name='description'/> தமிழ்ப் பணி மன்றம்

சனி, மே 01, 2021

நன்னூல் விதிகள் (02) உயிரீற்றுப் புணரியல் - உயிர் முன் உயிர் புணர்தல் (நூற்பா.162)

 

                          உயிரீற்றுச் சிறப்புப் புணர்ச்சி.

 

                             (உயிர் முன் உயிர் புணர்தல்)

நூற்பா.162. (உயிர் முன் உயிர் புணர்தல்)

 

 

’, ’’, ‘வழிவ்வும்ம ஏனை

உயிர் வழிவ்வும்முன் இவ்விருமையும்

உயிர் வரின் உடம்படு மெய்யென்று ஆகும். (நூற்பா.162)

 

உடம்படு மெய்யாகயகரம்தோன்றல்     (நூற்பா.162)

 

நிலைமொழி ஈற்றில்இகர’, ‘ஈகார’, ‘ஐகாரங்கள் நின்று வருமொழி முதலில்உயிரெழுத்து  வந்தால்இரண்டு சொற்களையும் இணைக்க இடையில்யகரம்உடம்படு மெய்யாக வரும். (பக்.129) (நூற்பா.162)

 

மணி + அழகிது = மணியழகிது.(பக்.130) (நூற்பா.162)

தீ + அழகிது = தீயழகிது (பக்.130)

மலை + அழகிது = மலையழகிது. (பக்.130)

(அல்வழியில், , ஐ முன்யகரம்உடம்படு மெய்யாக வந்தது)(பக்.130)

 

மணி = அழகு = மணியழகு (பக்.130) (நூற்பா.162)

தீ + அழகு = தீயழகு (பக்.130)

மலை + அழகு = மலையழகு (பக்.130)

 

(வேற்றுமையில் இ, , ஐ முன்யகரம்உடம்படு பெய்யாக  வந்தது) (பக்.130)

 

உடம்படு மெய்யாகவகரம்தோன்றல் (நூற்பா.162)

 

நிலைமொழி ஈற்றில்  , , ஐ தவிர்த்து ஏனைய உயிர்களின் முன்          ( , , , , , , ஆகிய )உயிரெழுத்துகள் நின்று  வருமொழி முதலில்  உயிரெழுத்து வந்தால், இரு சொற்களையும் இணைக்க இடையில்வகரம்உடம்படு மெய்யாகத் தோன்றும் (பக்.129)

 

விள + அழகு = விளவழகு (பக்.130) (நூற்பா.162)

வந்த + இருளன் = வந்தவிருளன் (பக்.130)

காணா + உறவு = காணாவுறவு.

கடு + அடி = கடுவடி

பூ + ஆடு = பூவாடு

நொ + அழகு = நொவ்வழகு.

கௌ + அடி = கௌவடி

 

உடம்படு மெய்யாக யகரம்அல்லது வகரம்தோன்றல் (நூற்பா.162)

 

நிலைமொழி ஈற்றில்காரம்வந்து வருமொழி முதலில் உயிரெழுத்து வந்தால், இடையில்யகரம்அல்லதுவகரம் உடம்படு மெய்யாகத் தோன்றும் (பக்.129)

 

அவனே + அழகன் = அவனேயழகன்(நூற்பா.162)

(இடைச்சொல்லாகியமுன்யகரம்வந்தது.)(பக்.130)

 

+ எலாம் = ஏவெலாம் (நூற்பா.162)

(ஓரெழுத்து ஒருமொழியாகியமுன்யகரம்வந்தது (பக்.130)

 

சே + அடி = சேயடி, சேவடி. (நூற்பா.162)

(’சே முன்யகரமும்’, ‘வகரமும்வந்தன.


-----------------------------------------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை,


வை.வேதரெத்தினம்,

[veda70.vv@gmail.com]

ஆட்சியர்,

தமிழ்ப் பணி மன்றம் முகநூல்

------------------------------------------------------------------------------------------------------------