வேற்றுமைப் புணர்ச்சியில் பெரும்பாலும் இரட்டும் (பக்.148) (நூற்பா.183)

 

ஆடு + கால் = ஆட்டுக்கால்(நூற்பா.183)

சோறு + ளம் = சோற்று வளம்

ஆறு + ணி = ஆற்றணி       

வீடு + நிலம் = வீட்டு நிலம்

 

(நெடில் தொடர் குற்றுகரம் முன் நாற்கணமும் வர வேற்றுமையில்கர, “கர ஒற்று இரட்டியது) (பக்.148)

 

நெடில் தொடர் குற்றுகர மொழியின் முன் வலி வந்தால் வேற்றுமைப் புணர்ச்சியில் சிறுபான்மை இரட்டா. (பக்.148) (நூற்பா.183)

 

நாடு + கிழவோன் = நாடு கிழவோன் (பக்.149) (நூற்பா.183)

காடு + அகம் = காடகம் (பக்.149)

 

(நெடில் தொடர் குற்றுகரம் முன் வலியும் உயிரும் வர வேற்றுமையில்கர, “ ஒற்று இரட்டவில்லை) (பக்.148)

 

(உயிர்த்  தொடர் குற்றுகரம் முன் நாற்கணமும் வர வேற்றுமையில் கர, “கர ஒற்று இரட்டும்) (பக்.148) (நூற்பா.183)

 

முருடு + கால் = முருட்டுக்கால் (பக்.149) (நூற்பா.183)

பயறு + நிறம் + பயற்று நிறம். (பக்.149)

வயிறு + வலி = வயிற்று வலி. (பக்.149)

குவடு +அடி = குவட்டடி. (பக்.149)

 

(உயிர்த் தொடர்க் குற்றுகரம் முன் நாற்கணமும் வர வேற்றுமையில் ஒற்று இரட்டியது.)

 

(உயிர்த்  தொடர் குற்றுகரம் முன் நாற்கணமும் வர அல்வழியில் கர,  ஒற்று இரட்டும்) (பக்.149) (நூற்பா.183)

 

காடு + அரண் = காட்டரண் (பக்.149) (நூற்பா.183)

குருடு + கோழி = குருட்டுக்கோழி. (பக்.149)

(உயிர்த் தொடர்க் குற்றுகரம் முன் வல்லினம்  வர அல்வழியில் ஒற்று இரட்டியது.)


-------------------------------------------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை,


வை.வேதரெத்தினம்,

[veda70.vv@gmail.com]

ஆட்சியர்,

தமிழ்ப் பணி மன்றம் முகநூல்.

-------------------------------------------------------------------------------------------------------------