உயிரீற்றுச்
சிறப்புப் புணர்ச்சி
“ஆ”கார ஈற்றுச் சிறப்பு
விதி.
நூற்பா.171. (ஆகார ஈற்றுச் சிறப்பு விதி.)
அல்வழி ‘ஆ”, “மா’ “மியா’, முற்று முன் மிகா. (நூற்பா.171)
”ஆ-பசு”, ”மா-விலங்கு” ஆகிய இரு பெயர்களின் முன் வரும் வல்லினம் இயல்பாகும் (பக்.138) (நூற்பா.171)
ஆ + குறிது
= ஆ குறிது. (பக்.139)
ஆ + சென்றது
= ஆ சென்றது.
மா + குறிது
= மா குறிது. (பக்.139)
மா + துள்ளும்
= மா துள்ளும்
(அல்வழியில் “ஆ”, “மா” முன்
வலி இயல்பாயிற்று)
”மியா” என்னும் முன்னிலை இடைச்சொல் முன் வரும் வல்லினம் இயல்பாகும் (பக்.139) (நூற்பா.171)
கேண்மியா + கொற்றா
= கேண்மியா கொற்றா.(பக்.139)
கேண்மியா + சாத்தா
= கேண்மியா சாத்தா. (பக்.139)
(”மியா” என்னும்
முன்னிலையசை முன் வலி இயல்பாயிற்று)
ஆகார ஈற்று அஃறிணை பன்மை எதிர்மறை வினை முற்றின் முன்
வரும் வல்லினம் இயல்பாகும் (பக்.139) (நூற்பா.171)
உண்ணா + குதிரைகள் = உண்ணா
குதிரைகள்.
உண்ணா + செந்நாய்கள் = உண்ணா செந்நாய்கள்
(ஆகார
ஈற்று அஃறிணை பன்மை எதிர்மறை வினை முற்றின் முன் வலி இயல்பாயிற்று)
உண்ணா + குதிரைகள் = உண்ணாக் குதிரைகள்
( இதை
எதிர்மறைப் பெயரெச்சமெனக் கொண்டால், பொது
விதிப்படி வலி மிகும்) (நூற்பா.171)
------------------------------------------------------------------------------------------
ஆக்கம் + இடுகை,
[veda70.vv@gmail.com]
ஆட்சியர்,
தமிழ்ப் பணி மன்றம் முகநூல்.
--------------------------------------------------------------------------------------------------------